அந்த பிரம்மாண்டமான கட்டடத்தின் வரவேற்பறையில், நிறைய பேர் உட்கார்ந்து இருக்கின்றனர். ஒவ்வொரு வருக்கும் ஒரு பிரச்னை. ஒருவருக்கு முதுகுவலி என்றால், இன்னொரு வருக்கு மூட்டு வலி. இது போல கழுத்து வலி, தோள்பட்டை வலி, நாள்பட்ட தலைவலி, வாட்டி எடுக்கும் ஒற்றை தலைவலி உள்ளிட்ட இன்னபிற வலிகளோடு, தங்களுக்கான அழைப்பிற்கு ஆண்களும், பெண்களும் காத்திருக்கின்றனர்.
இந்த காட்சி, எந்த மருத்துவமனையிலும் கிடையாது. சென்னை, மந்தைவெளி, ஆர்.கே.நகர், நான்காவது குறுக்கு தெருவில் உள்ள கிருஷ்ணாமாச்சார்யா யோக மந்திர மையத்தில்தான், இவ்வளவு பேரும் காத்திருக்கின்றனர். யோகா மையத்தில் எதற்கு இவ்வளவு நோயாளிகள் என்ற உங்கள் கேள்விக்கு, மையத்தின் இயக்குனர்களில் ஒருவரான கீதா சங்கர் விரிவாக பதிலளித்தார். அவரது கனிவான, இனிமையான பேச்சிலேயே, யோகா மந்திரத்தின் செயல்பாடுகள் எவ்வளவு துல்லியமாகவும், தூய்மையானதாகவும் இருக்கும் என்பது தெரிகிறது.
ஒரு சின்ன கிராமத்தில் பிறந்த டி.கிருஷ்ணமாச்சார்யா, யோகாவிற்கு என்றே தன் வாழ்க்கையை அர்ப்பணித்தவர். உலகம் முழுவதும் யோகா கலை பரவ காரணமாக இருந்தவர். 101 வயது வரை ஆரோக்கியமாக வாழ்ந்தவர். ஒரு முறை, டி.கிருஷ்ணமாச்சார்யாவிடம் பயிற்சி பெற்ற வெளிநாட்டு பெண் ஒருவர், இவரது கையை பிடித்து, கண்களில் கர கரவென கண்ணீர் வழிந்தோட, "நான் தங்களிடம் எடுத்துக்கொண்ட யோகா பயிற்சியால், ஏழு வருடங்களுக்கு பின், நேற்று தான் நிம்மதியாக தூங்கினேன் ஐயா...' என்று சொன்னதை, அருகில் இருந்து கேட்ட அவரது மகனும், இந்த மையத்தின் நிறுவனருமான, டி.கே.வி.தேசிகாச்சார்யா, தன் தந்தையின் யோகாவில் பல வித்தைகளும், விஷயங்களும் இருக்கிறது என்பதை உணர்ந்து, அவரிடம் இருந்து யோகா கலையை முழுமையாக படித்தார்.
இவ்வளவு அருமையான யோகா கலையை தனக்கு கற்பித்த தந்தைக்கு, சமர்ப்பணமாக கட்டியதுதான் இந்த கிருஷ்ணமாச்சார்யா யோக மந்திரம் அமைப்பு. யோகா மூலம், உடலையும், மனதையும் நன்றாக வைத்துக் கொள்வது எப்படி, நோய்களால் நலிவுற்ற உடலை சீரமைப்பது எப்படி, மருந்து மாத்திரைகளை குறைப்பதற்கான வழி, சுகப்பிரசவத்திற்கான எளிய வழிகள் யாவையும், அறிவியல் பூர்வமாக சொல்லிக் கொடுத்தார். அவர் வகுத்து கொடுத்த பாடத் திட்டத்தின்படி, அவர் சொல்லிக் கொடுத்த பயிற்சியின்படி, தற்போது, இந்த மையம் செயல்பட்டு வருகிறது.
இந்த யோகமந்திரம் அமைப்பில், யோகா கற்காத வி.ஐ.பி.,யே கிடையாது. உயரதிகாரிகள், உயர்நீதிமன்ற நீதிபதிகள் என்று பலரும் யோகா கற்று வருகின்றனர்.
கடந்த மாதம், ஒரு மாரத்தான் வீராங்கனை, வரவிருக்கும் மாரத்தான் போட்டியில், மன பலத்துடன் ஓடுவதற்கு தேவையான யோகா சிகிச்சையை எடுத்து சென்று, வென்றிருக்கிறார்.
இந்த யோகா மையத்தில், அவரவர் வயதிற்கும்,தேவைக்கும் ஏற்ப, யோகா சொல்லித் தரப்படுகிறது. யோகா ஆசிரியர் பயிற்சி தரப்படுகிறது, யோகா சிகிச்சை சிறந்த முறையில் வழங்கப்படுகிறது. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு நேரிடையாக போய் வகுப்புகள் எடுக்கப்படுகிறது. வெளிநாட்டு விருந்தினர்களுக்கு, முழு நாள் யோகா பயிற்சி வழங்கப்படுகிறது.
இப்படி யோகா தொடர்பான அனைத்து தீர்வுகளுக்கும், இந்த கிருஷ்ணமாச்சார்யா யோக மந்திரம் முழுமையான, நேர்மையான, நியாயமான ஆலோசனைகளையும், தீர்வுகளையும், பயிற்சிகளையும் வழங்கி வருகிறது. இது தொடர்பான உங்கள் சந்தேகங்களுக்கு தொடர்பு எண்:044-24937998, 044-24613341.
***
எம். ராகவேந்தர்
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.