டிசம்பர் மாதம் எப்படி? - துல்லியமான கணிப்புகளும் எளிய பரிகாரங்களும்!
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

04 டிச
2012
00:00

மேஷம் - அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்
இந்த மாதம் உங்கள் ராசிக்கு எட்டாம் இடத்தில் சூரியன் சஞ்சரிப்பதால் ஆரோக்கியக்குறைவு, பணவரவு செலவில் சிக்கல், அலுவலகத்தில் தொல்லை போன்றவை உண்டாகலாம். எதிலும் அதிக கவனம் தேவை. உத்தியோகஸ்தர்கள் இடமாற்றம் கிடைக்காததை எண்ணிக் கவலைப்பட வேண்டாம். உங்களை எதிர்த்து வந்தவர்கள் இடம் மாற்றம் பெற்றுச் சென்றதே உங்களுக்குப் பெரும் நன்மையாகும். வாகன வசதிகள் பெருகும்.
கலைஞர்களுக்கு முன்னணி நிறுவனங்களிடமிருந்து சில புதிய வாய்ப்புகள் தேடி வர வாய்ப்புண்டு. உங்கள் நேரடி முயற்சிகள் நிறைய தேவைப்படும். மாணவர்களின் தேர்வுக்கான முயற்சிகள் வீணாகாது. வியாபாரிகள் நிம்மதி அடையக்கூடிய வகையில் வியாபாரம் இருக்கும். பெண்கள், பொன் நகைகள், ஆடை அணிமணிகளை வாங்கி அணிந்து மகிழ்வர்.
குடும்ப நிலையில் குதூகலத்துக்குக் குறைவில்லை. சுபநிகழ்ச்சி நிகழ இடமுண்டு. பயணம் மேற்கொள்வீர்கள். புதியவர் ஒருவர் நண்பர் ஆவார். அரசியல் ஆர்வமுள்ளவர்களுக்கு நல்ல எதிர்காலம் உண்டு.
பரிகாரம்: “சௌந்தர்யலஹரி’ ஸ்தோத்திரத்தைத் தினமும் சொல்லி வருவதுடன் அம்பாளின் படத்திற்கு முன் தீபமேற்றி வணங்கி வருவதால் உங்கள் துன்பங்கள் தீரும். நல்ல வாழ்க்கை உண்டாகும்.
சந்திராஷ்டம தினங்கள்: 11.12.2012 செவ்வாய்க்கிழமை மாலை 4.45 முதல் 13.12.2012 வியாழன் இரவு 7.00 மணி வரை.

ரிஷபம் - கார்த்திகை 2,3,4ம் பாதங்கள், ரோகிணி, மிருகசீரிஷம் 1,2ம் பாதங்கள்
ராசிநாதன் சுக்ரன், ஆறாம் இடத்தில் புதன் சனியுடன் சேர்ந்து சஞ்சரிப்பதால் நன்மையும் தீமையும் கலந்த பலன் நடைபெறக்கூடும். பூமியை விற்றுக் கடன் தீர்க்க நேரும். திருமணத்தடை உள்ளவர்களுக்கு வரன்கள் வரும். வண்டி வாகனங்களில் சிக்கல் நேரும்.
உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்திருந்தபடியே இடமாற்றம், பதவி உயர்வு போன்ற நற்பலன்களை அடைவீர்கள். தொழிற்பிரிவினர் தொழில் முன்னேற்றத்தைக் காணக் கூடும். எனினும் அரசு வழியில் ஏதேனும் சிக்கல்கள் ஏற்படக்கூடும். கலைஞர்கள் சுமாரான முன்னேற்றத்தை மட்டுமே காண்பீர்கள். மாணவர்கள் ஓரளவு சோர்வுடன் காணப்பட்டாலும் படிப்பில் மிகுந்த கவனம் செலுத்தி வருவீர்கள். வியாபாரிகளுக்கு சுமாரான வியாபாரமே நடைபெறும். சுபநிகழ்ச்சி, விருந்து போன்ற நிகழ்ச்சிகளால் பெண்களுக்கு உற்சாகம் பொங்கும்.
குடும்ப நிலையில் கணவன்-மனைவியிடையே பரிவும் பாசமும் இருந்து வரும். நண்பர்களின் உதவி உண்டு. தாயாரின் உடல் நலத்தில் அக்கறை செலுத்த நேரும். சிலருக்கு திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் கூடி வரும். எச்சரிக்கை தேவை.
பரிகாரம்: தினமும் 108 முறை “ஸ்ரீராமஜெயம்’ எழுதி வருவதுடன் ராமர் பட்டாபிஷேகம் படத்தைப் பூஜையறையில் வைத்து வழிபட்டு, வருவதும் உங்கள் சிரமங்களை போக்கி, செழிப்பைத் தரும்.
சந்திராஷ்டம தினங்கள்: 13.12.2012 வியாழன் இரவு 7.00 மணி முதல் 15.12.2012 சனிக்கிழமை இரவு 9.45 மணி வரை.

