ஸென் மொபைல்ஸ் நிறுவனம் தன் ஆண்ட்ராய்ட் மொபைல் போன்களை விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளது. இதனை அல்ட்ரா யு 1 எனப் பெயரிட்டுள்ளது. இது ஆண்ட்ராய்ட் 2.3 ஜிஞ்சர் ப்ரெட் சிஸ்டத்தில் இயங்குகிறது. திரை 3.5 அங்குல அகலத்தில் உள்ளது. இது டி.எப்.டி. கெபாசிடிவ் டச் ஸ்கிரீன் திரையாகத் தரப்பட்டுள்ளது.
இதன் ப்ராசசர் 1 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்குகிறது. பிளாஷ் அமைந்த 3.2 மெகா பிக்ஸெல் கேமரா உள்ளது. ஸ்கைப், பேஸ்புக், ஜி டாக், மேப் மை இந்தியா, கிரிக் பஸ், லைவ் டிவியுடன் நெக்ஸ் ஜி.டி.வி., லூப் சேனல்ஸ் மற்றும் ஜோசியம் கூறும் கணேஷா ஸ்பீக்ஸ் ஆகிய அப்ளிகேஷன்கள் பதியப்பட்டு கிடைக்கின்றன. இது இரண்டு சிம்களை இயக்கவல்லது.
வைபி, புளுடூத், 512 எம்பி உள் நினைவகம், மைக்ரோ எஸ்.டி. கார்ட் மூலம் 16 ஜிபி வரை அதிகப்படுத்தக் கூடிய வசதி, 3.5 மிமீ ஆடியோ ஜாக், பதிவு செய்திடும் வசதியுடன் கூடிய எப்.எம். ரேடியோ மற்றும் 1200 ட்அட திறன் கொண்ட பேட்டரி ஆகியவை இதன் சிறப்புகளாகும்.
இதன் அதிக பட்ச விலை ரூ. 4,999. ஹோம் ஷாப் 18 நிறுவனத்துடன் இணைந்து ஸென் மொபைல்ஸ் இதனை விற்பனை செய்து வருகிறது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.