கண்ணாடித்தூள் டூத் பேஸ்ட்!
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

04 டிச
2012
00:00

நம்பினால் நம்புங்கள்: பற்கள் பாதுகாப்பு மற்றும் சீரமைப்புக் குறித்த சிகிச்சை, சிந்து சமவெளி நாகரிகம் உருவானபோதே, தொடங்கிவிட்டது. இதோ, சில சமீபத்திய அயல் நாட்டு கண்டுபிடிப்புகள். இங்கே இவை அறிமுகமாக, குறைந்தபட்சம் இரண்டு வருடங்களாவது ஆகும்.

* நைசான கண்ணாடித் தூள் கலந்த டூத் பேஸ்ட் அமெரிக்காவில் பிரபலம். பற்கள் பாழாகாமல் கூசாமல் இருக்க உதவுவதோடு, பளபளப்பையும் தருகிறது.
* மேல் வரிசைப் பற்களில் கூடுதலான நேரம் பல்லின் வேரைச் சரிபார்க்க உதவும் வகையில், அனஸ்தடிக் ஸ்ப்ரே வந்து விட்டது. ஈறு நோய்களையும், பற்கள் சிதைவையும் தடுக்கும் மாயமந்திரம் போல் சிகிச்சை!
* கன்னச் சதையிலுள்ள செல்களைப் புதிய ஈறின் திசுக்களாக மாற்றலாம். கம்ஷீல்ட் என்ற ஈறு-மூடி, பற்கள் சரியான வரிசையில் இருக்க உதவும். இப்போது வர ஆரம்பித்திருக்கிற பிரேஸ்கள் போடுவது நல்லது.
* கீ-ஹோல் டென்டல் இம்ப்ளான்ட் சர்ஜரி, அதிகமாகத் துளை போடாமல், விரைவில் குணமடைய உதவும். அனஸ்தடிக் (மயங்கியிருக்கும்) நிலையை உடனடியாக மாற்ற வழி இருப்பதால், ஃபில்லிங் முடிந்தவுடன் மரத்துப் போனநிலை பல மணி நேரம் இருக்கத் தேவையில்லை.
* பற்களின் நிறத்திலேயே ஃபில் அப் கிடைத்தால், மேல் பூச்சு தேவையில்லை. புதிய வாய்ப் பாதுகாப்பு ( மவுத்கார்ட்) கிடைக்கிறது. நீங்கள் மென்று தின்ன அதிகம் சிரமப்பட வேண்டாம். இது தசைக்குக் கூடுதல் பலம் தருகிறது.
* வாய் உமிழ்நீரை சோதனை செய்தால் கான்சர் முதல் டயபடீஸ் வரை, பல நோய்களைக் கண்டுபிடித்துவிடலாம். பற்கள் கெடுவதைத் தடுக்கும் பல அம்சங்கள் தேங்காய் எண்ணெயில் இருக்கின்றன.

பல் மருத்துவத்தில் சில சமீபத்திய முன்னேற்றங்கள்:

* மன-நலம், உடல் நலம் குன்றியவர்களுக்கும், வாய்ப்பகுதி சுத்தமாக இபுருக்க வேண்டும். முழு மயக்கத்தில், ஒரே அமர்வில், அவர்களுடைய பற்களுக்கு முழு சிகிச்சையும் தரும் யுக்தி யு.எஸ்., யு.கே. மற்றும் ஐரோப்பிய நாடுகளில் பரவி வருகிறது.
*குழந்தையின் முதல் பிறந்த நாளிலேயே பற்கள் பரிசோதனை செய்ய வேண்டும் என்று அமெரிக்க டென்டல் சங்கம் சொல்கிறது. குழந்தைகள் பற்களை தினசரி எவ்வாறு துலக்குவது என்று கற்றுத் தருவார் பல் மருத்துவர். அதற்குத் தனி அப்பாயின்மெண்ட் உண்டு.
* லேசர் டென்டிஸ்ட்ரி வந்தபிறகு. பற்களுக்கு சர்ஜரியில் ரத்த சேதம் குறைவு. உடனடி பலன் தெரியும்; தையல் தேவையில்லை. பாக்டீரியா தொற்று இருக்காது. அருகிலிருக்கும் திசுக்களுக்குப் பாதிப்பு குறைவு. காயம் விரைவில் ஆறிவிடும்.
* காஸ்மெடிக் சர்ஜரி அழகான புன்னகைக்கு வழிவகுக்கிறது. பற்களை வெளுக்க, இணைக்க, பீங்கான் தொழில் நுட்பம் பயன்படுத்த, அழகற்ற புன்னகையை அற்புதமான புன்னகையாக்க இரண்டே இரண்டு விசிட் போதும்!
* கிளினிக்கிலோ, வீட்டிலோ பற்களை வெளுப்பாக்கிக் கொள்ளலாம். வீட்டில் வசதியாகச் செய்து கொள்ளலாம். 2-3 வாரங்கள் ஆகும். அவ்வளவுதான்.
* இடைவெளியை மறைக்கவோ, பற்களின் நிறத்தை மாற்றவோ பயன்படுத்தப்படும் பசை “பான்டிங்’. ஒருமுறை கிளினிக்குக்குப் போனால் போதும்.
* உடைந்த, கோணல்மாணலான பல் வரிசையைச் சீராக்க, பீங்கான் அல்லது பிளாஸ்டிக் சிமென்ட் பூச்சு உதவும். இதற்கு அனஸ்தீசியா தேவையில்லை. பான்டிங் செய்து கொண்டவர்களுக்கு பளபளப்பு அதிக நாள் நீடித்திருக்கும்.
* லேசர் சிகிச்சை, பான்டிங், நிற மாற்றம் தவிர, பொதுவாகவே பல் வைத்தியத்துக்கு உதவுகிறது. கிரௌன் எனப்படும் செராமிக் மூடி இயற்கையாகவும் இருக்கும்; நீண்ட நாள் உழைக்கும்.
* ஈறு நோய் பற்கள் இழக்கக் காரணமாக இருக்கிறது. இதற்கான சிகிச்சை லேசரில் செய்யப்படுகிறது. ஈறு நோய் வராமல் தடுக்க, இரண்டு வேளை பிரஷ் செய்ய வேண்டும். பற்களுக்கு இடையே உள்ள இடைவெளியில் நன்றாக கொப்பளித்துத் துலக்க வேண்டும். ஜங்க் ஃபுட் கூடாது. நல்ல சத்தான உணவு உண்ண வேண்டும். ஆறு மாதத்துக்கு ஒருமுறை பல் மருத்துவரிடம் செல்ல வேண்டும்.

- சாருகேசி

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.