ஓ.என்.ஜி.சி., நிறுவன பணிவாய்ப்பு
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

03 டிச
2012
00:00

ஆயில் அண்டு நேச்சுரல் கேஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் எனப்படும் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகம் ஓ.என்.ஜி.சி., என்ற பெயராலேயே நம் அனைவராலும் அறியப்படுகிறது. இத்துறையில் இந்த நிறுவனம் சர்வ தேச அளவில் 3வது இடத்தில் உள்ளது. சர்வதேச எரிசக்தி நிறுவனங்களில் 23 ஆவது இடத்தில் ஓ.என்.ஜி.சி., நிறுவனம் உள்ளது. இவ்வளவுபிரசித்தி பெற்ற இந்த நிறுவனத்தில் டெக்னிகல் அசிஸ்டன்ட் நிலையிலான 23 பிரிவுகளில் உள்ள மொத்தம் 444 காலிப் பணி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பிரிவுகள் மற்றும் காலி இடங்கள்:


ஓ.என்.ஜி.சி., நிறுவனத்தின் மொத்தக் காலி இடங்கள் 444ல் அதிகபட்சமாக 126 காலி இடங்கள் ஜூனியர் டெக்னீசியன் (புரொடக்சன்) பிரிவிலும், ஜூனியர் அசிஸ்டன்ட்(ரிக்மேன்) பிரிவில் 45 இடங்களும், அஸிஸ்டெண்ட் டெக்னீசியன் (புரொடக்சன்) பிரிவில் 37 இடங்களும், டெக்னிகல் அஸிஸ்டெண்ட் கிரேடு 3 (வேதியியல்) பிரிவில் 23 இடங்களும் உள்ளிட்டு பல்வேறு பிரிவுகளிலுமுள்ள காலி இடங்கள் நிரப்பப்பட உள்ளன. அஸிஸ்டெண்ட் டெக்னீசியன் பிரிவில் சிவில், எலக்ட்ரிகல், எலக்ட்ரானிக்ஸ், இன்ஸ்ட்ரூமெண்டேஷன், மெக்கானிகல், டிரில்லிங், மெட்டீரியல்ஸ் மேனேஜ்மென்ட், பாய்லர், பார்மஸிஸ்ட், நர்ஸ் ஆகியவற்றில் காலி இடங்கள் உள்ளன.
ஜூனியர் டெக்னிகல் அசிஸ்டன்ட் பிரிவில் ஜியாலஜி, எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரிகல், டீசல், சிமெண்டிங், வெல்டிங், மெஷினிங், பிட்டிங், பாய்லர், மெட்டீரியல்ஸ் மேனேஜ்மெண்ட், அக்கவுண்ட்ஸ், ஸ்டெனோ இங்கிலீஷ் ஆகிய பிரிவுகளில் காலி இடங்கள் உள்ளன.

தேவைகள்:


ஓ.என்.ஜி.சி., நிறுவனத்தின் பல்வேறு பிரிவிகளிலான காலி இடங்களுக்கு விண்ணப்பிக்கும் பிரிவைப் பொறுத்து கல்வித் தகுதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே விண்ணப்பிக்கும் பிரிவுக்கான தேவைகளைப் பின்வரும் இணையதளத்தைப் பார்த்து அறியவும்.
இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் 18.12.2012 அன்று 18 வயது நிரம்பியவராகவும் 30 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பிக்க ரூ.250/-ஐக் கட்டணமாக செலுத்த வேண்டியிருக்கும். எஸ்.சி., எஸ்.டி., முன்னாள் ராணுவத்தினர் பிரிவைச் சார்ந்தவர்களாக இருந்தால் ரூ.50/- மட்டும் கட்டணமாக செலுத்தினால் போதுமானது.

பிற தகவல்கள்:


மேலே குறிப்பிடப்பட்ட ஓ.என்.ஜி.சி., காலி இடங்களுக்கு ஆன்-லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கும் முன்னர் முதலில் இணையதளத்திற்கு சென்று தேவைகளை முழுமையாக அறியவும். அதன் பின்னரே விண்ணப்பிக்கவும். எழுத்துத் தேர்வு முறையில் இந்தப் பணி இடங்கள் நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆன்-லைனில் பதிவு செய்ய இறுதி நாள் :


18.12.2012

ஆன்-லைன் பதிவுக்குப் பின்னர் கிடைக்கும் விண்ணப்பத்தை உரிய இணைப்புகளுடன் அனுப்ப இறுதி நாள் :04.01.2012

எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள் :


03.02.2013

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி :


Post Box No : 12026,
Corporate Post Office,
Kolkatta - 700 002.

இணையதள முகவரி:


www.examfeedback.net/INPUTS/advtg1.pdf

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.