Advertisement
அதிமேதாவி அங்குராசு!
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

21 டிச
2012
00:00

வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!

இதயக்கதவு!

ஹால்மென்ஹாண்ட் என்ற பிரபல ஓவியர் புகழ்பெற்ற சித்திரம் ஒன்றைத் தீட்டினார். நள்ளிரவில் ஹரிக்கேன் விளக்குடன் தோட்டத்தின் நடுவே உள்ள ஒரு வீட்டின் கதவை, இயேசு தட்டுவது போன்ற சித்திரம் அது.
"உலகின் ஒளி' என்ற அந்த ஓவியத்தைக் கண்டவர்கள் அனைவரும் பாராட்டினர்.
குறை கூறுவதே குணமாகக் கொண்ட ஒருவன், "உமது ஓவியத்தில் ஒரு தவறு உள்ளது ' என்றான்.
"என்ன?' என்றார் ஹாண்ட்.
"அந்தக் கதவில் வெளிப்புறகைப்பிடியே இல்லையே?'
"உண்மை. அதுமனிதனின் இதயக்கதவு. அதை உள்ளிருந்து மட்டுமே திறக்க முடியும். வெளியிலிருந்து வேறு ஒருவர் திறக்க வழி இல்லை' என்றார் அந்த ஓவியர் பளீர் என்று.

வாங்க... வாங்க - விலை உயர உயர!


உலகில் தங்கத்தை அதிகமாக பயன்படுத்துவது இந்தியர்கள்தான். இந்திய திருமணங்கள் தங்கம் இல்லாமல் நடப்பது இல்லை. ஆனால், இந்தியா தங்க உற்பத்தியில் முதல் இடத்தில் இல்லை.
தங்க உற்பத்தியில் முதல் இடத்தில் இருப்பது சீனா. ஆண்டுக்கு 285ல் இருந்து 300 டன் வரை தங்கத்தை உற்பத்தி செய்கிறது. தங்கத்தை பயன்படுத்துவதிலும் சீன மக்கள் ஆர்வம் கொண்டிருக்கின்றனர்.
இந்தியாவுக்கு அடுத்தபடியாக தங்கத்தை அதிகம் பயன்படுத்துவது சீனா தான். ஆஸ்திரேலியா ஆண்டுக்கு 215 டன் தங்கத்தை உற்பத்தி செய்து இரண்டாவது இடத்தில் உள்ளது. வெகு காலங்களாக தங்க உற்பத்தியில் முதல் நாடாக இருந்த தென் ஆப்பிரிக்கா 2007ம் ஆண்டோடு அந்த பெயரை இழந்தது. இப்போது அது 213 டன் தங்கம் உற்பத்தி செய்து 3வது இடத்தில் உள்ளது. ஆண்டுக்கு 210 டன் தங்க உற்பத்தியுடன் அமெரிக்கா 4வது இடத்தில் உள்ளது. அதற்கு அடுத்து ரஷியா 185 டன் உற்பத்தி செய்து 5வது இடத்தில் உள்ளது. லத்தீன் அமெரிக்கா நாடான பெரு, ஆண்டுக்கு 180 டன் உற்பத்தி செய்து 6வது இடத்தை பிடித்துள்ளது. ஆண்டுக்கு 100 டன் உற்பத்தி செய்து உலகின் மிகப்பெரிய முஸ்லிம் நாடான இந்தோனேஷியா 7வது இடத்தை பிடித்துள்ளது. கனடாவில் தங்கத் தாது அதிகமாக இருக்கிறது. அந்த நாடு ஆண்டுக்கு 95 டன் தங்கத்தை உற்பத்தி செய்து 8வது இடத்தை பிடித்துள்ளது. இதற்கும் கீழே மொத்தம் 90 நாடுகள் குறைவான தங்கத்தை உற்பத்தி செய்கின்றன. அவற்றில் இந்தியாவும் ஒன்று.
இந்தியாவில் ஆண்டுக்கு 3 டன் தங்கத்தை கூட உற்பத்தி செய்ய முடியவில்லை. ஆனால், உலகில் தங்கத்தை அதிகமாக பயன்படுத்துபவர் இந்தியர்கள்தான் என்ற பெருமை மட்டும் உயர்ந்து நிற்கிறது. இந்தியாவின் தங்க தேவை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி மூலமே பூர்த்தி செய்யப்படுகிறது. இந்தியா இந்த ஆண்டு ஆயிரம் டன்னுக்கு மேல் இறக்குமதி செய்யும் என்று புள்ளி விவரங்கள் கூறுகின்றன. அதன்படி பார்த்தால் உலக தங்க உற்பத்தியான 2,500 டன்னில் இந்தியாவே 1000 டன் தங்கத்தை வாங்கிக் கொள்கிறது. இப்படி இந்தியர்கள் தங்கத்தை வாங்கிக் குவிக்கும் போது விலை எப்படி குறையும் என்கின்றனர் சந்தை ஆய்வாளர்கள்.

