ஒருமுறை கடல் தன்னிடம் என்னென்ன மரங்கள் வந்து சேர்கின்றன என்று யோசித்துக் கொண்டிருந்தது. "ஆறுகள் வெள்ளப் பெருக்கெடுத்து வரும்போது எல்லா வகையான மரங்களையும் இழுத்து வருகின்றன. பெரிய பெரிய ஆல மரங்களும், அரச மரங்களும் அவற்றிடம் தப்பிப்பது இல்லை. இதுவரை எந்த ஆறும் நீர் நொச்சி மரத்தை என்னிடம் கொண்டு வந்தது இல்லை. என்ன காரணமாக இருக்கும்?' என்று சிந்தித்தது.
அதனால் எந்த முடிவுக்கும் வர முடியவில்லை. எல்லா ஆறுகளையும் அழைத்தது அது.
""நீங்கள் எல்லா வகையான மரங்களையும் இழுத்து வந்து என்னிடம் சேர்க்கிறீர்கள். அந்த மரங்களில் நீர் நொச்சி மரத்தை மட்டும் நான் பார்த்தது இல்லை. அந்த மரம் சிறிய மரம். உங்களை எதிர்த்து நிற்கும் ஆற்றல் அதற்கு இல்லை. நீங்கள் ஏன் அந்த மரங்களைக் கொண்டு வருவது இல்லை? அவை உங்களுக்கு ஏதேனும் உதவி செய்து உள்ளனவா? நன்றியாக நீங்கள் அவற்றைப் பிடுங்குவது இல்லையா? காரணம் தெரிந்து கொள்ளவே உங்களை அழைத்தேன்!'' என்றது.
அதற்கு கங்கை ஆறு, ""கடல் அரசே! நாங்கள் இழுத்து வந்த மரங்கள் எல்லாம் தற்பெருமை கொண்டவை. தங்கள் வலிமையால் எங்களை எதிர்த்து நின்றவை. அதனால் அவற்றை வேரோடு பிடுங்கி இழுத்து வந்தோம். நீர் நொச்சி மரங்களோ நாங்கள் வெள்ளப் பெருக்காக வருவதைப் பார்த்து, எங்களைப் பணிவாக வணங்குகின்றன. பிறகு தலை நிமிர்ந்து நிற்கின்றன. பணிவு உடையவர்கள் என்றும் அழிவது இல்லை; அவமானப்படுவதும் இல்லை. இது உங்களுக்குத் தெரியாதா?'' என்றது.
""நீ சொல்வது உண்மைதான். பணிவு உடையவர்களை யாராலும் அழிக்கமுடியாது!'' என்றது கடல்.
***
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.