இது உங்கள் இடம்!
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

16 டிச
2012
00:00

கிளி போல மனைவி இருந்தாலும்...


என் தோழியின் கணவர், அலுவலகத்திற்கு செல்லும் போதெல்லாம், எதிர் வீட்டு பெண், ஏதேனும் ஒரு காரணமாக வெளியே வருவாள். மிகவும் சுமாராக இருப்பாள். தோழியோ நல்ல அழகி. எனவே, விளையாட்டுத்தனமாக, "அந்த பெண் உங்களையே விழுங்கி விடுவது போல் பார்க்கிறாள்...' என்று தினமும் கிண்டல் பண்ணியிருக்கிறாள் தோழி.
ஆரம்பத்தில் அதை பொருட்டாக மதிக்காதவர், நாளைடைவில் மனம் மாறி, இப்போது இருவருக்கும் தொடர்பு ஏற்பட்டு விட்டது. "அவளை திருமணம் செய்து கொள்ள போகிறேன். சம்மதம் என்றால் வீட்டில் இரு. இல்லையெனில், விவாகரத்து செய்து கொள்வோம்...' என்று மிரட்டும் அளவுக்கு நிலமை முற்றி விட்டது.
காதல் திருமணம் செய்து கொண்டதால், பெற்றோர் ஆதரவும் இன்றி, வேறு வழியில்லாமல் அவர்களுக்கு வேலைக்காரி போல, ஒரே வீட்டில் இருக்கிறாள் தோழி. ஆண்களின் மனம் குரங்கு போன்றது. எனவே, எதைப் பேசினாலும் யோசித்து பேசுங்கள் பெண்களே!
திவ்யா சுரேந்தர், மதுரை.

ரெப்ரெஜிரேட்டரில் வைத்த அப்பளம்!


"நண்பர் ஒருவரின் வீட்டுக்கு, நண்பகல் நேரத்தில் சென்றிருந்தேன். அனைவரும் ஒன்றாக அமர்ந்து, உணவருந்திக் கொண்டிருந்தனர். நண்பரின் மனைவி, பொரித்துக் கொண்டு வந்து பரிமாறிய அப்பளம், ஒரு குழந்தையின் தட்டில் போடும் போது, உடைந்து விட்டது.
"உடைந்த அப்பளம் வேண்டாம். எனக்கு, உடையாத அப்பளம் தான் வேண்டும்...' என்று, குழந்தை அழத் தொடங்கியது. "முழு அப்பளத்தையா முழுங்கப் போகிறாய்? உடைத்து, உடைத்துத்தானே சாப்பிடப் போகிறாய். அதையே சாப்பிடு...' என்றார் நண்பரின் மனைவி.
குழந்தை மறுத்தது. இருவரும் அவரவர் நிலையில் உறுதியாக இருக்க, மனைவிக்காக பரிந்து பேசினார் நண்பர். "எனக்கு முழு அப்பளம் தான் வேண்டும். நான் முழுசாகவே அதை சாப்பிடுவேன்...' என்றது குழந்தை.
அனைவருக்கும் ஆச்சரியம். சரி, என்னதான் நடக்கிறது. எப்படி சாப்பிடப் போகிறது என்ற ஆர்வ மிகுதியால், ஒரு முழு அப்பளத்தைப் பொரித்துக் கொடுக்கச் சொன்னார் நண்பர். அப்பளத்தை கையில் வாங்கிய குழந்தை, அதை எடுத்துச் சென்று, ரெப்ரெஜிரேட்டரின் சில்லர் தட்டில் ஐந்து நிமிடங்கள் வைத்திருந்து எடுத்து வந்தது. இப்போது, அப்பளம் அப்படியே துணி மாதிரி மடிக்கும் பக்குவத்தில் இருந்தது.
"இப்ப பாருங்க... முழு அப்பளத்தை எப்படி நான் சாப்பிடுறேன்னு...' என்று சொல்லி, அப்பளத்தை மடித்து, வாய்க்குள் போட்டு, சாப்பிடத் துவங்கியது. நாங்கள் பிரீசரில் வைத்த மாதிரி, உறைந்து @பா@னாம்.
— மு.தட்சிணாமூர்த்தி, வேணுகோபாலபுரம்.

