என்ன குட்டீஸ் உங்க மம்மிக்கு கேக் செய்ய தெரியலையா... அப்படின்னா உங்க வீட்டுல கிறிஸ்துமஸுக்கு "ப்ரூட் கேக் புட்டிங்' செய்ய நீங்களே சொல்லி கொடுங்க!
தேவையானவை: முதலில் இதற்கு கஸ்டர்டு சாஸ் தயாரித்துக் கொள்ள வேண்டும். சர்க்கரை - 100 கிராம், வெண்ணெய்-75 கிராம், பால்-1/2 லிட்டர், கஸ்டர்டு பவுடர்-100 கிராம், வெனிலா எசன்ஸ்-2 டீஸ்பூன், உப்பு- சிறிது.
செய்முறை: முதலில் சிறிது வெந்நீரில் கஸ்டர்டு பவுடரைக் கரைத்துக் கொண்டு, பாலைக் கொதிக்க வைத்து, சர்க்கரையைக் கலக்க வேண்டும். அதில் கஸ்டர்டு கரைசலை ஊற்றி அடுப்பில் ஏற்றிக் கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். கெட்டியானதும், வெனிலா எசன்ஸையும், வெண்ணெயையும் போட வேண்டும். வெண்ணெய் உருகியதும் இறக்கி வைக்க வேண்டும். இதுவே கஸ்டர்டு சாஸ்.
புட்டிங்குக்குத் தேவையான பொருட்கள்: ஸ்பாஞ்ச் கேக்-500 கிராம், ஆரஞ்சுச்சாறு- 100 மி.லிட்டர், வாழைப்பழத் துண்டுகள் -200 கிராம், ஆரஞ்சு, ஆப்பிள், அன்னாசி-200 கிராம், வெண்ணெய்- 100 கிராம், தேன்-1 டீஸ்பூன், செர்ரீபழம்-200 கிராம், ஜாம்-100 கிராம், கஸ்டர்டுசாஸ் -300 மி.லிட்டர்.
செய்முறை: கேக்கை இரண்டு துண்டுகளாக வெட்டி, ஆரஞ்சு சாறில் நனைத்து எடுக்க வேண்டும். துண்டின் ஒருபுறம் மட்டும் ஜாம் தடவி, அதன்மேல் பழத்துண்டு களை அடுக்க வேண்டும். மறுதுண்டின் ஒரு பாகத்தில் ஜாம் தடவி, ஜாம் தடவிய பகுதியை முதல் கலவையின் மேல் வைத்து அழுத்தி விட வேண்டும். கேக்கைச் சுற்றிலும் ஜாம் தடவ வேண்டும். பின் கஸ்டர்டு சாஸை கேக்கை சுற்றிலும் ஊற்றி பிரிட்ஜில் வைத்துக் கெட்டியானவுடன் அதன் மீது சர்க்கரை கலந்த வெண்ணெயை பூச வேண்டும்.
இனி எடுத்துச் சாப்பிடுங்க ஜாலியா
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.