மிதுனம் - மிருகசீரிஷம் 3,4ம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3ம் பாதங்கள்
ராசிக்கு ஆறாம் இடத்தில் சூரியன் சஞ்சரிப்பதாலும், ஆறுக்குடைய செவ்வாய் ஜென்மராசியை பார்வையிடுவதாலம் பணப் பரிவர்த்தனையில் நிதானம் தேவை. செய்தொழிலில் கவனம் தேவை. முடிவான தைப்போல் தெரிபயும். விஷயம் முடியாமல் நழுவிப் போகும்.
உத்தியோகஸ்தர்கள் இடமாற்றம், பதவி உயர்வு போன்றவற்றைப் பெற இப்போது அவசரப்பட வேண்டாம். சிறிது காலம் பொறுமையாக இருங்கள். தொழிற்பிரிவினர் சுயமுயற்சியாலேயே பெரும் முன்னேற்றத்தைக் காணலாம்.
கலைஞர்கள் மிகப் பெரும் புகழ்தரக்கூடிய வகையில் பிரபல நிறுவனங்களிலிருந்து சில வாய்ப்புகளைப் பெறக்கூடும். மாணவர்களின் முயற்சிகளுக்கு வெற்றி கிட்டும். வியாபாரம் மாத பிற்பகுதியில் சுமாராகவும், பிற்பகுதியில் நல்ல முறையிலும் நடைபெறக்கூடும்.
தம்பதியிடையே இணக்கமான போக்கே தென்படும் என்றாலும் மூன்றாவது நபர் ஒருவர் தலையில் குழப்பம் ஏற்படுத்தும் நிலை உள்ளதால் யாரிடமும் எச்சரிக்கையாகப் பழகுவது நல்லது. நண்பர்களின் மூலமும் அரசு வழியிலும் அனுகூலம் உண்டு.
பரிகாரம்: சனிக்கிழமைகளில் சனீஸ்வர பகவானுக்கு எள்ளன்னம் நைவேத்தியம் செய்து ஏழை, எளியவர்களுக்கு விநியோகம் செய்து வாருங்கள். சுபிட்சம் ஏற்படும்.
சந்திராஷ்டம தினங்கள்: 15.12.2012 சனிக்கிழமை இரவு 9.45 மணி முதல் 17.12.2012 திங்கட்கிழமை இரவு 1.45 மணி வரை.

