அந்துமணி பதில்கள்
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

16 டிச
2012
00:00

** எஸ்.ரவிக்குமார், பாளை: வாழ்க்கையில் உயர என்ன வழி?
உழைத்துக் கொண்டே இருக்க வேண்டும் - புத்திசாலித்தனத்துடன்! இன்று உள்ள பொருளாதார நெருக்கடியில், உழைப்பவர்களைத் தவிர மற்றவரால் உயரமுடியாது! செய்ய வேண்டிய வேலையைத் தள்ளிப் போட்டுக் கொண்டே இருப்பவர்கள், படுபாதாளத்தில் விழுவர்!
***

*வி.சாந்தி, அருப்புக்கோட்டை: நம் நாட்டில் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் மக்கள் எவ்வளவு பேர் இருப்பர்?
நம்நாட்டு மக்கள் தொகை நூத்து பதினேழு கோடி! இதில், 30 சதவீதம் பேர், அதாவது, 30 கோடிக்கு கொஞ்சம் அதிகம் பேர், வறுமைக்கு கோட்டுக்கு கீழ் உள்ளனர்!
***

*பி.நாகரத்தினம், பாலக்காடு: "வயாகரா' போன்ற இந்திய, "இளமை' மாத்திரைகளின் விற்பனை, "டல்!' ஆகி விட்டதாமே...
இங்கு, தமிழ்நாட்டில் தான், "டல்!' வட மாநிலங் களில், கன ஜோராக விற்பனையாகிறது. இந்திய, "வயாகரா'க்கள், 19 வகை இப்போது விற்பனையில் உள்ளன. வரும் 2015ல், இவற்றின் விற்பனை, 200 கோடி ரூபாயை எட்டும் என்கின்றனர்!
***

** பி.பாலமுருகன், சிவகங்கை: பி.பி.சி., சி.என்.என்., போன்ற செய்தி ஒளிபரப்புகளில், சில நாடுகளில் நடக்கும் உள்நாட்டுச் சண்டைகளில் சிறுவர்கள் கூட, ஏ.கே 47 துப்பாக்கி ஏந்தி போர் புரிகின்றனரே...
உண்மைதான்... உலக நாடுகள் பலவற்றில் நடக்கும் உள்நாட்டு, வெளி நாட்டுடனான சண்டைகளில், 18 வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமியர் மூன்று லட்சம் பேர் உள்ளதாக ஐ.நா., கணக்கிட்டுள்ளது. இவர்களை போரில் இருந்து விடுவிக்கும், ஐ.நா.,வின் முயற்சிகள் அனைத்தும், தோல்வியே என, "ஹூயூமன் ரைட்ஸ்' அமைப்பின் அறிக்கை தெரிவிக்கிறது!
***

* ஆர்.வினோதினி, திருச்சுழி: படித்தவரிடையே மண முறிவு அதிகமா? பாமரரிடமா?
பாமரர் கோர்ட்டுக்குப் போய் விவகாரத்துப் பெரும்பாலும் பெறுவதில்லை... தாலியைக் கழற்றி கொடுத்து விட்டுப் போய் விடுவதால், அவர்கள் பற்றிய ஆதாரப்பூர்வ கணக்கு ஏதும் கிடைப்பதில்லை. படித்தவர்களிடையே, அதுவும் அறிவு ஜீவிகளாகத் தம்மைக் கருதிக் கொள்ளும் பெங்காலிகளிடையே விவாகரத்து அதிகரித்துள்ளது. கோல்கட்டாவிலுள்ள, "பேமிலி கோர்ட்டு'களில் வழக்குகள் அதிகளவில் பதிவாகியுள்ளன!
***

*கே.சந்திரசேகர், பொள்ளாச்சி: * நம் மக்கள் தங்கள் உரிமைகளை உணர்ந்திருக்கின்றனரா?
அதெல்லாம் நன்றாகவே தெரிந்திருக்கிறது. ஆனால், கடமைகளை, "கன்வீனியன்டாக' மறந்து விட்டது போல நினைக்கின்றனர். ஓட்டுப் போடக் கூட வர மறுக்கின்றனர் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்!
***

*ஏ.சபாபதி. சூலக்கரை: திருமணத்திற்குப் பின், நடிகைகள் மட்டும் வாய்ப்புகளை இழக்கின்றனரே... ஏன்?
லட்டு லட்டாக புதுமுகங்கள், "க்யூ'வில் காத்திருக்கின்றனர்... எந்த உடையும் அணியத் தயாராக உள்ளனர்... எதைக் காட்டவும் உடன்படுகின்றனர்! அவர்களை விட்டு விட்டு, திருமணத்தால் ரசிகனின் மனதை விட்டுப் போன நடிகைக்கு வாய்ப்பளிக்க, தயாரிப்பாளரென்ன ஒன்றும் தெரியாத பப்பாவா?
***

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
karunamoorthy - Palani,இந்தியா
22-டிச-201201:03:02 IST Report Abuse
karunamoorthy உங்களுடைய பதில்களில் எப்பொழுதும் ஒரு "அறிவாளித்தனம்" ஒளிந்து உள்ளதே?
Rate this:
Share this comment
Cancel
vidhyadhar - chennai,இந்தியா
17-டிச-201219:24:16 IST Report Abuse
vidhyadhar கடைசி கேள்விக்கு பதில் நீங்களாக சொன்னீர்களா அல்லது எப்போதும் போல் "லென்ஸ் மாமா சொல்கிறார்" என்று போடுவீர்களே
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.