நான் கொஞ்சம் வானம்கொண்டு வருகிறேன்
நீ கொஞ்சம் நட்சத்திரம் கொண்டுவா.
ஏற்கெனவே ஒரு நிலவு கைவசம் இருக்கிறது
எப்பாடுபட்டேனும் சூரியன் ஒன்று
வாங்கி விட்டால் நல்லது.
சற்றுத் தூரத்தில் கிடைப்பதாகச் சொல்கிறார்கள்
அண்டை வீட்டாரிடம் அவரவர் வைத்திருக்கும்
கோள்களை வாங்கிக் கொள்ளலாம்.
மேகம் ஒன்றை என் பாட்டி
எனக்கு உயில் எழுதி வைத்ததாக ஞாபகம்
ஆனால் அதில் இருந்த மழையைத்
தாத்தா திருடி அடகுவைத்துக் குடித்து விட்டார்.
அதற்காகப் பாட்டி புலம்பி அழுத கண்ணீர்
கொஞ்சம் மேகத்தில் இருக்கலாம்
எல்லாமே எங்கேனும் உபரியாய்
ஒன்றிரண்டு இருக்கும் என்கிறார்கள்
நாம் வாழும்படியான அந்தப் பூமிதான்
எங்கே கிடைக்கும் என்று தெரியவில்லை.
- சூரியதாஸ்
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.