கடகம் - புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்
குருபகவான் அருளால் சிறிதளவு எதிர்பாராத தனவரவு உண்டு என்றாலும் குழந்தைகளைப் பற்றிய கவலை தோன்றும். மனைவியின் உறவினர் வகையில் மனஸ்தாபம் உண்டாகலாம். எனினும் ஐந்தாம் இடத்தில் சுக்கிரன் உச்சம் பெற்றுச் சஞ்சரிப்பதால் தொல்லைகளை நிவர்த்தி செய்வார்.
உத்தியோகஸ்தர்கள் இடமாற்றம், பதவி உயர்வு போன்ற நன்மைகளை எளிதில் பெற்று மகிழ்வீர்கள். தொழிற்பிரிவினர் தொழிலில் முன்னேற்றம் காண்பீர்கள்.
மாணவர்கள் தீவிர அக்கறையுடன் படித்து வருவீர்கள். வியாபாரிகள் மகிழ்ச்சியடைவீர்கள். குடும்பத்தில் நடைபெறக்கூடிய சம்பவங்கள் யாவும் சுமுகமாக நடைபெறும் என்பதால் பெண்களுக்கு மகிழ்ச்சி கூடுதலாகும்.
கணவன்-மனைவியிடையே பரஸ்பர அன்பு நிலவி வரும். நல்ல தகவலைத் தாங்கிய கடிதம் ஒன்று கிடைக்கக்கூடும். அரசியலில் ஆர்வம் உள்ளவர்கள் துணிந்து ஈடுபடலாம். பயணம் ஒன்றை மேற்கொள்ள நேரலாம். சிலருக்கு காதல் திருமணம் கைகூடும்.
பரிகாரம்: தினமும் “லலிதா சஹஸ்ரநாமம்’ பாராயணம் செய்து வருவதன் மூலம் பிரச்னைகள் விலகி, சுபிட்சம் உண்டாகும்.
சந்திராஷ்டம தினங்கள்: 17.12.2012 திங்கட்கிழமை இரவு 1.45 மணி முதல் 20.12.2012 வியாழன் காலை 7.45 மணி வரை.

சிம்மம் - மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்
ராசிநாதன் சூரியன் நான்காம் இடத்தில் சஞ்சரிப்பதால் எதிர்பாராத திருப்பங்கள் ஏற்படும். பிரச்னைகள் பெரிதாகத் தோன்றினாலும் தொட்டு விட்டு விலகிச் சென்று விடும். கவலை வேண்டாம்.
உத்தியோகஸ்தர்கள் இடமாற்றம், பதவி உயர்வு போன்றவற்றைப் பெறுவதில் தடங்கல் ஏற்பட்டு பின்னரே வெற்றி கிட்டும். முயற்சிகளை விட்டு விடாதீர்கள். தொழிற் பிரிவினர் நன்மைகளைப் பெற முடியுமாயினும் கூட்டாளிகளால் பிரச்னைகள் ஏற்பட்டு கவலையைத் தரக்கூடும். நிதானமாகச் சமாளிக்கவும்.
கலைஞர்களின் தொடர் முயற்சிகளால் புதிய வாய்ப்புகள் சில அமையக்கூடும். வியாபாரிகளுக்கு மாதப் பிற்பகுதியில் திருப்திகரமான நிலை காண முடிகிறது. மாணவர்கள் பெரிதும் ஆர்வத்துடன் படிப்பில் அக்கறை காட்டுவீர்கள்.
கணவன்-மனைவியிடையே சுமுகமான போக்கு இருந்து வரும் என்றாலும், ஓரிரு சலசலப்பும் ஏற்பட இடமுண்டு. பழைய நண்பர்களைத் திடீரென்று சந்திக்க நேரும். அதன் மூலம் அனுகூலமும் உண்டு. குடும்பத்துடன் இனிய பயணம் ஒன்றை மேற்கொள்வீர்கள்.
பரிகாரம்: சனிக்கிழமைகளில் ஆஞ்சநேய பகவானுக்கு துளசி மாலை அணிவித்து வணங்கி வாருங்கள். உங்கள் சிரமங்கள் குறையும். சௌபாக்யம் பெருகும்.
சந்திராஷ்டம தினங்கள்: 20.12.2012 வியாழன் காலை 7.45 மணி முதல் 22.12.2012 சனிக்கிழமை மாலை 4.15 மணி வரை.

