கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது கிறிஸ்துமஸ் தினத்திற்கு முன்பாகவே எல்லோர் வீடுகளிலும் பெரிய ஸ்டார்களை தொங்க விடுவர். இந்த பழக்கம் எப்படி வந்தது தெரியுமா? இயேசு கிறிஸ்து பிறந்தபோது அதனை அறிவிக்கும் படியாக, விண்ணில் வால் நட்சத்திரம் ஒன்று தோன்றியது. எனவேதான் இந்த ஸ்டார் அமைக்கும் பழக்கம் வந்தது. அப்போது ஆயர்கள் ஆடுமேய்த்துவிட்டு இரவில் தூங்கிய போது வானில் இருந்து தேவதை ஒன்று தோன்றி, "பயப்படாதீர்கள் உங்களுக்கெல்லாம் மிகுந்த சந்தோஷத்தை கொடுக்கும் செய்தி ஒன்றை சொல்கிறேன். மக்களின் பாவத்தை போக்க கிறிஸ்து என்னும் ரட்சகன் பிறந்துள்ளார்' என்று அறிவித்தார். அதன் பிறகு அவர்கள் இயேசு குழந்தையை கண்டு வணங்கி மகிழ்வுற்றனர். இவற்றை நினைவு கூறும் வகையில்தான் குடில்கள் அமைத்து, நட்சத்திரங்களை தொங்கவிட்டு, பரிசுபொருள்கள் கொடுத்து தங்கள் சந்தோஷத்தை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்கின்றனர்.
ஒவ்வொரு மாதமும்!
இன்றும் எத்தியோப்பியாவில் ஒவ்வொரு மாதமும் கிறிஸ்துமஸ் கொண்டாடுகின்றனர். மார்ச் மாதத்தில் மட்டும் விருந்துக்கு பதிலாக உபவாசம் இருக்கின்றனர். பால், வெண்ணெய், இறைச்சி, மீன் முதலியவற்றை உண்ணாமல் இருக்கின்றனர்.
பறவைக்கு உணவு!
ஸ்காண்டிநேவியாவில் கிறிஸ்துமஸ் விழாவை பறவைகளுக்கு விருந்தளிப்பதன் மூலம் கொண்டாடுகின்றனர். கோதுமைக் கதிர்களை தூண் போலக் கட்டி வயல்வெளியில் வைத்து விடுகின்றனர். இதன் கீழேயும் தானியங் களை பரப்பி வைத்திருப்பர்.
பனி அல்ல பகலவன்!
ஆஸ்திரேலியாவில் கிறிஸ்துமஸ் விழா பழக்கம் முற்றிலும் வேறுபட்டதாக இருக்கும். மற்ற நாடுகளில் எல்லாம் இந்த நேரத்தில் பனி மூடிக் கிடக்கும். ஆகவே, அதை "வொயிட் தி கிறிஸ்துமஸ்' என்று அழைப்பர். ஆனால், ஆஸ்திரேலியாவிலோ இது அவர்களுக்கு, "மிட் சம்மர்' வேனில் காலத்தின் இடைப்பகுதி. ஆகவே, கிறிஸ்துமஸ் நாளை, சுற்றுலா சென்றும் மிகழ்ச்சியாக செலவழிக்கின்றனர்.
இனி எவரும் தவிக்கக்கூடாது!
அயர்லாந்து நாட்டினர் கிறிஸ்துமஸ் தினத்திற்கு முந்தின இரவு ஜன்னல் ஓரங்களில் விளக்குகளை எரியவிடுவர். யோசேப்பும், மரியாளும் குழந்தை பிறக்கும் நேரத்தில் இடமில்லாமல் தவித்தது போல், இன்று எவரும் தவிக்காமல் எங்கள் வீட்டிற்கு வாருங்கள் என்று அழைக்கும் விளக்குகளாம் அவை.
கிறிஸ்துமஸில் மாட்டுப் பொங்கல்!
கிறிஸ்துமஸ் நாளன்று பசுக்களுக்கு ராஜ மரியாதை செலுத்துகின்றனர் இத்தாலிய மக்கள். அன்று பசுக்களைக் குளிப்பாட்டி, அவைகளுக்கு விசேஷ மரியாதை செலுத்துவர். இயேசுநாதர் மாட்டுத் தொழுவத்தில் பிறந்த போது, அருகிலிருந்த ஒரு பசு, மாட்டுத் தொழுவத்தில் நிலவிய கடுங்குளிரிலிருந்து இயேசு நாதரைக் காப்பாற்றுவதற்காக அவரை அவ்வப்போது நெருங்கி பெருமூச்சு விட்டு அவருக்கும் வெப்பம் கொடுத்ததாம். அந்த நல்லெண்ணத்தின் அடிப் படையிலேயே இத்தாலியர் கிறிஸ்துமஸ் அன்று பசுக்களுக்கு மரியாதை செய்கின்றனராம்.
பெயர் சூட்டியவர்!
இயேசு பிறந்த விழாவானது ஆரம்பத்தில் ஒளி விருந்து என்ற பெயரில் அழைக்கப்பட்டு வந்தது. அமெரிக்காவை சேர்ந்த "டே' என்ற பெண்மணிதான் இயேசு பிறந்த புனித நாளுக்கு கிறிஸ்துமஸ் என்று பெயர் சூட்டினாள்.
பரிசுகள் வந்துவிடும் முன்னே!
ஹாலந்து தேசத்து குழந்தைகளுக்கு டிசம்பர் மாதத்தின் ஆரம்பித்திலேயே கிறிஸ்துமஸ் பரிசுகளைக் கொண்டு வந்து கொடுத்து விடுவார் செயிண்ட் நிக்கோலஸ்.குதிரைகளின் மீது அமர்ந்த படி நீக்ரோ வேலைக்காரன் பீட்டர் பின் தொடர, பரிசு முட்டையோடு வருவார் நிக்கோலஸ்.
நாட்டுக்கு நாடு மாறுபடும் அழைப்பு!
*நம் நாட்டில் டிசம்பர் மாதம் 25ம் தேதியை கிறிஸ்துமஸ் தினம் என்று அழைக்கிறோம். * பிரெஞ்சு நாட்டினர் அதே நாளை "நோயல்' எனவும், ஜெர்மானியர் "வெய்நேக்ஷன்' எனவும், ஸ்பெயின் நாட்டினர், "நேவிடட்' எனவும், ஸ்காட்லாந்து நாட்டினர், "யூல்' எனவும், இத்தாலியர், "நாடோல்லே' எனவும் அழைக்கின்றனர்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.
4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.