கோடிக்கணக்கான பாலிசிதாரர்கள், நாடு தழுவிய கிளைகள், சிறந்த வாடிக்கையாளர் சேவை, உரிமங்களை வழங்குவதில் உலக சாதனை என்று பல்வேறு சாதனைகளை செய்துள்ள எல்.ஐ.சி.,யை அறியாதவர் இல்லை அல்லவா? போட்டிகள் நிறைந்த சூழலிலும் தொடர்ந்து ஆயுள் காப்பீட்டு சந்தையின் பெரும் பங்கு இந்த நிறுவனத்திடமே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பெயர் சொன்னாலே அனைவரும் அறிந்துவிடும் எல்.ஐ.சி., நிறுவனத்தில் மார்க்கெடிங் தொடர்புடைய நேரடி விற்பனைப் பிரதிநிதிகள் 97 பேரை தென் மண்டலத்தில் பணி நியமனம் செய்வதற்கான அறிவிப்பு வந்துள்ளது.
தேவைகள்:
எல்.ஐ.சி., நிறுவனத்தின் டைரக்ட் சேல்ஸ் எக்ஸிக்யூடிவ் (டி.எஸ்.இ.,) பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 01.12.2012 அடிப்படையில் 21 வயது நிரம்பியவராகவும், 35 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தின் மூலமாக ஏதாவது ஒரு பிரிவில் பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும். மார்க்கெட்டிங், நிர்வாகவியல் பிரிவுகளில் படித்தவர்களுக்கு முன்னுரிமை உள்ளது. ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழியறிவு கட்டாயம் தேவைப்படும். இவற்றுடன் கம்ப்யூட்டர் தொடர்புடைய எம்.எஸ்., ஆபிஸ் பேக்கேஜ்களில் திறன் இருந்தால் நல்லது.
மற்ற தகவல்கள்:
எல்.ஐ.சி.,யின் டி.எஸ்.இ., பதவியில் இணைந்தால், ஒவ்வொரு மாதமும் முழுமை செய்யப்படும் வணிகத்தைப் பொறுத்து மாத அளவில் ஊதியம் வழங்கப்படும். எல்.ஐ.சி., நிறுவனம் நிர்ணயிக்கும் இலக்குகளை பொறுத்து இது அமையும். இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க ரூ.100/-ஐ ஏதாவது ஒரு எல்.ஐ.சி., அலுவலக கிளையில் கேஷ் கவுண்டரில் 114034 என்ற அக்கவுண்ட் எண்ணில் செலுத்த வேண்டும். இதன் பின்னர் ஆன்-லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும். எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் என்ற அடிப்படையில் இந்தப் பதவி வழங்கப்படும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது. முழுமையான தகவல்களை இந்த நிறுவனத்தின் இணையதளத்தின் Careers என்ற பகுதியில் அறியலாம்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.
4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.