கன்னி - உத்திரம் 2,3,4ம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2ம் பாதங்கள்
சதுர்த்த கேந்திரத்தில் சஞ்சரிக்கும் செவ்வாயானது, மனக்கவலையை ஏற்படுத்துமாயினும் சக்கிரனால் சில நன்மைகளும் ஏற்பட வாய்ப்புண்டு.
உத்தியோகஸ்தர்கள் இடமாற்றம், பதவி உயர்வு ஆகியவற்றை பெறக்கூடும் என்றாலும் சிறு தடங்கல் ஏற்பட்ட பின்னரே வெற்றி கிட்டும். தொழிற்பிரிவினர் முன்னேற்றத்திற்கான அறிகுறிகளைக் காண்பீர்கள்.
கலைஞர்கள் பெரிதாக நன்மை எதையும் அடைய முடியாத அளவில் சிறு வாய்ப்புகள் சிலவற்றைப் பெற முடியும். மாணவர்கள் படிப்பில் முன்னணி நிலையை எட்ட அரும்பாடுபடுவீர்கள். அது மட்டுமின்றி போட்டி பந்தயங்களிலும் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். வியாபாரம் மாதம் முழுவதும் சீராக நடைபெறுவதில் வியாபாரிகள் உற்சாகமடைய இடமுண்டு.
கணவன்-மனைவியிடையே இணைக்கமான போக்கு நிலவி வரும். நீங்கள் தேடிக் கொண்டிருந்த நண்பர் தாமே உங்கள் முன் நேரில் வரக்கூடும். மனத்தில் சங்கடங்கள் ஏற்பட்டாலும் உடன் சரியாகி விடும்.
பரிகாரம்: சங்கடஹர சதுர்த்தி நாளில் விநாயகப் பெருமானைத் தரிசனம் செய்வதுடன், அபிஷேகத் திரவியங்களை வாங்கித் தருவதும் உங்கள் கவலையைப் போக்கி களிப்பை ஏற்படுத்தும்.
சந்திராஷ்டம தினங்கள்: 22.12.2012 சனிக்கிழமை மாலை 4.15 மணி முதல் 24.12.2012 திங்கட்கிழமை இரவு 3.00 மணி வரை.

துலாம் - சித்திரை 3,4ம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1,2,3ம் பாதங்கள்
ஜென்ம ராசியில் சஞ்சரிக்கும் சுக்ரன், புதன் அருளால் சகோதர வழியில் பகைமை தீருவது போன்ற நல்ல பலன்கள் ஏற்படும்.
உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு போன்ற நன்மைகளைப் பெறுவீர்கள். தொழிற்பிரிவினர் தொழிலில் வளர்ச்சி காண்பதுடன் வருமானப் பெருக்கத்தையும் காண முடியும்.
கலைஞர்கள் புதிய வாய்ப்புகள் குறைவான அளவிலேயே கிடைக்கப் பெற்றாலும் வழக்கமான வாழ்க்கை வசதிகளில் குறைவிருக்காது. மாதத் தொடக்கத்தில் சோர்ந்து காணப்படும் மாணவர்கள் மாதப்பிற்பகுதியில் உற்சாகமாகச் செயல்படுவர்.
வியாபாரத்தில் பெரும் சரிவுகள் எதுவுமின்றி நல்லபடியாகவே நடந்து வரும் என்பதால் பிரச்னைகள் எதுவும் எழ வாய்ப்பில்லை. குடும்ப நிலையில் களிப்பும் நிம்மதியும் காணப்படும்.
அரசியல்வாதிகளுக்குப் பிரகாசமான எதிர்காலம் அமையக்கூடிய அறிகுறிகள் தோன்றும். துணிந்து ஈடுபடலாம்.
பரிகாரம்: சனிக்கிழமை பெருமாளுக்குத் துளசி மாலை அணிவித்து வணங்கி வாருங்கள். உங்கள் சிரமங்கள் நீங்கி செல்வச் செழிப்பு ஏற்படும்.
சந்திராஷ்டம தினங்கள்: 24.12.2012 திங்கட்கிழமை இரவு 3.00 மணி முதல் 27.12.2012 வியாழன் பகல் 2.40 மணி வரை.

