தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் கிளார்க் பணிவாய்ப்பு
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

03 டிச
2012
00:00

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி நம் அனைவராலும் டி.எம்.பி., என்ற பெயரால் அறியப்படுகிறது. தனியார் துறையைச் சார்ந்த இந்த வங்கி ஒரு ஷெட்யூல்டு வங்கியாகும். 1921ல் நிறுவப்பட்ட இந்த வங்கி எல்லைகளைத் தாண்டி இந்தியா முழுவதும் கிளைகளுடன் சிறப்புற செயல்பட்டு வருகிறது. முற்றிலும் நவீனமயமாக்கப்பட்ட சேவைகள், நாடு தழுவிய கிளைகள், மிகச் சிறந்த வாடிக்கையாளர் சேவை போன்றவற்றிற்காக இந்த வங்கி அனைவராலும் போற்றப்படுகிறது. சிறந்த தனியார்துறை வங்கிக்கான விருதையும் இந்த வங்கி பெற்றது குறிப்பிடத்தக்கது. இவ்வளவு பிரசித்தி பெற்ற தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் உள்ள கிளரிகல் பணி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வந்துள்ளது.

தேவைகள்:


டி.எம்.பி.,யின் கிளரிக்கல் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 30.09.2012 அடிப்படையில், பட்டதாரிகளாக இருந்தால் அதிகபட்சம் 24 வயதுக்கு உட்பட்டவராகவும், முது நிலை பட்டதாரிகளாக இருந்தால் 26 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். இந்தப் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் இன்ஜினியரிங் சாராத பட்டப் படிப்பு முடித்தவராக இருந்தால் குறைந்த பட்சம் 50 சதவிகித மதிப்பெண்களுடனும், இன்ஜினியரிங் பிரிவில் பட்டம் முடித்தவராக இருந்தால் குறைந்த பட்சம் 55 சதவிகித மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எந்தப் பிரிவில் பட்டம் முடித்திருந்தாலும் கம்ப்யூட்டர் தொடர்புடைய திறன் கட்டாயம் தேவைப்படும். அஞ்சல் வழியாகவோ, திறந்த நிலைப் பல்கலைக் கழகம் வாயிலாகவோ பட்டம் முடித்தவர்கள் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க முடியாது.

மற்றவை:


தமிழ் நாடு மெர்கெண்டைல் வங்கியின் கிளரிக்கல் பதவிக்கு விண்ணப்பிக்க ரூ.300/-க்கான டி.டி.,யை Tamilnad Mercantile Bank Ltd., என்ற பெயரில் தூத்துக்குடி அல்லது திருநெல்வேலியில் மாற்றத்தக்கதாக எடுக்க வேண்டும். இந்தப் பதவிக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் என்ற அடிப்படையில் தேர்ச்சி இருக்கும் என்று தெரிகிறது. அப்ஜெக்டிவ் வகையிலான எழுத்துத் தேர்வை சென்னை, மதுரை, சேலம், திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மையங்கள் ஏதாவது ஒன்றில் எதிர்கொள்ளலாம். இந்தப் பதவிக்கு ஆன்-லைன் முறையிலேயே விண்ணப்பங்களைப் பதிவு செய்ய வேண்டும். ஆன்-லைனில் விண்ணப்பித்த 5 நாட்களில் விண்ணப்பக் கட்டணத்துடன் விண்ணப்பத்தை இணைத்து பின்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முதலில் பின்வரும் இணையதளத்திற்கு சென்று முழுமையான தகவல்களை அறிந்து அதன் பின்னரே விண்ணப்பிக்கவும்.

முகவரி:


The General Manager,
Human Resources Development Department,
Tamilnad Mercantile Bank Ltd.
Head Office, .
# 57, V. E. Road,
Thoothukudi - 628 002.

ஆன்-லைனில் விண்ணப்பிக்க இறுதி நாள் :


20.12.2012

விண்ணப்பங்கள் கிடைக்க இறுதி நாள் :


27.12.2012

இணையதள முகவரி:


http://career.tmb.in/jobinfo.htm?job_num=CO1202

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Palanikumar Raju - Dindigul,இந்தியா
03-டிச-201207:00:10 IST Report Abuse
Palanikumar Raju தயவு செய்து கேட்டுக்குங்க. இந்த வங்கியில் சேரணும்னா ஐந்து லட்சம் பணம் கொடுக்கணும்.நாடாரா இருந்தா 3 லட்சம் கொடுக்கணும்.இல்லாம நீங்க apply பண்ணினா உங்க 300 ருபாய் ஸ்வாஹா தான்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.