"ஹெல்லோ கிட்டி' என்ற, கற்பனை பெண் பூனை கதாபாத்திரம், உலகம் முழுவதும் உள்ள, குழந்தைகளிடையே, மிகவும் பிரசித்தம். இந்த கற்பனை கதாபாத்திரம், கார்ட்டூன்களிலும், "டிவி' சீரியல்களிலும், ஒளிபரப்பாகி வருகிறது.
குழந்தைகளுக்கான பொம்மை கடைகளிலும், இந்த "ஹெல்லோ கிட்டி' பொம்மை விற்பனை சக்கை போடு போடுகிறது. குழந்தைகளுக்கு வேண்டுமானால், இந்த பொம்மைகள் மீது, ஆர்வம் இருக்கலாம். ஆனால், ஜப்பானை சேர்ந்த, ஆகோ கண்டா என்ற, 39 வயது பெண், "ஹெல்லோ கிட்டி' மீது, பைத்தியமாகவே ஆகி விட்டார்.
இந்த பொம்மைகள், கண்ணில் எங்கு தென்பட்டாலும், உடனடியாக அதை விலைக்கு வாங்கி, தன் வீட்டில் வைத்து விடுவார். இதுவரை, 4,519 பொம்மைகளை வாங்கி, தன் வீட்டில், அடுக்கி வைத்துள்ளார். இதன் மூலம், கின்னஸ் சாதனை புத்தகத்திலும், இவரது பெயர் இடம் பெற்று விட்டது.
ஓய்வு நேரம் கிடைக்கும்போதெல்லாம், இந்த பொம்மைகளுடன், கொஞ்சி விளையாடுவது தான், இந்த பெண்ணின் பொழுதுபோக்கு. "என்னுடைய இந்த விசித்திரமான பழக்கத்தால், என் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுவது உண்மை தான். ஆனால், சிறு வயதில் துவங்கிய ஆசையை, என்னால் விட முடியவில்லை....' என்கிறார், ஆகோ கண்டா.
— ஜோல்னா பையன்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.