விருச்சிகம் - விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை
இந்த மாதம் ராசிக்கு விரய ஸ்தானத்தில் சுக்ரன், சனி, புதன் சஞ்சரிப்பதால் எதிலும் கவனம் தேவை. இருந்தாலும் அங்காரகன் எதிர்பாராத தொழில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவார்.
உத்தியோகஸ்தர்கள் இடமாற்றம் என்ற பெயரால் கூடுதலாகச் சில பணிகளை ஏற்க வேண்டியிருக்குமாயினும் வேறு நன்மைகள் ஏதும் இல்லை. உயர் அதிகாரிகளிடம் நன்மதிப்பை பெற முடியும் என்பதே ஆறுதலான விஷயம். தொழிற்பிரிவினருக்குப் பணிகள் கூடுமே தவிர அந்த அளவுக்கு வருவாய் கூடுதலாகக் கிடைக்காது. சிறிது காலம் பொறுத்திருங்கள். மாணவர்கள் படிப்பார்வம் கொண்ட சுறுசுறுப்பாக இயங்குவார்கள்.
கலைஞர்கள் சில புதிய வாய்ப்புகளைப் பெறக்கூடும். வியாபாரம் மாதம் முழுவதும் ஏற்றஇறக்கமாக இருந்தாலும் வியாபாரிகள் பெரிதாக கவலைப்படத் தேவையில்லை.
கணவன்-மனைவியிடையே இரண்டொரு சிறு சங்கடங்கள் ஏற்பட்டுப் பின் சரியாகிவிடும். பயணங்களின் போது உடைமைப் பொருள்களின் மீது கவனம் அவசியம்.
பரிகாரம்: சனிக்கிழமைகளில் ஆஞ்சநேய பகவானுக்கு வெண்ணெய் சாத்தி துளசிமாலை அணிவித்து வணங்கி வருவதன் மூலம் உங்கள் கவலைகள் யாவும் விலகும்.
சந்திராஷ்டம தினங்கள்: 1.12.2012 சனிக்கிழமை முதல் 2.12.2012 ஞாயிறு மாலை 6.20 மணி வரை. மீண்டும் 27.12.2012 வியாழன் பகல் 2.40 மணி முதல் 29.12.2012 சனிக்கிழமை இரவு 1.50 மணி வரை.

தனுசு - மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்
இந்த மாதம் பூர்வ புண்ணியஸ்தானாதிபதி செவ்வாய் ஜென்மராசியில் சஞ்சரிப்பதால் அநேகமாக நற்பலன்களே நடைபெறும். உடல்நலத்தில் மட்டும் சற்றே கவனம் தேவை.
உத்தியோகஸ்தர்கள் உயரதிகாரிகளிடம் உங்களுக்கு உள்ள ஆதரவு பலம் காரணமாக இடமாற்றம், பதவி உயர்வு போன்ற நன்மைகளைப் பெறுவீர்கள். தொழிற்பிரிவினர் தொழில் வளர்ச்சியிலும் வருமானத்திலும் திருப்தி காணக்கூடும். கலைஞர்கள் முயற்சிகளை விடாமல் செய்து வந்தால் சில புதிய வாய்ப்புகள் கிடைக்கக் கூடும்.
மாணவர்கள் முழு அக்கறையுடன் படித்துத் தேர்வில் வெற்றி பெற முயல்வீர்கள்.
வியாபாரிகளுக்கு ஓரளவு சுமாரான முறையில் வியாபாரம் நடந்து வரும். குடும்பநிலை சுமுகமாக இருப்பதால், பெண்களின் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது. கணவன் மனைவியிடையே இணக்கமான போக்கே நிலவி வரும். நண்பர்களின் உதவி உண்டு. எதிர்பாராத முறையில் திடீர் செலவுகள் ஏற்படக்கூடும்.
பரிகாரம்: தினமும் காலையில் “ஆதித்ய ஹ்ருதயம்’ ஸ்தோத்திரத்தைச் சொல்லி சூரியனை வணங்கி வாருங்கள். உங்கள் துன்பங்கள் யாவும் நீங்கி நற்பலன்கள் தொடரும்.
சந்திராஷ்டம தினங்கள்: 2.12.2012 ஞாயிறு மாலை 6.20 மணி முதல் 4.12.2012 செவ்வாய் அதிகாலை 3.15 மணி வரை. மீண்டும் 29.12.2012 சனிக்கிழமை இரவு 1.50 மணி முதல் 1.1.2013 செவ்வாய் காலை 11.00 மணி வரை.

