ஆப்பிள் நிறுவனத்தின் பிரபலமான மீடியா மேனேஜ்மெண்ட் புரோகிராமான ஐ ட்யூன் அப்ளிகேஷன் தொகுப்பின் 11 ஆவது பதிப்பு அண்மையில் வெளியிடப்பட்டது. இந்த புரோகிராம் மூலம் தான், ஆப்பிள் நிறுவனத்தின் ஐ ட்யூன்ஸ் ஸ்டோரிலிருந்து பாடல்கள் மற்றும் வீடியோக்களை டவுண்லோட் செய்து கொள்ளலாம்.
பல ஆண்டுகளுக்குப் பின்னர், ஐ ட்யூன் புரோகிராமின் அடிப்படை இன்டர்பேஸ், இந்த பதிப்பில் மாற்றப்பட்டுள்ளது. பக்கமாக இருக்கும் சைட் பார் நீக்கப்பட்டுள்ளது. நீங்கள் இதனை விரும்பினால், மெனு சென்று, show sidebar என்பதைத் தேர்ந்தெடுத்து பெறலாம். இப்போது இடது மேல்புறமாக, கீழ் விரி மெனு ஒன்று தரப்பட்டுள்ளது. இதனை விரித்து, Music, Movies, TV Shows & Home Sharing ஆகிய பிரிவுகளைப் பெறலாம். வலது பக்கம் உள்ள பட்டனை அழுத்தி ஐ ட்யூன்ஸ் ஸ்டோர் மற்றும் லைப்ரேரியினை அடுத்தடுத்துப் பெறலாம். மெனுக்களிலும், அவை தரும் பிரிவுகளிலும் இதே போல பல மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஐ ட்யூன்ஸ் மினி பிளேயரின் இன்டர்பேஸிலும் மாற்றங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. கர்சரைக் கொண்டு சென்றால், album cover, track and artist name ஆகியவை காட்டப்படுகின்றன. இவற்றின் மீதும் கர்சரைக் கொண்டு செல்கையில், மேலும் பல தகவல்கள் காணப்படுகின்றன.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.