இந்திய ராணுவத்திற்குத் தேவையான ஆயுதங்கள் மற்றும் தளவாடங்களைத் தயாரிப்பதில் இந்தியன் ஆர்டினென்ஸ் பேக்டரி எனப்படும் இந்திய ஆயுதத் தொழிற்சாலை பெயர் பெற்றது. இந்த நிறுவனத்திற்கு இந்தியாவில் மொத்தம் 39 இடங்களில் தொழிற்சாலைகள் உள்ளன. தமிழ் நாட்டில் மட்டும் மொத்தம் 6 இடங்களில் இந்த ஆலை உள்ளது. இந்த நிறுவனத்தில் டிரேடு அப்ரெண்டிஸ் பிரிவில் உள்ள 2714 காலி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வந்துள்ளது.
தேவைகள்:
இந்திய ஆயுதத் தொழிற்சாலையின் மேற்கண்ட டிரேடு அப்ரெண்டிஸ் பதவிகள் ஐ.டி.ஐ.,யில் படிக்காதவர்கள் மற்றும் ஐ.டி.ஐ.,யில் படித்தவர்கள் என்று இரண்டு பிரிவுகளாக உள்ளது. சார்ந்திருக்கும் பிரிவைப் பொறுத்து கல்வித் தகுதி மாறுபடுகிறது. ஐ.டி.ஐ., யில் படிக்காதவராக இருந்தால் பத்தாம் வகுப்பிற்கு நிகரான படிப்பை முடித்திருப்பதோடு கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களில் குறைந்த பட்சம் 40 சதவிகித மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஐ.டி.ஐ., படிப்பை முடித்தவர்களாக இருந்தால் என்.சி.டபிள்யூ., அல்லது எஸ்.சி.டபிள்யூ., அங்கீகாரம் பெற்ற படிப்பை அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் மூலமாக முடித்திருக்க வேண்டும். இந்தப் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 01.10.2012 அடிப்படையில் 22 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
ஏனைய விபரங்கள்:
4 ஆண்டு பயிற்சியை ஸ்டைபண்டுடன் சேர்த்து பெற முடியும் பணியாகும் இது. ஐ.டி.ஐ., முடித்தவராக இருந்தால் பயிற்சிக்கான கால அவகாச சலுகை உள்ளது. இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க ரூ.30/-ஐ போஸ்டல் ஆர்டர் மூலமாக Sr.GM/GM என்ற பெயரில் தமிழ் நாட்டிலுள்ள 6 மையங்களில் ஏதாவது ஒன்றில் மாற்றத்தக்கதாக எடுக்க வேண்டும். விண்ணப்பங்களை ஆன்-லைன் முறையில் சமர்ப்பிக்க வேண்டும். எழுத்துத் தேர்வு மூலமாக இந்தப் பணியிடங்கள் நிரப்பப்படும். விண்ணப்பங்களை சார்ந்துள்ள பகுதிக்கு ஏற்ற மையத்திற்கு அனுப்ப வேண்டும். முழுமையான விபரங்களைப் பின்வரும் இணையதளத்தைப் பார்த்து அறியவும்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.
4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.