மகரம் - உத்திராடம் 2,3,4ம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2ம் பாதங்கள்
இந்த மாதம் லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் செவ்வாய் அருளால் சில நன்மைகள் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் விரும்பிய இடமாற்றம், பதவி உயர்வு போன்ற நற்பலன்களை சக பணியாளர்களின் தடங்கலின் காரணமாக தாமதமாக பெறக்கூடும்.
தொழிற்பிரிவினர் ஓரளவுக்கு முன்னேற்றத்தைக் காணமுடியும். அரசு வழியில் சில உதவிகளும் அமையும். மாணவர்களின் படிப்பார்வம் பெற்றோரைப் பரவசப்படுத்தக்கூடிய வகையில் சிறப்பாக இருக்கும். கலைஞர்கள் புதிய நிறுவனங்களில் சில வாய்ப்புகளைப் பெறுவீர்கள்.
வியாபாரிகள் திருப்தியடையும் வகையில் வியாபாரம் சிறப்பாகவே நடைபெறும். குடும்பத்தில் அனைவரின் ஒத்துழைப்பும் கிடைக்கப் பெறுவதால் பெண்கள் மகிழ்ச்சிக்குக் குறைவிருக்காது. கணவன்-மனைவியிடையே சிறு மனக்கசப்புகள் ஏற்பட்டாலும் உடனே அவை மறைந்து இனிமையான சூழ்நிலை ஏற்பட்டுவிடும்.
அரசியல்வாதிகளின் குழப்பநிலை தெளிவடைந்து வெற்றிகாணும் சூழ்நிலை தென்படும். எழுத்து, பத்திரிகைத் துறையினர் செழிப்பான நிலையைக் காண முடியும்.
பரிகாரம்: காயத்ரி மந்திரத்தைத் தினமும் சொல்லி வருவதன் மூலம் உங்கள் சங்கடங்கள் குறைந்து சுபிட்சமான சூழ்நிலையை அடைவீர்கள்.
சந்திராஷ்டம தினங்கள்: 5.12.2012 புதன்கிழமை அதிகாலை 3.15 மணி முதல் 7.12.2012 வெள்ளிக்கிழமை காலை 9.30 மணி வரை.

