நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் லிமிடெட் எனப்படும் என்.எல்.சி., நிறுவனம் மத்திய அரசின் நிலக்கரி அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் ஒரு பொதுத்துறை நிறுவனமாகும். தொடர்ந்து 30 ஆண்டுகளாக இந்த நிறுவனம் லாபகரமாக இயங்கி வருவது மற்றொரு சிறப்பாகும். தமிழகத்தில் நெய்வேலியில் இந்த நிறுவனம் இருப்பது தமிழகத்திற்கே பெருமை என்று சொல்லலாம். இந்த நிறுவனத்தில் இம்ப்ளாண்ட் பிரிவில் பயிற்சி பெறுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தேவைகள்:
என்.எல்.சி., நிறுவனம் நடத்தும் இம்ப்ளாண்ட் டிரெய்னிங் 2013-14 பயிற்சிக்கு பி.இ., அல்லது பி.டெக்., முழு நேரப் படிப்பில் 6 ஆவது செமஸ்டர் தேர்வை முடித்தவர்களும், மூன்று வருட இன்ஜினியரிங் டிப்ளமோ படிப்பில் 4 ஆவது செமஸ்டர் தேர்வை முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். டிப்ளமோ படிப்பும் முழு நேரப் படிப்பாக இருப்பது கட்டாயத் தேவையாகும்.
மற்றவை:
என்.எல்.சி., நிறுவனத்தின் இம்ப்ளாண்ட் டிரெய்னிங்குக்கு 04.02.2013 முதல் 14.02.2013க்குள் ஆன்-லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்-லைனில் பதிவு செய்த பின்னர் கிடைக்கும் ரெஜிஸ்ட்ரேஷன் கம் அப்ளிகேஷன் பார்முடன் உரிய ஆவணங்களை இணைத்துப் பின்வரும் முகவரிக்கு 28.02.2013க்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும். முழுமையான விபரங்களை இணைய தளத்தைப் பார்த்து அறியவும்.
முகவரி:
General Manager, Employee Development Centre, NLC Ltd Block, Neyveli - 607803
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.
4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.