ஸம்ஸாரத்தில் ஸாரமெது?
அடிக்கடி இதை நினைத்துக் கொண்டிருப்பதே. (ஸம்ராரத்தில் ஸாரமேது என்று நினைத்துக் கொண்டே இருப்பதால் பற்றிவிட்டுப் பிறப்பறுக்கலாம்.)
மனிதர்கள் வேண்ட வேண்டியது எது?
தான், பிறர் இரண்டுபேரின் ÷க்ஷமத்துக்காக ஈடுபடும் ஜன்மம்.
கள்போல் மயக்கத்தை உண்டுபண்ணுவது எது?
பற்றுதல் (ஆசை, சிநேகம்)
திருடர்கள் யார்?
இந்திரியங்களை இழுத்துக் கொண்டு போகும் விஷயங்கள்தான்.
குருடனைக் காட்டிலும் குருடன் யார்?
ஆசையுள்ளவன்.
எல்லோரும் பயப்படுவது எது?
மரணம்
சூரன் யார்?
ஸ்த்ரீகளின் கண்களான பாணத்தால் துன்புறாதவன்.
எது அனர்த்தத்தைத் தரும்?
அஹம்பாவம்.
எது ஸுகத்தைத் தரும்?
ஸத்ஸங்கம் அதாவது நல்ல மனதுள்ளவர்களின் ஸ்நேஹம்.
துக்கத்தைத் தொலைப்பதில் யார் கெட்டிக்காரன்?
ஒன்றும் வேண்டாமென்று விட்டுக் கொடுப்பவன்
ஜீவராசிகள் எவனுக்கு வசமாம்?
ஸத்யமும் ப்ரியமுமான வசனமுடைய வணக்கமுள்ளவனுக்கு.
(ப்ரச்னோத்தர ரத்னமாலை - என்ற நூலிலுள்ள வடமொழி கேள்வி - பதிலை தமிழாக்கம் செய்து 27.1.33-ல் சென்னையில் மகா பெரியவர் பேசியது)
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.