எம்.எல்.வி., நினைவு இசை நிகழ்ச்சிகள்
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

04 டிச
2012
00:00

மதுரம்-லயம்-எம்.எல்.வியை வித்வத் என்று புகழாரம் சூட்டி ரசிகர்கள் மகிழ்ந்தனர். அவர் அமரராகி 22 ஆண்டுகள் ஓடி விட்டன. இருப்பினும் இசையில் வரலாறு படைத்த அந்த மேதையின் நினைவைப்போற்றும் வகையில், நிறைய கலை அமைப்புக்கள் நாடெங்கிலும் இயங்கி வருகின்றன. அண்மையில் அவருடைய நினைவாஞ்சலி இசை நிகழ்ச்சிகள், மயிலை ராகசுதா கலையரங்கத்தில் நடந்தது.
சாந்தி பவுண்டேஷன் மற்றும் எம்.எல்.வி., கல்சுரல் டிரஸ்ட் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இரு இசை நிகழ்ச்சிகள், ரசிகர்களை நெகிழ வைத்தன.

ஸ்ரீ வித்யா:


முதல் நிழ்ச்சியில் பாடிய இனம் ஸ்ரீ வித்யா மேடைக்கு புதிதாக அறிமுகம் ஆகியிருந்தாலும் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தினார். ஸ்ரீ வித்யாவின் இசை, எம்.எல்.வியின் அதே வழியில் தடம் பதித்த இசை வழங்குமுறையுடன், கவனத்தைக் கவர்ந்தது. ஸ்ரீ வித்யாவின் குரு டாக்டர் பிரேமா ரங்கராஜன், எம்.எல்.வியின் பிராண சிநேகிதியும் சிஷ்யையுமான சுலோச்சனா பட்டாபிராமனின் சிஷ்யை.
ஆகவே குரு-சிஷ்யை பாரம்பரிய இசைத் தொடர்புடன் எம்.எல்.வியின் இசை பற்றிய சகல நுணுக்கங்களையும் டாக்டர் பிரேமாவிடம் நன்றாக பயின்று ,ஸ்ரீவித்யாவின் குரலில் இந்த நிகழ்ச்சியில் அமரர் எம்.எல்.வியின் ப்ளாஸ் பிருகாக்களையும் - மின்னல் சுழல்வுகளையும் மட்டுமின்றி, ராக ஆலாபனையின் விரிவுகளும் படிப்படியாக மிக கவனத்துடன் பாடிய விதத்தில் இருந்து உணர்ந்து ரசிக்க வைத்தது. நிகழ்ச்சி திட்டமும் டாக்டர் எம்.எல்.வியை அதிகம் நினைவுபடுத்தியது.
ஸ்ரீ சியாமா சாஸ்திரிகளுடைய "பிராணவரா கிருதியை மிக உயர்வாக கையாண்டு அனுபவித்து நிரவல் செய்து, அமர்க்கள ஸ்வரப்பந்தலில் வியக்கும் அளவிற்கு பாடினார்.
பக்கவாத்தியமாக இளம் கூட்டணியாக கே.ஜே.திலீப்பின் வயலின் வாசிப்பு படு ஜோர். கொரட்டூர் கார்த்திக் நாராயணன் மிருதங்க வாசிப்பு அமர்க்களமான அனுசரணையுடன் லய நுட்பங்கள் மனம் கவர்ந்தன. நம்பிக்கை நட்சத்திரம் இவர் எனலாம்.

பேபி ஸ்ரீ ராம்:


இசையில் ஆழமான ஞானம். அழுத்தமான குரல் சிறந்த கற்பனைகளுடன் இசைக் களத்தில் இறங்கியுள்ள திருவனந்தபுரம் பேபி ஸ்ரீ ராம் எம்.எல்.வியின் இசை சாதனைகளை மதித்து, பெருமை சேர்க்கும் விதமாக அவருடைய நினைவாஞ்சலிக்காக தானே கண்டு பிடித்த அரிய ராகமான சாரு குந்தளம் என்று பெயர் சூட்டப்பட்ட தொரு ராகத்தை அலசி, அமர்க்ககளமாக அரங்கேற்றினார்.
இந்த நிகழ்ச்சியில் சாருகேசி ராகத்தில் பஞ்சம வர்ஜம் செய்து பாடியதும் ராக ஞானமும் பாராட்ட வைத்தது. மாதவன் மருகா என்று முருகப்பெருமான் மீது அமைந்த தமிழ் வரிகளும் மிகச் சிறப்பாகவே இருந்தன. ஸ்வரப்பரஸ்தாரம் படு உழைப்புடன் ஸ்வர சாகசங்களுடன் சாதனை படைத்தது.
நிகழ்ச்சியில் எம்.எல்.வியை நினைவுப்படுத்திய, ஊர்மிகா ராக ஆலாபனையும் பேபி ஸ்ரீராமின் திறமை சுடர் விட்டது எனலாம். கன்னட ராக ஆலாபனையிலும் திறமையை ஜொலிக்க வைத்து பாடினார் என்றாலும் ஒரேயொரு உண்மை மனதை உறுத்தியது. என்னவென்றால் எம்.எல்.வி., இசை சாதனையாக அபூர்வ ராகங்களை கையாண்டாலும் பிரதானமாக தோடி பைரவி கல்யாணி போன்ற கன ராகங்களையே பாடுவார்.
வயலினில் அபாரத் திறமை காட்டிய கே.பி.நந்தினி இசை பாரம்பரிய வாசிப்பில் மனம் கவர்ந்தார். கும்பகோணம் சுவாமிநாதனின் அருமையான லயம் - பாராட்டலாம். நிகழ்ச்சிக்கு நல்ல மெருகை தந்து உதவியது.
-மாளவிகா

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.