எம்.எஸ். சுவாமிநாதன் ரிசர்ச் பவுண்டேஷன் எனப்படும் அமைப்பு லாப நோக்கமின்றி இயங்கும் ஆராய்ச்சி நிறுவனமாகும். இந்த அமைப்பு 1988ல் நிறுவப்பட்டது. சுற்றுச் சூழல் மீது அக்கறையுடன் அறிவுத் திறன் மேம்பாட்டை வளர்க்கும் நோக்கத்தில் இயங்கும் இந்த அமைப்பு இயற்கை சார்ந்த, ஏழை மக்கள் மீது அக்கறை கொண்ட, பெண்கள் மற்றும் விவசாயம் சார்ந்த மற்றும் சாராத எளியவர்களின் நலனில் பெரும் அக்கறை கொண்டு இயங்கி வருகிறது. இந்த அமைப்பின் சார்பாக சமூக விஞ்ஞானி பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தேவைகள்:
டாக்டர் எம்.எஸ்.சுவாமி நாதன் ஆராய்ச்சி அமைப்பின் சமூக விஞ்ஞானி பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் பொருளாதாரத்தில் பி.எச்.டி., முடித்து இரண்டு வருட கால அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும். அல்லது பொருளாதாரத்தில் முது நிலைப் பட்டதாரியாக இருந்தால் 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். முதல் கட்ட கள ஆய்வுகள், தகவல்களைப் பகுத்தாராயும் திறன், அறிக்கை தயாரித்தல், புள்ளியியல் தொடர்புடையவற்றில் அனுபவம் போன்றவை கூடுதல் தகுதிகளாகத் தேவைப்படும்.
இதர விஷயங்கள்:
எம்.எஸ்.எஸ்.ஆர்.எப்., அமைப்பின் மேற்கண்ட பதவிக்கு விண்ணப்பிப்பவரின் தகுதி மற்றும் திறமை அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முழு விபரங்கள் அடங்கிய விண்ணப்பதாரரின் பயோ-டேட்டா படிவத்துடன் அனுபவங்களையும் முழுமையாகவும் விரிவாகவும் தர வேண்டும். தற்போதைய முகவரி, தொடர்புக்கான தொலைபேசி, இ-மெயில் முகவரி ஆகிய முழு விபரங்களுடன் விண்ணப்பங்களைப் பின்வரும் முகவரிக்கு தபால் மூலமாகவோ அல்லது இ-மெயில் முகவரிக்கோ அனுப்ப வேண்டும். முழுமையான விபரங்களைப் பின்வரும் இணையதளத்தைப் பார்த்து அறியவும்.
முகவரி:
The General Manager, M.S.Swaminathan Research Foundation, Third Cross Street, Insititutional Area, Taramani, Chennai - 600 113. e-mail : admn@mssrf.res.in
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.
4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.