இன்று பேச மாட்டேன்


என் நண்பன், ஒரு தொழிலதிபர். என்னை விட ஐந்து வயது இளையவன். ஐந்து ஆண்டுகளுக்கு முன், அவன் உயிர்க்கொல்லி நோய் ஒன்றால் பீடிக்கப்பட்டு, தெய்வாதீனமாய் தப்பினான். நேரம் கிடைக்கும் போதெல்லாம், அவனுடன் போனில் பேசுவேன்.
ஒரு ஞாயிறு, காலை 8.00 மணிக்கு அவனுக்கு போன் பண்ணினேன். நண்பனின் மகன் போனை எடுத்தான். "அப்பா இப்ப பேசமாட்டாரு...' என்றான். "நான் அவனின் <உயிர் நண்பன்...' என்றேன். "கடவுளே பேசினாலும், அப்பா பேசமாட்டார். ஏன்னா ஞாயிற்றுகிழமை அப்பா மவுன விரதம் இருக்காரு...' என்றான்.
இன்னொரு நாள், நண்பனை நேரில் சந்தித்து, இது பற்றி வினவினேன். அதற்கு அவன், "உயிர் பிழைக்க வைத்த கடவுளுக்கும், எமனுடன் போராடி, என்னுயிரை மீட்ட என் மனைவிக்கும், நான் உயிர் பிழைக்க வேண்டும் என பிரார்த்தித்த நல்லுள்ளங்களுக்கும் நன்றி செலுத்த, இந்த மவுன விரதம். இந்த மவுன விரதம், உயிர் காக்கும் தொடர் மருந்தாக செயல்படுகிறது.
"தவிர, மன உறுதியை வளர்க்க, கோபம் குறைக்க, நன்றியுணர்வு பேண, இவ்வுலகில் இருந்தும், இல்லாமல் வாழ்ந்து பார்க்க, என் மவுனவிரதம் பயன்படுகிறது...' என்றான். இப்போதெல்லாம், வாரம் ஒரு முறை, நானும் மவுன விரதம் இருக்கிறேன்.
— பரந்தாமன், செய்யாறு.

