மாஸ்டர் ஸ்ரீ கிருஷ்ணாவின் இன்னிசை
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

18 டிச
2012
00:00

சென்னை ஸ்ரீ தியாக பிரும்ம கான சபாவின் ஆதரவில் ஓபுல் ரெட்டி ஹாலில் மாஸ்டர் ஸ்ரீ கிருஷ்ணா ரவிசங்கருடைய கச்சேரி. இந்த அளவிற்கு ஸ்ரீ கிருஷ்ணா பாட, பயிற்சி அளித்த இசை மேதை, இசை விதூஷி சாவித்திரி, அண்மையில் மறைந்துவிட்டார்.
அவர் தந்துவிட்டுப் போன அந்த இசை சொத்து, மாஸ்டர் ஸ்ரீ கிருஷ்ணாவை எதிர்கால இசை பிரபலமாக ஆக்கலாம்.
ஏரா நாபை (தோடி - ஆதி) வர்ணத்தை முதல் - இரண்டாம் காலத்தில் அமர்க்களமாகப் பாடி அசத்திய ஸ்ரீ கிருஷ்ணாவின் இசை ஞானத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியது, "சிந்த நாடநா (கலாநிதி) கிருதி. ஸ்ரீ தியாகராஜருடைய புகழ்பெற்ற கிருதி இது. அனுபவித்துப் பாடினார்.
சரச சாமதான பேத கண்ட (காபி நாராயணி) (ஸ்ரீ தியாகராஜர்) கிருதியும் ராகத்தில் எந்த பிழையும் செய்யாமல், துல்லியம் தெரிந்தது. பிரும்மஸ்ரீ மன்னார்குடி சாம்பசிவ பாகவதருடைய அருமையான கீர்த்தனம் ஒன்றில் ஸ்ரீ வெலயுசேஷகிரிவாசா இடத்தில் அவர் பாடிய நிரவல் தொடர்ந்த ஸ்வரப்ரஸ்தாரம் எல்லாமே வயதிற்கு மீறிய ஞானம்தான்; இவர் ஒரு குழந்தை மேதைதான் என்று கூற வைத்தது.
வயலினில் பரூர் எம்.கே.அனந்தலட்சுமி சிறப்பாக வாசித்தார். பாரம்பரிய இசைக் குடும்ப வாரிசு இவர். மேலும் பயிற்சியுடன் ஒளிர்வார் நிச்சயம். மிருதங்கம் வாசித்த இளம் கார்த்திக் கணேஷ் ராமும் படு சுட்டியாக கெட்டிக்காரத்தனமாக வாசித்தார். ஸ்ரீ கிருஷ்ணாவின் தற்போதைய குரு, கலைமாமணி கிரிஜா ராமசுவாமி ஆவார்.
- மாளவிகா

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (4)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Manoj - Coimbatore,இந்தியா
23-டிச-201219:34:59 IST Report Abuse
Manoj Well done Krishna All the best for your future concerts...
Rate this:
Share this comment
Cancel
Vaishnavi Manoj - Coimbatore,இந்தியா
23-டிச-201213:55:08 IST Report Abuse
Vaishnavi Manoj congrats and best wishes for ur future...
Rate this:
Share this comment
Cancel
nandha ravishankar - chennai,இந்தியா
18-டிச-201223:12:02 IST Report Abuse
nandha ravishankar congrats and best wishes
Rate this:
Share this comment
Cancel
maathanghi ravishankar - chennai,இந்தியா
18-டிச-201223:06:25 IST Report Abuse
maathanghi ravishankar well done congrats sree krishna
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.