நம்மில் பலருக்கு கத்தரிக்காயை பிடிக்கவே பிடிக்காது இல்லையா. இதை "சொறி காய்' என்றே சொல்வர். அலர்ஜி உள்ளவர்கள் இதை சாப்பிடமாட்டார்கள். அதன் குணநலன்களை தெரிந்து கொண்ட பின், நிச்சயம் அப்படி சொல்லவே மாட்டீங்க. ஐ லவ் யு கத்தரி என்றுதான் சொல்வீங்க.
கத்தரிக்காய் ஊதா, பச்சை, வெள்ளை போன்ற நிறங்களில் இருக்கின்றன. இப்படி பல நிறங்களில் இருந்தாலும் சத்து என்னவோ அனைத்திலும் ஒன்று தான்!
எப்போதும் முற்றிய கத்தரிக்காய்களை சமையலுக்கு பயன்படுத்தக் கூடாது. அப்படியே சமைத்தாலும் அளவோடுதான் அதை சாப்பிட வேண்டும். ஏனென்றால், இவைதான் உடலில் அரிப்பையும், சொறி சிரங்கையும் ஏற்படுத்தும். அதனால், பிஞ்சு கத்தரிக்காய் தான் சமையலுக்கு சிறந்தது.
கத்தரிக்காயில் புரதம், கால்ஷியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ் போன்றவை உள்ளன. மேலும், வைட்டமின் ஏ, பி1, பி2, சி ஆகியவையும் அடங்கியுள்ளன. வைட்டமின்கள் அதிகம் இருப்பதால் நாக்கில் ஏற்படும் அலர்ஜியை போக்கும்.
ஸ்ட்ரோக், ஆஸ்துமா, ஈரல் நோய், சளி, பித்தம், கரகரப்பான குரல், மலச்சிக்கல் போன்றவற்றை குணப்படுத்தும். மேலும், உடல் பருமனை குறைக்கும். உடல் சோர்வு இருக்காது. மூச்சு விடுவதில் சிரமம், தோல் மரத்துப் போவது போன்றவை தடுக்கப்படும்.
கத்தரிக்காயை எப்படி பார்த்து வாங்குவது?
காம்பு நல்லா பச்சையாக இருக்க வேண்டும். காயை மெல்ல அழுத்தினால் மெத்து மெத்தென்று இருக்க வேண்டும். அழுத்தமாக இருப்பதில் விதை இருக்கும். அதை வாங்க கூடாது. ரகசியம் தெரிஞ்சிடிச்சா? இனி கத்தரிக்காய் மசாலா, வறுவல் என செய்து அசத்துங்க!
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.