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (9)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ramachandran n - madurai,இந்தியா
18-டிச-201211:25:30 IST Report Abuse
ramachandran n மௌன விரதத்திற்கு சம்பளம் கொடுப்பாங்களா பாஸ் ?
Rate this:
Share this comment
Cancel
srinivasan sulochana - nsw2147,ஆஸ்திரேலியா
17-டிச-201209:25:37 IST Report Abuse
srinivasan sulochana 1) மௌனவிரதம் பற்ரிய கடிதம் நன்றாக உள்ளது. வாசகர் ராமன் அவர்களின் ஆலோசனையுடன் அது முழுமை பெறுகிறது. மிகவும் உபயோகமான விஷயங்கள். முயற்சிக்க நினைக்கிறேன்.
Rate this:
Share this comment
Cancel
Suresh kumar - chennai,இந்தியா
16-டிச-201223:20:25 IST Report Abuse
Suresh kumar இந்த வாரம் இடம் பெற்ற அனைத்து பகுதிகளும், சிறப்பாக இருந்தது. குறிப்பாக பரிசு கடிதங்கள் கதாசிரியர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.வார வாரம் புது வாசனை தரும் வாரமலர்.
Rate this:
Share this comment
Cancel
Rajagiri.Siva - Sharjah,ஐக்கிய அரபு நாடுகள்
16-டிச-201212:22:51 IST Report Abuse
Rajagiri.Siva சிந்திக்க இயலாத ஒரு காரியத்தை செய்து காட்டிய குழந்தையின் புத்திசாலிதனத்தையும், சுட்டித்தனத்தையும் வெகுவாக பாரட்ட தான் வேண்டும்...
Rate this:
Share this comment
Cancel
GOWSALYA - DENHEDLER,நெதர்லாந்து
16-டிச-201204:29:11 IST Report Abuse
GOWSALYA இதென்ன விபரீதம்?...அப்படி மனம் மாறும் அந்த ஆண்,அவளையும் விட்டு வேறு ஒருத்தியுடன் போகமாட்டார் என்று என்ன நிச்சயம்?...இத்தோடு அவள் தப்பினாள்...ஆனால் அவள் படித்தவளா இருந்தா தனியாக இருந்து வேலை செய்யலாம் தானே....?..மௌனவிரதம் இருப்பது மிகவும் நன்மைதரும் என்பது உண்மைதான்.ஆனால்,பல பெண்களால் அது ...[ பெண்களே என்மேல கோபம் வேண்டாம் ,உண்மையை சொன்னேன் ] முடிவதில்லை.
Rate this:
Share this comment
Cancel
Raman - Chennai,இந்தியா
16-டிச-201202:54:14 IST Report Abuse
Raman @பரந்தாமன் - மௌன விரதம் இருக்க முயற்சி செய்தவன் என்ற முறையில் என் கருத்தினை சொல்கிறேன். இன்றைய நவீன உலகில், எங்கும் சப்தம் நிறைந்திருக்கும் சூழலில் பேசாமல் இருப்பது மிகவும் கடினமான செயல். பாராட்ட வேண்டும். ஒரு விதத்தில் அது stressful ஆன செயல். ஒரு வேலை பழக பழக செய்ய முடியுமோ என்னவோ, ஆனால் மௌன விரதம் (விரதம் என்றால் தெய்வம் சம்பந்தப்பட்டது அல்ல) என் BP ஐ அதிகம் ஆகியது உண்மை. வாய் விட்டு கத்துவது. பேசி சிரிப்பது போன்றவை இயற்கையான செயல்கள். நாம் இயற்கையை மீறி, மாற்றி செயல் படும் பொழுது நம் உடல் அதனை ஏற்காது. எதிர் விளைவுகளை உருவாகும். எடுத்தவுடன் ஒரு நாள் விரதம் என்று ஆரம்பிக்காது, முக வின் உண்ணாவிரதம் போல மூன்று மணி நேரம், ஆறு மணி நேரம், பகல் பொழுது என்று மெதுவாக முன்னேறுவது நல்லது. ஒரு Suggestion. ஒரு நாள் பார்வை இல்லாதவராக இருந்து பாருங்கள். செய்து இருக்கிறேன். எத்தனை கடினமான வாழ்கையை சர்வ சாதாரணமாக பழகி அவர்கள் வென்று வருகிறார்கள். அவர்கள் மேல் இருந்த பரிதாபம் போய் மதிப்பு வந்தது அன்று.
Rate this:
Share this comment
Mohamed Yunus - Chennai,இந்தியா
16-டிச-201210:52:09 IST Report Abuse
Mohamed Yunusஇதற்கும் முக வா? liked it.....
Rate this:
Share this comment
குட்டி chuvar - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
18-டிச-201222:16:39 IST Report Abuse
குட்டி chuvarபார்வையற்றவனாக ஒரு நாள் இருப்பது நல்ல விஷயம் தான். மௌன விரதத்தின் ஒரு மூல காரணம் உங்களின் உணர்ச்சிகளை நீங்கள் கட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்பதுதான்.மௌன விரதம் இயற்கையை மாற்றி ஒருவர் செய்யும் செயல் என்றால் இயற்கையாக பார்வை இருக்கும் கண்களை மூடி ஒரு நாள் வாழ்வதும் இயற்கையை மீறி செயல்படுவதுதான். ஏன், வாய் பேச இயலாமல், வாய் விட்டு சிரிக்க இயலாமல், வாய் விட்டு கத்த இயலாமல் எதனை கடினமான வாழ்கையை சர்வ சாதாரமாக பழகி அவர்கள் வென்று வருகிறார்கள் என்றும் புரிந்து அவர்கள் மேல் இருந்த பரிதாபம் போய் மதிப்பு வரவில்லை? இதில் நிறைய வாய் பேச இயலாதவர்களுக்கு காதும் கேட்காது...உங்களால் முடியவில்லை என்பதால் ஒரு செயலை இயற்கையை மீறிய செயல் என்று கூறாதீர்கள்....
Rate this:
Share this comment
Raman - Chennai,இந்தியா
20-டிச-201206:16:49 IST Report Abuse
Ramanஒரு நாள் பார்வை அற்றவராக இருந்து பார்ப்பது சோதனை. அதன் மூலம் நான் (ஒருவர்) எதனையும் achieve பண்ண நினைப்பது இல்லை. அவர்களை போல இருக்க முனைந்து அந்த கஷடங்களை உணர்வது - அத்தகைய கஷ்டங்களோடு எப்படி அவர்கள் தினமும் வாழ்கிறார்கள் என்பதை உணர்வது. அதன் மூலம் அவர்களை வேறு தளத்தில் மதிக்க தோன்றும். அதுவும் என் தனிப்பட்ட ஒருவனின் மதிப்பீடு. வாய் பேசாது ஒரு நாள் சோதனை (அது ஊமைகளின், செவிட்டு-ஊமைகளின் - வாய் பேசாதவர், காது கேளாதவர் இவர்களின் தினப்படி கஷடங்களை அறிய) அல்லாது அதன் மூலம் எத்தனையோ அடைய முயல்வது மிக பெரிய வித்தியாசம். அதனை செய்ய வேண்டாம் என்று சொல்லவில்லை, மெதுவாக செய்யவும் என்றேன். சோதனை வேறு, இது வேறு. விரதம் என்பதன் மூலம் ஒரு பிரதி பலனை எதிர் பார்ப்பதில் இருக்கிறது தவறு. விரதம் இருந்தால் உணர்வுகளை கட்டுபடுத்தலாம் என்ற எதிர்பார்ப்பு. அது வித்தியாசம். There is a HUGE difference between experimentation - being blind one day to feel the handicap - and EXPECTATION. In the act of living like a blind for a day (even 3 hrs) there is NO expectation to achieve something....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.