இதுவும் தங்கமே - நீலத்தங்கம்!


சோமாலியா, ஹெயிட்டி போன்ற நாடுகள் பஞ்சத்தில் தவிப்பதை பார்த்த பிற நாடுகள் சுதாரிக்கத் தொடங்கிவிட்டன. உணவுப் பஞ்சம் ஏற்படாமல் இருக்க, மாற்று வழிகளை உருவாக்கி வருகின்றன. தண்ணீரை சேமிக்க அனைத்து வழிகளையும் பின்பற்றுகின்றன. செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சி வீணாக்குபவர்களுக்கு 9 ஆயிரம் யூரோ டாலரை ஸ்பெயின் அரசு அபராதமாக விதித்துள்ளது. பணக்கார நாடுகள் மூன்றாம் உலக நாடுகளின் நிலங்களை ஆக்கிரமிக்கத் தொடங்கியுள்ளன. சீனா, குவைத், சுவீடன் போன்ற நாடுகள் தங்கள் விவசாய உற்பத்திக்காக ஆப்பிரிக்க நாடுகளின் விளைநிலங்களை வளைத்துப் போட்டு வருகின்றன. ஆனால், இந்த நாடுகள் உண்மையில் குறி வைத்திருப்பது, ஆப்பிரிக்க நாடுகளின் நீர்வளம் மீதுதான். தங்களின் உணவுத் தேவையை வெளிநாட்டில் விவசாயம் செய்து கொண்டுவரும் போக்கு சமீபத்தில் உருவாகியுள்ளது. தென்கொரியாவின் தாவூ நிறுவனம் மடகாஸ்கர் நாட்டில் 13 லட்சம் எக்டேர் நிலத்தை விவசாயம் செய்ய வாங்கியிருக்கிறது.
கென்யாவின் 40 ஆயிரம் எக்டேர் நிலத்தை கத்தார் நாடும், சூடானின் 30 ஆயிரம் எக்டேர் நிலத்தை அரபு எமிரேட்டும் வாங்கியுள்ளன. இந்த நிலங்கள் அனைத்துமே நல்ல விளைநிலங்கள்தான். சிறந்த நீராதாரம் உள்ளவை. இந்தியாவின் விளைநிலங்களும் வெளிநாடுகளின் வசம்போகும் காலம் தூரத்தில் இல்லை. நிலம், நீர் ஆதாரங்கள் ஆக்கிரமிக்கப் படுவதை கட்டுப்படுத்துவதுடன் இவை மக்களுக்கு குறைந்த விலையில் கிடைக்குமாறு அரசுகள் பார்த்துக்கொள்ள வேண்டும். தண்ணீரும், விவசாயமும் உலகளாவிய பிரச்னையாகி வரும் இந்த காலகட்டத்தில் வளரும் நாடுகள் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். பல நூறு ஆண்டுகளாகவே தனது நீர் ஆதாரங்களை பாதுகாப்பதில் ஓமன் நாடு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. வரும் காலங்களில் தண்ணீர் தேவை அதிகமாக இருக்கும் என்பதால் தண்ணீரை நீலத்தங்கம் என்கின்றனர். இந்தியாவின் முதுகெலும்பாக கருதப்படும் விவசாயத்தையும், தண்ணீரையும் எப்படி பாதுகாக்கப் போகிறோம் என்பதுதான் தற்போது நம் முன் நிற்கும் கேள்வி.

அம்மா! ப்ளீஸ் செஞ்சுதாங்கம்மா!


இது, "முளைபயிறு பணியாரம்' செய்முறை நேரம்.
என்னென்ன தேவை: புழுங்கல் அரிசி-1கப், முளை கட்டிய பாசிப்பயறு, கொண்டைக் கடலை, கொள்ளு, காராமணி-தலா 1 கப், இஞ்சி-1 சிறு துண்டு, காய்ந்த மிளகாய்-4, நெய்-1 சிறிய கப், பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை-சிறிது, உப்பு-தேவையான அளவு.
எப்படி செய்வது?: அரிசியை ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். முளைகட்டிய பயறு வகைகளுடன், இஞ்சி, காய்ந்த மிளகாய் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். மாவில் உப்பு மற்றும் பொடியாக நறுக்கிய கறிவேப்பிலையை சேர்த்துக் கலக்கவும். பணியாரக் குழியில் நெய்விட்டு மாவை ஊற்றி இருபுறமும் வேகவிட்டு எடுக்கவும். இதற்கு இட்லி மிளகாய் பொடி சரியான சைட் டிஷ்!
என்ன சிறப்பு: பயறு வகைகள் நிறைந்திருப்பதால் புரதச்சத்து கொண்டது. சுவையும் வித்தியாசமாக இருக்கும். மாலை டிபனுக்கும், விருந்தினருக்குப் பரிமாறவும் ஏற்றது.
என்றென்றும் அன்புடன்,
அங்குராசு.

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.