திண்ணை!
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

16 டிச
2012
00:00

ராஜாஜி கவர்னர் ஜெனரலாக இருந்த போது, தஞ்சை ஜில்லா திருவையாறில் நடைபெற்ற, தியாக பிரம்ம விழாவை ஆரம்பித்து வைக்க அழைக்கப்பட்டார். அப்போது, வடநாட்டு எதிர்ப்பையும், ஆஸ்திக எதிர்ப்பையும் ஒருங்கே காட்டும் வகையில், ராஜாஜிக்கு கருப்புக் கொடி காட்டுவது என்று, "கழகத்தினர்' தீர்மானம் நிறைவேற்றி, பெரும் அளவில் விளம்பரங்கள் செய்து, பல்லாயிரம் தொண்டர்களை, தஞ்சைக்கு வரச் செய்தனர். தஞ்சையிலிருந்து, திருவையாறு வரை, ஆயிரக்கணக்கானோர், கையில் கருப்புக் கொடியுடன் திரண்டு நின்றனர்.
ராஜாஜியை தஞ்சையிலிருந்து பந்தோபஸ்தாக, திருவையாறு வரை அழைத்துச் சென்று, திரும்ப அழைத்து வந்து, வழியனுப்புவது பற்றி, மாவட்ட கலெக்டரும், போலீஸ் அதிகாரிகளும், மற்ற பிரமுகர்களும் கலந்து பேசினர். பக்கத்து மாவட்டங்களிலுள்ள போலீசை எல்லாம் தருவித்து, மிக விரிவான அளவில் பந்தோபஸ்து ஏற்பாடுகளை செய்திருந்தனர்; இருந்தும் என்ன நடக்குமோ, ஏது நடக்குமோ என்று கவலை கொண்டனர். ஆயிரக்கணக்கான கருப்புக் கொடியினரைக் கண்டதும், கவலை, அச்சமாக மாறியது.
கலெக்டரும், அதிகாரிகளும் அவசரம் அவசரமாக மீண்டும் கூடி விவாதித்து, ஒரு முடிவுக்கு வந்தனர். ஏற்கனவே முடிவு செய்துள்ள சாலையில் செல்லாமல், மாற்று வழியாக, எதிர்ப்பாளர்களுக்கு ஏமாற்றம் தரும் வகையில், ராஜாஜியை அழைத்துச் சென்று விடுவது என்பதே அது.
தயக்கத்துடன் இந்த யோசனையை, ராஜாஜியிடம் தெரிவித்தனர். ராஜாஜி, உடனே, கலெக்டர் மற்றும் தலைமைப் போலீஸ் அதிகாரியை அழைத்து, "பயப்படாமல் நான் சொல்வது மாதிரி செய்யுங்கள்; முன் திட்டமிட்ட சாலை வழியாகத் தான் செல்ல வேண்டும். யாருக்கும் ஏமாற்றம் தரத் தேவையில்லை. முன் ஜாக்கிரதையாக, நான் சொல்வதை மட்டும் கண்டிப்பாகச் செய்து விடுங்கள்.
"அதாவது, சாலையெங்கும் பரவலாக நிற்கும், கொடி தாங்கிய ஆர்ப்பாட்டக்காரர்களை எல்லாம், சாலையின் ஒரு பக்கமும், பொதுமக்களையும், ஆதரவாளர்களையும் சாலையின் மறுபக்கமும், வரிசையாகப் பிரித்து நிற்க வைத்து, வரவேற்கவும், எதிர்க்கவும் அவர்களை தடுக்காமல் இருங்கள்.
"இவர்களில் அவர்களோ, அவர்களில் இவர்களோ கலக்காதபடி, எவ்வளவு ஒதுக்க முடியுமோ, அந்த அளவிற்கு சாலையின் இருபுறமும், ஒதுக்கி விடுங்கள்' என்று கூறி, அவர்களை ஊக்கப்படுத்தி அனுப்பினார்.
அவர்களும் அதே மாதிரி செய்து, இவர்களுக்குப் பாதுகாப்பான ஓரங்களில் போலீஸ்காரர்களையும் வரிசையாக நிறுத்தி விட்டனர். கருப்புக் கொடி காட்ட வந்தவர்கள், பல ஊர்களில் இருந்தும் வரும்போது, கைப்பைகளில் கருப்புச் சட்டையும், கொடிகளையும், சிறு கம்புகளையும் மறைத்து வந்து, தஞ்சை திருவையாறு சாலைக்கு வந்ததும், திடீரென்று மாற்றி அமைத்து விட்டதால், ஆர்ப்பாட்டக்காரர்களை, அடையாளம் கண்டு முன்னதாகவே போலீஸ்காரர்களால் பிடிக்கவோ, தடுக்கவோ முடியவில்லை.
ஆனால், ராஜாஜி சொன்னது போல், அவர்களைப் பிடிக்காமல், தடுக்காமல், இப்படி தனித்தனியாக ஒழுங்குபடுத்தியதில், இரு தரப்பினருக்கும் ஓரளவு மகிழ்ச்சியே. ராஜாஜி திறந்த காரில், தஞ்சையிலிருந்து திருவையாறு வரை, 10 மைல் தூரமும், அந்தக் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டக்காரர்கள் பக்கம் திரும்பி, முகமலர்ச்சியுடன் கைகுவித்துக் கும்பிட்டபடியே இருந்தார். ராஜாஜியை வழக்கமாகத் திட்டும், அந்தக் கேவலமான கோஷ வார்த்தைகளையே முழங்கினர். இருந்தும், அவர் முகச்சுளிப்பையோ, வெறுப்பையோ காட்டாமல், அவர்கள் பக்கம் கை குவித்தபடி சென்றார்.
அவர்களது எதிர்ப்பை, அவர் மதித்து ஏற்றுக்கொண்டது, எதிர்ப்பாளர்களிடையே தீவிரத்தைக் குறைத்து விட்டது. திருவையாறு விழாவில், அவர் கலந்துவிட்டுத் திரும்பி வரும்போது, ஆர்ப்பாட்டக்காரர்கள் முற்றிலும் கலைந்து, சாலையெல்லாம் அமைதியாக இருந்தது.
பரந்தாமன் எழுதிய, "ராஜாஜி' என்ற நூலிலிருந்து...

நடுத்தெரு நாராயணன்

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sundararaman - chennai,இந்தியா
16-டிச-201210:51:24 IST Report Abuse
sundararaman அதாலதான் அவர சானக்கியன்னு சொல்றாங்க
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.