கும்பம் - அவிட்டம் 3,4ம் பாதங்கள், சதயம், பூரட்டாதி 1,2,3ம் பாதங்கள்
இந்த மாதம் பத்தாம் இடத்தில் சஞ்சரிக்கும் சூரியன் உடல்நலத்தில் பாதிப்பையும் வியாபாரத்தில் சரிவையும் தரக்கூடும்.
உத்தியோகஸ்தர்கள் இடமாற்றம், பதவி உயர்வு போன்றவற்றைப் பெறுவதில் சக பணியாளர்கள் தடங்கல் ஏற்படுத்துவதன் காரணமாகத் தள்ளிப் போகக்கூடும். தொழிற்பிரிவினர் நாளுக்கு நாள் வளர்ச்சியைக் காண்பீர்கள். வருமானமும் கூடுதலாகும். அரசு வழி நன்மைகளும் உண்டாகும்.
மாணவர்கள் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். நேரடி முயற்சிகளால் கலைஞர்கள் சில புதிய வாய்ப்புகளைப் பெறக்கூடும். வியாபாரம் சுமாராக நடைபெற்று வியாபாரிகளை ஓரளவே உற்சாகப்படுத்தும்.
குடும்பத்தில் உள்ளவர்கள் எல்லாருமே ஒத்துழைப்பைத் தருவதால் பெண்களுக்குப் பெருமையும் நிம்மதியும் உண்டாகும். குடும்ப நிலையில் கணவன்-மனைவியிடையே சிறுசிறு மனக்கசப்புகள் அவ்வப்போது தோன்றினாலும் பெரும்பாதிப்பு ஏதும் இருக்காது.
பரிகாரம்: தினமும் காக்கைக்கு சாதம் வைத்து வருவதுடன் சனிக்கிழமையில் ஆஞ்சனேயருக்கு துளசி மாலை அணிவித்து வணங்கி வருவதும், உங்கள் தீய பலன்களைக் குறைத்து நற்பலன்களை மேலோங்கச் செய்யும்.
சந்திராஷ்டம தினங்கள்: 7.12.2012 வெள்ளிக்கிழமை காலை 9.30 மணி முதல் 9.12.2012 ஞாயிறு பகல் 1.50 மணி வரை.

மீனம் - பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி
இந்த மாதம் எட்டாம் இடத்தில் சுக்ரன், புதன், சனி சேர்ந்து சஞ்சரிப்பதால் சிறு சிறு விபத்துக்கள் ஏற்படலாம். எதிர்பாராத செலவுகள் ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் அலுவலகம் தொடர்பான எல்லாப் பிரச்னைகளிலும் நல்லவிதமான பலன்களே நடைபெறும். ஆயினும் உயர் அதிகாரிகளுக்கு உங்கள் பேரில் நன்மதிப்பு இன்னும் ஏற்படச் செய்ய நீங்கள் முயற்சி செய்வது அவசியம்.
தொழிற்பிரிவினர்கள் தொழில்ரீதியான போட்டிகளைச் சந்திக்க நேர்ந்தாலும், முன்னேற்றத்தைக் காணமுடியும். நேரடியாக முயற்சிகள் செய்வதன் மூலம் கலைஞர்கள் புதிய வாய்ப்புகளைப் பெற்று மகிழ்வீர்கள்.
பெற்றோரைப் பரவசப்படுத்தும் வகையில் மணவர்கள் படிப்பில் தீவிர அக்கறை செலுத்துவீர்கள். குடும்பத்தில் அமைதிக்குக் குறைவிராது என்பதால் பெண்கள் களிப்படையத் தடையில்லை. குடும்பநிலையில் இனிமையான போக்கு நிலவி வரும்.
அரசியலில் விருப்பமுள்ளவர்கள் துணிந்து ஈடுபட ஏற்ற நேரம் இதுவாகும். எழுத்துத் துறையில் உள்ளவர்களில் சிலர் பரிசு, பாராட்டு பெற வாய்ப்புண்டு.
பரிகாரம்: செவ்வாய், வெள்ளிக்கிழமை தோறும் ராகு காலத்தில் துர்க்கைக்கு தீபமேற்றி வழிபட்டு வாருங்கள். உங்கள் சிரமங்கள் கதிரவனைக் கண்ட பனி போல விலகி செழிப்பான நிலை ஏற்படும்.
சந்திராஷ்டம தினங்கள்: 9.12.2012 ஞாயிறு பகல் 1.50 மணி முதல் 11.12.2012 செவ்வாய் மாலை 4.45 மணி வரை.

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.