பல ஆண்டுகளாக பழைய பிரவுசரினையே பயன்படுத்தி வருகிறேன். தங்களுடைய "ஆபத்தைத் தரும் பழைய பிரவுசர்கள்' என்ற கட்டுரையைப் படித்த பின்னரே, அது எவ்வளவு ரிஸ்க் தரும் சமாச்சாரம் என்று தெரிந்தது. தகவலுக்கு நன்றி.
கா. சிவக்குமார், சென்னை.
ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் எப்போதும் நமக்கு சில அப்ளிகேஷன்கள் கிடைக்கும். ஆனால், விண்டோஸ் 8 சிஸ்டத்துடன் வந்துள்ள சில அப்ளிகேஷன்கள், முற்றிலும் புதிய அணுகு முறையில் தரப்பட்டுள்ளன. சில அப்ளிகேஷன்கள் குறித்து நீங்கள் எழுதாமல் விட்டுவிட்டீர்கள். அவற்றையும் அடுத்த இதழில் எதிர்பார்க்கிறேன்.
கே. ஜேசுதாஸ், புதுச்சேரி.
சிஸ்டத்துடன் வரும் அப்ளிகேஷன்களுடன், விண்டோஸ் ஸ்டோர் தரும் சில முக்கிய அப்ளிகேஷன் புரோகிராம்கள், அவற்றின் பயன், அவற்றை இயக்கும் விதம் பற்றிய கட்டுரை ஒன்று தரவும்.
என். எம். சீனிவாசன், தாம்பரம்.
மவுஸ், எஸ்.எம்.எஸ். என ஒவ்வொன்றின் பிறந்த நாள் அன்றும், அவற்றின் சரித்திரம் மற்றும் பயன் அனைத்தும் தரும் உங்கள் கட்டுரைகள், எடுத்து வைத்து படித்து பார்க்க வேண்டியவையாகும். பாராட்டுக்கள்.
கா. தேன்மொழி, மதுரை.
முடியப் போகிற ஒன்றுக்குத் தான் கவுண்ட் டவுண். எக்ஸ்பி தொடர்ந்து இன்னும் பல ஆண்டுகள் பயன்பாட்டில் இருக்கும். அதன் எளிமை, வேகம் ஆகியன கம்ப்யூட்டரைப் பயன்படுத்தத் தொடங்கும் ஒவ்வொருவருக்கும் ஏற்ற நண்பனாக அல்லவா உள்ளது.
டி. கண்ணன், திண்டுக்கல்.
தமிழ் உணவு தயாரிப்பு குறிப்புகள் தரும் தளம் சென்று படித்து ரசித்தேன். சிலவற்றிற்கான லிங்க் இல்லை. இருப்பினும், நமக்குத் தேவைக்கு மேலேயே ரெசிபிக்கள் கிடைக்கின்றன.
ஆர். கலைராணி ஸ்ரீதர், நாகமலை புதுக்கோட்டை.
இணைய தளம் சரியாக உள்ளதா? என்ற தகவல் குறிப்பு, பலரின் இரத்த ஓட்டத்தினை சீர் செய்திடும் மருந்து. எங்கு பிரச்னை என்று அறியாமல், இணைய இணைப்பு சோதிப்பது, என்டர் தட்டுவது, ரெப்ரெஷ் செய்வது என எத்தனை அவசர நடவடிக்கைகளை இது தேவையற்றதாக்குகிறது. இதனை வடிவமைத் தவருக்கும், தகவல் தந்த உங்களுக்கும்
நன்றி, நன்றி.
என்.பிரதீபன், கல்லல்.
மொபைல் ரோமிங் கட்டணம் ரத்தாகும் செய்தி, பெட்ரோல் விலை குறைப்பு போல, கேட்க இனி மையாக உள்ளது. ஆனால், நம் சர்வீஸ் புரவை டர்கள், வேறு எதிலாவது இதனைச் சேர்த்துவிடக் கூடாது. ட்ராய் இதனைக் கவனிக்க வேண்டும்.
ஆ. அஷோக் குமார், சென்னை.
விண்டோஸ் சிஸ்டம் பலவற்றிற்கு துணைப் பதிப்புகள் இருந்தது இதுவரை தெரியாமலேயே இருந்தது. ஏதோ ஒன்று கொடுப்பார்கள், பயன்படுத்தி வந்தேன். விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8 ஆகியவற்றின் பதிப்புகளிடையே உள்ள வேறுபாடுகள் மற்றும் பயன்கள் ஆகியவற்றைக் குறிப்பிட்டு எழுதவும்.
டி.என். நாகராஜன், தேனி.
ஆப்பிள் சாதனங்களைப் பயன்படுத்துவோருக்கு, ஐ ட்யூன் ஸ்டோர் வசதியாகத்தான் உள்ளது. ஆனால், இது வெகு ஜனத்தைச் சென்று சேராது. எத்தனை பேர் ஆப்பிள் கம்ப்யூட்டர்கள் மற்றும் ஐபேட், ஐ போன் ஆகியவற்றைப் பயன்படுத்துகிறார்கள். ஐ பாட் மட்டுமே ஓரளவில் தமிழ் நாட்டில், ஏன் இந்தியாவில், பிரபலமாகி உள்ளது.
த. முகமது உசேன், கோவை.
முன்பு ஒருமுறை இந்தியன் ரெசிபிஸ் டாட் காம் என்று ஒரு இணைய தளம் காட்டினீர்கள். அதைப் போலவே இந்த தமிழ் உணவு தளமும் உள்ளது. நம் பெண்கள் மற்றும் ஆண்கள் சமையல் பழக இந்த இரண்டும் போதும்.
டி.யுவராஜ் செந்தில், திருப்பூர்.
பிரவுசர்களில், எத்தனை ஹேக்கர்கள் பயமுறுத்தினாலும், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொடர்ந்து அதிகமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், மைக்ரோசாப்ட் நிறுவனமே, அதனை ஒரு சாராருக்கு மட்டும் என ஹார்ட்வேர் அடிப்படையில் ஒதுக்கினால், இதன் பயனாளர்கள் எண்ணிக்கை இந்தியாவில் குறைந்துவிடும்.
தி. பிரசாத் கண்ணா, வேலூர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.