Advertisement
விமானப் படையில் ஏர்மென் வாய்ப்பு
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Bookmark and Share  
பதிவு செய்த நாள் : டிசம்பர் 03,2012,00:00 IST

நமது முக்கிய பாதுகாப்புப் படைகளில் ஒன்றான இந்திய விமானப் படை 1932ல் நிறுவப்பட்டது. இந்தப் படையைச் சார்ந்த முதல் விமானம் 1933ல் பறக்கத் துவங்கியது. தற்போது இந்திய ராணுவம் மற்றும் இந்தியக் கப்பல் படையுடன் சேர்த்து மிக முக்கிய 3 பாதுகாப்புப் படைகளில் ஒன்றாக திகழ்கிறது. இந்திய விமானப் படையின் தொழில் நுட்ப மற்றும் போர்த் திறனுக்காக சர்வ தேச அங்கீகாரமும் கிடைத்துள்ளது. இந்தப் படையில் பிரிவு எக்ஸ் - டெக்னிகல் பிரிவைச் சார்ந்த ஏர்மேன்களைப் பணி நியமனம் செய்வதற்கான அறிவிப்பு வந்துள்ளது.

தேவைகள்:






இந்திய விமானப் படையின் ஏர்மேன் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 01.01.1992 முதல் 31.03.1996க்குள் பிறந்தவராக இருக்க வேண்டும். ப்ளஸ்டூ அளவிலான படிப்பில் இயற்பியல், கணிதம் மற்றும் ஆங்கிலம் ஆகிய பாடங்களைப் படித்திருப்பதோடு, இந்திய அரசின் அங்கீகாரம் பெற்ற பாலிடெக்னிக் கல்லூரிகள் ஏதாவது ஒன்றின் வாயிலாக மெக்கானிகல், எலக்ட்ரிகல், எலக்ட்ரானிக்ஸ், ஆட்டோமொபைல், கம்ப்யூட்டர் சயின்ஸ், ஐ.டி., அல்லது இன்ஸ்ட்ரூமெண்டேஷன் டெக்னாலஜி போன்ற ஏதாவது ஒரு பிரிவிலான இன்ஜினியரிங் டிப்ளமோவைக் குறைந்த பட்சம் 50 சதவிகித மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்தப் பதவிக்கு திருமணமாகாத ஆண் விண்ணப்பதாரர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
மேலே குறிப்பிடப்பட்ட கல்வித் தகுதிகளுடன் சில குறைந்த பட்சம் உடல் தகுதிகளையும் பெற்றிருக்க வேண்டும். உயரம் குறைந்த பட்சம் 152.5 செ.மி., இருக்க வேண்டும். மார்பு விரிவளவு குறைந்த பட்சம் 5 செ.மி., இருக்க வேண்டும். சிறந்த காது கேட்கும் திறன் மற்றும் நல்ல கண் பார்வை கொண்டிருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் பிரிவுக்கு ஏற்றபடி உடல் தகுதி மாறுபடுகிறது என்பதால் முழு தகவல்களை இணையதளத்திலிருந்து அறியவும்.

மற்றவை:






எழுத்துத் தேர்வு மற்றும் உடல் தகுதித் தேர்வு மூலமாக இந்தப் பதவிக்கான தேர்ச்சி இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பதவிகளுக்கான ரெக்ரூட்மெண்ட் ராலி 08.12.2012 முதல் 15.12.2012 வரை ஜார்கண்ட் மா நிலத்திலுள்ள கூண்டி மாவட்டத்திலும், சிங்பும் மாவட்டத்திலும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே முதலில் பின்வரும் இணையதளப் பகுதிக்கு சென்று முழுமையான விபரங்களை அறிந்து அதன் பின்னரே விண்ணப்பிக்கவும்.

இணையதள முகவரி:






http://indianairforce.nic.in/pdf/Jamshedpur%20%20(Jharkhand)%20Gp%20X%20Dec%2012.pdf

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.