விமர்சனங்கள்!
* விமர்சனங்கள்...
நம்மை
ஆராதிக்கவா,
அலசிப்பார்க்கவா?
* விமர்சனங்கள்...
வளர்ச்சிக்கு வழி வகுப்பவை...
அதனால்,
விமர்சனங்களை
விரோதித்து விடாதீர்!
* யாரை உலகம்
விமர்சனம் செய்யாமல்
விட்டு வைத்திருக்கிறது!
* சறுக்கினால்
சந்தோஷப்படுகிறது...
சாதித்தால்
சங்கடப்படுகிறது!
* விமர்சனங்கள்
சாணைக்கற்கள்
அவை
பளிங்குக் கல்லல்ல
பளபளப்பாய் இருக்க!
* முரண்படுபவர்களோடு
இணங்கிப்போய்
தன்னை
பண்படுத்திக் கொள்பவர்களே
பலசாலிகள்!
* மெச்சினால் மிதப்பதோ
குட்டினால் குமைவதோ
வெற்றி விரும்பிகளின்
வீரியம் கெடுப்பவை!
* எழும் விமர்சனங்களுக்கு
எல்லாம்
நமக்குள்
எதிர்விமர்சனம்
எழாமலில்லை!
* பாராட்டுபவனை நண்பனாய்
பழிப்பவனை எதிரியாய்
எண்ணும் மனம்தான்
மறுகணமே
மாற்றி யோசித்து மயங்குகிறது!
* இந்த -
அதிர்வலை வலைக்குள்
அகப்படாது தப்பிப்பவர்
விமர்சனங்களைக் கடந்து
வெற்றியாளராகிறார்!
* வளர்ச்சியை நிர்ணயிப்பது
விமர்சனங்கள் என்றாலும்,
வெற்றியைத் தீர்மானிப்பது
விமர்சனங்கள் எழுப்பும்
அதிர்வலைக்குள் அகப்படாது
பயணிக்கும் பக்குவம்!
— ஸ்வாதி, கும்பகோணம்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.