கிறிஸ்துமஸ் மரம் என்று தனியாக ஒரு மரம் இல்லை. ஆனால், கிறிஸ்துமஸின் போது இம்மரத்தைப் பயன்படுத்தியதால் இம்மரம் தற்போது கிறிஸ்துமஸ் மரம் என அழைக்கப்படுகிறது. பர் மரங்களை கிறிஸ்துமஸுடன் இணைத்துக் கொண்டாடிய புகழ் ஜெர்மானியரையே சாரும்.
கி.பி.எட்டாம் நூற்றாண்டு வாக்கில் போனியாஸ் என்ற கிறிஸ்து பாதிரியார், ஜெர்மனிக்கு இறைச் சேவைக்காக வந்தார். ஒரு கிறிஸ்துமஸ் நாளில் இவர் ஒரு பர் மரத்தை ஆசீர்வதித்து குழந்தை இயேசுவுக்கு அதை ஒப்புக் கொடுத்தார். அது முதல் பர் மரம் கிறிஸ்துமஸ் மரம் ஆனது. அதிலிருந்து ஒவ்வொரு கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் போதும் இம்மரம் வீடுகளில் நடப்பட்டது. இதன் பிறகு ஜெர்மானிய இளவரசர் ஆல்பர்ட்டுக்கும், இங்கிலாந்து இளவரசி விக்டோரியாவுக்கும் திருமணம் நடைபெற்றது.
1841 ஆம் ஆண்டில் ஆல்பர்ட், இங்கிலாந்து அரண்மனையில் ஒரு கிறிஸ்துமஸ் மரத்தை நட்டு, அதில் பல பரிசுப் பொருள்களைப் கட்டித் தொங்க விட்டார். மரத்தைச் சுற்றிலும் மெழுகுவத்திகளை ஏற்றி வைத்தார். பின்பு இப்பரிசுப் பொருள்களைப் பலருக்கும் வழங்கினார். இதன் பின்னரே கிறிஸ்துமஸ் மரம் இங்கிலாந்து முழுவதும் அமைக்கப்பட்டது. இத்தாலியில் கிறிஸ்துமஸ் மரத்தை ப்ரெஸ்பியோ என அழைக்கின்றனர். இம்மரத்தைச் சுற்றிலும் வண்ண வண்ண மெழுகுவத்திகளை ஏற்றி வைத்து பாடல்களைப் பாடி மகிழ்கின்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.