இதப்படிங்க முதல்ல...
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

16 டிச
2012
00:00

"காமெடி சூப்பர் ஸ்டார்' சந்தானம்!


வடிவேலு, தன் பெயருக்கு முன், "வைகைப் புயல்' என்று அடைமொழி வைத்திருப்பது போல், சந்தானத்தையும், "காமெடி சூப்பர் ஸ்டார்' என்று அடைமொழி வைக்குமாறு, சேட்டை படக்குழுவினர் கேட்டுக் கொண்டனர். அதனால், இது சம்பந்தமாக ரஜினியிடம் அனுமதி கேட்டுள்ளார் அவர். அதற்கு ரஜினி, "சூப்பர் ஸ்டார்' பட்டம் எனக்கு மட்டுமா பட்டா போடப்பட்டுள்ளது. யார் வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம்...' என்று சொல்ல, காமெடி சூப்பர் ஸ்டாரை தன் பெயருக்கு முன் சேர்த்து விட்டார் சந்தானம்.
சினிமா பொன்னையா

ஹன்சிகா மறைமுக மிரட்டல்!


பிரியாணி படத்தில், தான் இருக்கும்போதே இன்னொரு ஹாலிவுட் நடிகையையும் இணைத்திருப்பதால், அதிர்ந்து விட்டார் ஹன்சிகா. அதனால், அப்பட டைரக்டர் வெங்கட் பிரபுவிடம், "என் மார்க்கெட் உச்சத்தில் இருக்கிறது. இந்த நேரத்தில், ஹாலிவுட் நடிகைக்கு முக்கியத்துவம் கொடுத்து, என்னை டம்மியாக்கி விடாதீர்கள்...' என்று கேட்டுக் கொண்டுள்ளார் ஹன்சிகா. அதோடு, "என்னை டம்மியாக்குவது போல் தெரிந்தால், படத்திலிருந்து விலகி விடுவேன்...' என்றும் மறைமுக மிரட்டல் விடுத்துள்ளார். இருப்பது எல்லாம் இருந்துவிட்டு, இளிச்சவாயன் ஆவானேன்!
எலீசா

அதிரடி வேடத்தில் பூமிகா!


தெலுங்கில் வெற்றி பெற்ற, கலெக்டர்காரு பாரியா என்ற படம், பெண் அடிமை இல்லை என்ற பெயரில் தமிழில், "டப்' ஆகிறது. இப்படத்தில், பிரகாஷ்ராஜின் மனைவியாக நடித்துள்ள பூமிகா, ஆண்களுக்கு, பெண் அடிமை இல்லை என்று குரல் கொடுப்பதோடு, சமையலறை வேலைகள் பெண்களுக்கு மட்டுமே உரியது இல்லை, என்ற நிலையை மாற்றிக் காட்டும் அதிரடி வேடத்தில் நடித்துள்ளார்.
எலீசா

விஜய்யுடன் இணையும் மோகன்லால்!


மம்மூட்டி, ஜெயராமை தொடர்ந்து, மோகன்லாலும், தமிழில் அதிக படங்களில் நடிக்க வேண்டுமென்ற ஆர்வத்தில் உள்ளார். ஏற்கனவே, பாப்கார்ன் மற்றும் உன்னைப்போல் ஒருவன் படங்களில் நடித்தவர், விஜய் நடிக்கும் படமொன்றிலும், நடிக்க இருக்கிறார். தற்போது, ஏ.எல்.விஜய் இயக்கத்தில், விஜய் நடிக்கும் பட வேலைகள் முடிந்ததும், அப்படவேலைகள் துவங்க இருக்கின்றன.
சி.பொ.,

இலியானாவுக்கு சிபாரிசு!


