பொதுவாக மொபைல் போன்களை பாக்கெட்டில் வைத்து எடுத்துச் செல்கிறோம். சில மாடல்கள், திரைப் பகுதியைக் கீழ் பகுதியின் மீது மடித்து வைக்கின்ற வகையிலும், சில ஸ்லைடிங் முறையில் சுருக்கி வைக்கின்ற வகையிலும் வடிவமைக்கப்பட்டிருக்கும். எந்த நிலையிலும், ஸ்கிரீன் மடக்கப்படாமல் தான் இருக்கும், இருக்க முடியும்.
இதிலும் ஒரு புதுமையை சாம்சங் நிறுவனம் கொண்டு வர இருக்கிறது. மொபைல் போன் திரையை வளைத்து மடித்து எடுத்துச் செல்லும் வகையில் திரைப் பகுதியை அமைக்க இருக்கிறது. திரைப் பகுதியை வளைத்து அமைப்பதில் பல ஆண்டுகளாக, எல்.ஜி., பிலிப்ஸ், ஷார்ப், சோனி மற்றும் நோக்கியா ஆகியன கடும் ஆய்வினை மேற்கொண்டு வருகின்றன. ஆனால், இதில் ஜெயிக்கப் போவது சாம்சங் தான் எனத் தெரிகிறது. வரும் காலக்ஸி எஸ் 4 மற்றும் காலக்ஸி நோட் 3 சாதனங்களில், இந்த வளைக்கக் கூடிய திரை வரலாம்.
இவற்றின் திரையை வளைக்கலாம், மடிக்கலாம், சுருட்டியும் வைக்கலாம். வரும் 2013ல் இந்த வகைத் திரையுடன் மொபைல் போன் வரும் பட்சத்தில், மொபைல் போனைக் கீழே போட்டால் என்னவாகும் என்ற பயமின்றி பயன்படுத்தலாம்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.