இந்த ஆண்டு பாரத் கலாச்சாரின் மார்கழி மகோற்சவ இசை நிகழ்ச்சியில், பத்மா சேஷாத்ரி சகோதரிகள் நந்தினி, ரோஷிணி இருவருமே சிறந்த குரல்வளத்துடன், இன்னிசை நிகழ்ச்சியில் சிறப்பாக பிரகாசித்தனர். இவர்களுடைய குரு, இசை ஆய்வாளர் பேராசிரியர் டி.ஆர்.சுப்ரமண்யம்.
நந்தினியின் இசை ஞானம், அவர் பாடிய மந்தாரி மற்றும் பிரதான சங்கராபரணம் இரண்டிலுமே, மிகவும் மனம் கவரும் வகையில் இருந்தது. மந்தாரி ராகத்தைப் பாடுவது வெகு கடினம். ரோஷிணியின் ஆரபியில் பளிச் மின்னல் விரிவுகளுடன், ஜொலிப்புடன் ராக ஆலோபனையை ரசிக்க முடிந்தது. ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளுடைய நாதசுதா கிருதியை அனுபவித்துப் பாடிய விதம் அருமை.
குரு டி.ஆர்.எஸ்., லய சிம்மம். ராகம் - தாளம் - பல்லவிகளை பாடுவதில் மட்டுமின்றி இயற்றுவதிலும் படுசூரர். இந்த நிகழ்ச்சியில் சகோதரிகள் சங்கராபரணம், மிச்ர திருபுட தாளத்தில் டி.ஆர்.எஸ்., இயற்றியுள்ள, சங்கீத சாகித்ய என்று துவங்கும் பல்லவியை சுவரங்களை இணைத்து, படு நேர்த்தியாக வழங்கியது மெச்சும்படி இருந்தது.
வயலினில் அனந்தகிருஷ்ணனின் வாசிப்பு நன்றாக இருந்தாலும், ராக விரிவுகளில் அதிக நேரம் எடுத்துக் கொண்டது சற்று மனதை உறுத்தியது. மிருதங்க வாசிப்பில் குரு பரத்வாஜின் வாசிப்பு சிறப்பாக இருந்தது. ராகம் - தாளம் - பல்லவி மற்றும் தனி எல்லாமே நன்றாக இருந்தது வாசிப்பு.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.