இந்தி படங்களில் முழு வீச்சில் இறங்கிவிட்ட இலியானா, போன வேகத்திலேயே, அதிரடி டூ-பீஸ் நடிகையாக உருவெடுத்துள்ளார். அதோடு, உதட்டு முத்தக்காட்சிகளில் நடிக்கவும் முழு ஒத்துழைப்பு கொடுக்கிறார். இதனால், பாலிவுட் இளவட்ட ஹீரோக்களுக்கு, இலியானாவுடன் நடிப்பதில் அதிக ஈர்ப்பு ஏற்பட்டு, ஆளாளுக்கு சிபாரிசு செய்து வருகின்றனர். வந்தவுடன் மாமியார் பந்து அடித்தாள்; வர வர மாமியார் கழுதைபோல் ஆனாள்!
எலீசா

வில்லி மந்த்ரா!


சிம்புவின், வாலு படத்தில், ரீ-என்ட்ரி ஆகியுள்ள மாஜி ஹீரோயின் மந்த்ரா, ஒன்பதுல குரு படத்தில், வில்லி வேடத்தில் நடிக்கிறார். அதிரடியான வில்லி வேடம் என்றாலும், கிளைமாக்சில் சென்டிமென்ட் நடிப்பையும் வெளிப்படுத்தும் மந்த்ரா, இதைத் தொடர்ந்து, முழுநேர கேரக்டர் நடிகையாக உருவெடுக்கப் போவதாக கூறுகிறார். அதனால், "அம்மா வேடம் தவிர, எந்த மாதிரி வித்தியாசமான கேரக்டர்களிலும் நடிப்பேன்...' என்றும் கூறி வருகிறார். போனது போல வந்தாராம் புது மாப்பிள்ளை!
எலீசா

சிம்ரன் புது பிசினஸ்!


சினிமாவில், "பிசி'யாக நடித்து வந்தபோதே, பல இடங்களில் அசையா சொத்துக்களை வாங்கி குவித்திருந்தார் சிம்ரன். அதில், சென்னை, ஈ.சி.ஆர்., சாலையில் உள்ள இவரது இடத்தில், தற்போது பிரமாண்டமான பங்களா கட்டி, குடும்பத்தோடு குடியேறியுள்ளார். மேலும் சில இடங்களில், காம்ப்ளக்ஸ் கட்டி, வாடகைக்கு விடும் முயற்சியிலும் ஈடுபட்டிருக்கிறார் சிம்ரன். கூந்தல் உள்ள சீமாட்டி வலக்கொண்டையும் போடுவாள்; இடக் கொண்டையும் போடுவாள்!
எலீசா

மீண்டும் மனோரமா!


1,200 படங்களுக்கு மேல் நடித்து, கின்னஸ் சாதனை நடிகையான மனோரமா, சிறிய இடைவெளிக்கு பின், ஹரி இயக்கும், சிங்கம் - 2 படத்தில் நடிக்கிறார். மேலும், 1975ல், குன்வாராபாப் என்ற இந்தி படத்தில் நடித்தவர், 37 ஆண்டுகளுக்கு பின், மீண்டும் இந்தியில் ஷாரூக்கான் நடிக்கும், சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் நடிக்கிறார்.
சினிமா பொன்னையா

அவ்ளோதான்!

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (3)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Aleem Raja - kampala,உகான்டா
16-டிச-201215:39:24 IST Report Abuse
Aleem Raja தனக்குதானே பட்டம்....இதெல்லாம் ஒரு பிழைப்பு.......
Rate this:
Share this comment
Cancel
sivasankaran - Abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
16-டிச-201213:17:15 IST Report Abuse
sivasankaran காமெடி superstar - இந்த வருடத்தின் 2வது காமெடி. (No :1- பவர் ஸ்டார்).. விளக்கமாற்றுக்கு பேரு பட்டு குஞ்சமாம். சிவா
Rate this:
Share this comment
Cancel
Natarajan Iyer - chennai,இந்தியா
16-டிச-201207:23:28 IST Report Abuse
Natarajan Iyer சந்தானம் காமெடி சகிக்கவில்லை. இவனுக்கெல்லாம் பட்டமா?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.