தாராபுரம் வட்டம், சிக்கனாபுரம் கிராமத்தில் வசிக்கும் தண்டபாணி என்ற விவசாயி கரும்பு பயிரில் ஜீவாமிர்தம் கரைசல் தயாரித்து இயற்கை வேளாண்மை யில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார். அவரின் தயாரிப்பின் தொழில் நுட்பங்கள் கீழ்வருமாறு:
ஜீவாமிர்தம் கரைசல்:
நாட்டு பசுவின் சாணம்-10கிலோ, நாட்டு பசுவின் கோமியம்- 5-10 லிட்டர், வெல்லம்-2 கிலோ, தண்ணீர்-200 லிட்டர், பயிருக்கு ஊட்டச்சத்தினை அளிக்க தட்டைப்பயிர் மாவு-2 கிலோ, வரப்பு மண்- ஒரு கையளவு. 10கிலோ சாணத்தில் நுண்ணுயிரிகள் 30 லட்சம் கோடியில் இருந்து 20 நிமிடத்தில் 60 லட்சம் கோடியாகவும் 40 நிமிடத்தில் 120 லட்சம் கோடியாகவும் மாறும். நாட்டு பசுவின் சாணம், கோமியம், தண்ணீர், வெல்லம், தட்டைப்பயறு மாவு, வரப்பு மண் ஒரு கையளவு ஆகியவற்றை ஏதாவது ஒரு பாத்திரம் (தாமிரம் தவிர) எடுத்து நன்றாக கலக்க வேண்டும். இதை 48 மணி நேரம் வைத்திருக்க வேண்டும். 3 தடவை ஒரு நாளில் காலை, மதியம், மாலை கடிகார முள் சுற்றும் திசையில் கலக்கிவிட வேண்டும். 48 மணி நேரம் கழித்து பயன்படுத்தலாம். 7 நாட் கள் வரை வைத்திருக்கலாம். அதற்கு மேல் நுண்ணுயிர்கள் இறக்க ஆரம்பித்துவிடும். நொதிக்கும் போது கரைசலில் இருந்து கார்பன் டை ஆக்சைடு, மீத்தேன் போன்றவை வெளி யேறும். எனவே, கலனின் மூடியை இறுக்கமாக மூடக்கூடாது. இதை மாலை வேளையில் மட்டுமே பயிருக்கு தெளிக்க வேண்டும்.
60 முதல் 90 நாட்கள் வரையுள்ள பயிர்கள்:
உளுந்து, நிலக்கடலை, பாசிப்பயறு, சோயாபீன்ஸ், கம்பு, கேப்பை, தட்டைப் பயறு. முதல் தெளிப்பு: விதைத்து 21 நாள் கழித்து 100 லி. தண்ணீர், 5 லி. ஜீவாமிர்தம் (1 ஏக்கருக்கு). 2ம் தெளிப்பு-முதல் தெளிப்பிற்கு பிறகு 21 நாட்கள் கழித்து 150லி. தண்ணீர், 10 லி. ஜீவாமிர்தம் (ஒரு ஏக்கருக்கு). 3ம் தெளிப்பு - இரண்டாம் தெளிப் பிற்கு பிறகு 21 நாட்கள் கழித்து 200லி. தண்ணீர், 20 லி. ஜீவாமிர்தம் (ஒரு ஏக்கருக்கு). கடைசி தெளிப்பு - கதிரில் பால் நன்றாக பிடிக்கும் போது (அ) காய் பிடிக்கும்போது 20 லி. தண்ணீர், 5 லி. புளித்த மோர் (ஒரு ஏக்கருக்கு).
90 முதல் 120 நாட்கள் வரையுள்ள பயிர்கள்:
பூச்செடிகள், காய்கறிகள், நெல், கோதுமை, கம்பு, கேப்பை, பயறு வகைகள். முதல் தெளிப்பு: ஒரு மாதம் கழித்து 100 லி. தண்ணீர், 5லி. ஜீவாமிர்தம். 2ம் தெளிப்பு - முதல் தெளிப்பிற்கு பிறகு 21 நாட்கள் கழித்து 150லி. தண்ணீர் 10 லி. ஜீவாமிர்தம். 3ம் தெளிப்பு - விதைத்து 72 நாள் கழித்து தெளிக்கவேண்டும். தொடர்புக்கு: தண்டபாணி, சிக்கனாபுரம், போன்: 95240 67068. -கே.சத்தியபிரபா, உடுமலை
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.
4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.