உலகில் உள்ள தீவுகளை இரண்டு பிரிவுகளாக பிரிக்கலாம். ஒன்று கண்டம் சார்ந்தது; மற்றது சமுத்திரம் சார்ந்தது. கடலில் இருந்து துருத்தி கொண்டிருக்கும் கண்டங்களின் அடுக்கில், அங்கம் வகிப்பதுதான் கண்டம் சார்ந்த தீவுகள் எனப்படும். உதாரணத்திற்கு, பிரிட்டன் போன்ற நாடு ஒரு காலத்தில் அருகில் இருக்கும் கண்டத்தோடு மிக கீழ்நிலை நிலத்தால் இணைக்கப்பட்டு இருந்தது. அப்பொழுதிலிருந்து உயரும் கடல் நீர் மட்டத்தால் வெள்ளப் பாதிப்பிற்கு உள்ளானது. மடகாஸ்கர் போன்றவை, கண்டங்களின் அடுக்கின் பகுதிகளாக இருந்து உடைந்து, தனியாக நகர்ந்து, பின் இப்போது ஆழ் கடல் நீரால் சூழப்பட்டுள்ளது. கடல் சார்ந்த தீவுகள் வெடிப்பினால் உருவானது. பொதுவாக, சொல்வதென்றால் இவை கண்ட(ம்) தீவுகளை விட வயதில் சிறியவை. அதோடு இவை கடலின் வெகு தொலைவான இடத்தில் அமைந்திருக்கும். கலாபேகாஸ் மற்றும் ஹவாய் தீவுகளை இவற்றிற்கு உதாரணமாக சொல்லலாம். கடல் சார் தீவுகளுக்கென தாவரங்கள் உண்டு. அந்த தாவரங்களை தேடி வரும் விலங்குகள் அங்கு நிலவும் சூழலுக்கு ஏற்றபடி தங்களை மாற்றி கொள்கின்றன. நீர் மற்றும் நிலம் என இரண்டிலும் வாழும் சில விலங்கு கூட்டங்கள், இதுபோன்ற கடல் சார் தீவுகளில் காணப்படுவதில்லை. காரணம், அவைகளால் கடலில் தீவு நோக்கி பயணிக்கும் பயணத்தை மேற்கொள்ள முடிவதில்லை.
இசெபெல்லாவில் வாழ்பவர்
ஒவ்வொரு கலாபேகாஸ் தீவிலும் இது போன்ற பெரிய ஆமைகள் சிறு சிறு மாற்றங்களோடு காணப்படும்.
பவழப்பாறை!
கடல் சார்ந்த தீவுகள் தண்ணீரில் வாழும் உயிரினங்கள் மற்றும் நிலவாழ் உயிரினங் களுக்கு இருப்பிடமாய் இருக்கின்றன. இதுபோன்ற தீவில் கடலின் அலைக்கு பிறகு இந்த பவழப்பாறைகள் புதிதாய் உருவான வெப்ப மண்டல கடற்கரைகளில் உருவாகிறது. இந்த பாறைகள் காலவோட்டத்தில் நீர் மட்டத்திற்கு அருகில் உள்ள சிதைவு பாறை களாகிறது. இவைகள்தான் நாசம் விளைவிக்கும் கடலின் தாக்குதல்களிலிருந்து தீவினை காப்பாற்றுகிறது. சிதைவுப்பாறைகள் நீரடி வாழ் உயிரினங்களான நண்டு, நத்தை மற்றும் மீன் போன்ற உயிரினங்களுக்கு தங்குமிடமாகவும், உணவின் இருப்பிடமாகவும் திகழ்கிறது.
நான் அவன் இல்லை!
பெரும்பாலான கடல் சார்ந்த தீவுகளுக்கு அவைகளுக்கென பிரத்யேகமான தாவரங்களும், விலங்கினங்களும் உண்டு. பறவைகள், வவ்வால்கள் மற்றும் பூச்சிகள் காற்றால் அவ்விடத்திற்கு கொண்டு வரப்பட்டு இருக்கலாம். ஆனால், எந்த இனம் எப்போது வந்தது என்பது திட்டமிடப்படாத ஒன்று. இதே நிலைதான் நிலத்தில் வாழும் உயிரினங்கள், நிலத்தில் உணவு கிடைக்காத போது நீரில் காணப்படும் உணவை உண்ண வரும்போது ஏற்படுகிறது. இது போல புதிதாய் குடியேறும் உயிரினங்கள் புதிய சூழலுக்கு மிக வேகமாய் பொருந்திக் கொள்கின்றன. இது உயிரினங்களில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி விடுகின்றன. இவைகளில் சிலவற்றில் பெரிய மாற்றத்திற்குள்ளாகி, தன் இனத்திலிருந்து மாறுபட்டு, புதிய வகையாக மாறிவிடுகிறது.
கரையோரத் தாவரங்கள்!
இதுபோன்ற தாவரங்கள் சிலவற்றின் விதைகள் கடலில் பயணித்து, தீவின் கரையை அடையும் தன்மை உள்ளது. காற்றால் நிரப்பப்பட்டு, தடிமனான மிதக்கும் தன்மை உள்ள மேலோடு கொண்ட தேங்காய், நீண்ட தூரம் எந்த பாதிப்புமின்றி மிதந்து செல்லும் தன்மை உடையவை. கிளைகளில் இருந்து வேர்கள் உண்டாகும் வெப்ப மண்டல மரமான மாங்குரூவ் கடின சூழல்களை தாங்கும் விதைகளை உற்பத்தி செய்கின்றன.
இயற்கை பயணி:
தென்னை, பனை ஆகியவை கரையோரம் வளர்கின்றன. ஏனெனில், இவைகளின் விதைகள் கடலில் விழுந்து வேறு எங்காவது வளர ஏதுவாகிறது.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.
4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.