பயிர்களைத் தாக்கக்கூடிய பூச்சிகள், நோய்கள், எலிகள் மற்றும் களைகள் போன்ற கண்ணுக்குத் தெரிகின்ற எதிரிகளை உழவர்கள் நன்கு அறிந்து அவைகளை திறம்பட கட்டுப்படுத்தி வருகின்றார்கள். பலசெல் உயிரினங்களில் எண்ணிக்கையின் அடிப்படையில் அதிகமாகக் காணப்படும் உயிரினமான நூற்புழு பூமியில் எங்கும் நீக்கமற நிறைந்துள்ளது. தாவர நூற்புழுக்கள் நீளம் சுமார் 1 மி.மீ. முதல் 10 மி.மீ. வரை இருக்கும். இவை மண்ணிலும் செடியின் வேர் பகுதியிலும் மறைந்து வாழ்கின்றன. நூற்புழுக்களுக்கு ஊசி போன்ற அலகு உண்டு. அத்தகைய அலகைக்கொண்டு நூற்புழுக்கள் பயிர்களின் வேர் பகுதியிலுள்ள செல் சாற்றை உறிஞ்சிக் குடிக்கின்றன. மேலும் அலகினால் வேரைத்துளைக்கும்போது எண்ணற்ற காயங்களையும் வேரில் உண்டுபண்ணுகிறது. தமிழகத்தில் இதுவரை 90க்கும் மேற்பட்ட நூற்புழுக்கள் பயிர்களைத் தாக்கி சேதத்தை ஏற்படுத்தி வருவதாக கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில் சாகுபடி செய்யப்படும் முக்கிய பயிர்களைத் தாக்கும் நூற் புழுக்களைப் பற்றிக் காண்போம்.
வேர்முடிச்சு நூற்புழு:
பொதுவாக வேர்முடிச்சு நூற் புழுக்கள் அனைத்துவிதமான பயிர்களையும் குறிப்பாக காய்கறிப் பயிர்களைத் தாக்குகின்றன. இந்நூற்புழுக்கள் வேரின் உள்ளே புகுந்து பயிரினைப் பெரிதும் பாதிக்கின்றன. இரண்டாம் நிலை நூற் புழுக்கள் வேரினுள் புகுந்தபின் கார்டக்ஸ் பகுதியில் செல் சாற்றை உறிஞ்சுவதால் செல்களில் மாற்றம் உண்டாகும். அதனால் செல்கள் அதிக எண்ணிக்கையில் உற்பத்தியாகி அதிக பருமனுடன் காணப்படும். வளருகின்ற பெண் நூற்புழுக்களும் முதிர்ச்சி அடைந்து பருமனாக மாறும். இந்த அழுத்தத்தினால் பயிர் நீர் கடத்தும் குழாய்கள் ஒரு பக்கமாக தள்ளப்பட்டு அதிக பாதிப்பிற்கு உள்ளாகிறது. எனவே, நீர் மற்றும் சத்துப் பொருட்களைக் கிரகிக்க முடியாமல் பயிர் வாட்டத்துடன் காணப்படும். பெண் நூற்புழுக்களிலுள்ள ஜெலாட்டின் கூட்டினுள் 200 முதல் 300 முட்டைகளை உற்பத்தி செய்கிறது. அவரை விதை வடிவ நூற்புழு: இந்நூற்புழுக்கள் பருத்தி, அவரை, பப்பாளி, ஆமணக்கு சாகுபடி செய்யப்படும் அனைத்து பகுதிகளிலும் பரவலாகக் காணப்படுகின்றன. ஆங்காங்கு வளர்ச்சி குன்றி தென்படுவது இந்நூற்புழு தாக்குதலின் அறிகுறியாகும்.
துளைக்கும் மற்றும் வேர் அழுகல் நூற்புழு:
வேர் துளைக்கும் நூற்புழு பயிரின் திசுக்களை அழித்து சேதத்தை உண்டுபண்ணும். இவை வேரின் கார்டெக்ஸ் செல்களை துளைத்துக் கொண்டும் மற்றும் செல்களின் இடைவெளிகளிலும் உட்புகுந்து பாதிப்பை உண்டுபண்ணும். இதனால் வேர்பகுதி பாதிக்கப்பட்டு கருஞ்சிவப்பு கறைகளுடன் காணப்படும். இவ்வாறு தாக்கும் போது வேர் சிறுத்தல், வேர் வளர்ச்சி பாதிக்கப்பட்டு மண்ணில் பிடிப்பு இல்லாமல் இருக்கும். இதுபோன்றே இன்னும் முட்டைக்கூடு நூற்புழு, எலுமிச்சை நூற்புழுக்களும் பயிர்களைத் தாக்கும் காரணிகளாகும். தகவல்: முனைவர் சோ.பிரபு, முனைவர் க.முரளிபாஸ்கரன், 99944 86310. -கே.சத்தியபிரபா, உடுமலை.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.
4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.