கலிகால விபரீதம்!
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

23 டிச
2012
00:00

எங்காவது ஏதாவது அதர்மம், அநியாயம் நடந்தால், "உம்... கலிகாலம் சார்! நியாயத்துக்கு இடமே கிடையாது! நாம் என்ன செய்ய முடியும்...' என்று சொல்லக் கேட்டிருக்கிறோம். இந்த கலியுகம் அவ்வளவு மோசமாக இருக்கும் என்பதை அப்போதே கூறியிருக்கின்றனர்.
கலியில் அதர்மத்தின் பாதங்கள் விருத்தியடையும்; தர்மத்தின் பாதங்களில் நான்கிலொரு பங்கு தான் எஞ்சியிருக்கும். அதுவும் கூட கலி முடியும் போது நாசமாகி விடும். கலியுகத்தில், மக்கள் விஷய போகங்களில் அதிக ஆசை உள்ளவர்களாகவும், தயவு தாட்சண்யம் அற்றவர்களாகவும், காரணமின்றி விரோதம் கொள்பவர்களாயும் இருப்பர்.
கலியுகத்தில், ஜனங்கள் அதிகமாக சாப்பிடுவர்; அற்ப பாக்யம் உள்ளவர்களாகவும், காமிகளாகவும், தரித்திரியர்களாகவும் இருப்பர்; பெண்களிடம் கற்பு என்பது குறையும். தேசங்களில் பெரும்பாலும் திருடர்கள் மிகுதியாக இருப்பர். அரசாங்கத்தார், பொது மக்களை ஏதாவது வரி போட்டு பிழிந்து எடுத்து விடுவர். வேதத்தில் சொல்லிய ஆசாரங்களை அனுஷ்டிக்க மாட்டார்கள்; பிறருக்கு கொடுப்பதைப் பற்றி எண்ண மாட்டார்கள். மாறாக, எங்கே, என்ன இலவசமாகக் கிடைக்கும் என்று ஓடுவர்.
சன்னியாசிகள் பணத்திலேயே மிகுந்த ஆசை கொண்டவர்களாக இருப்பர். பெண்கள் குட்டையாகவும், அதிக பசி உள்ளவர்களாகவும், வெட்கம் இல்லாதவர்களாயும், திருட்டுத்தனம், மயக்கும் குணம், பிடிவாதம் உள்ளவர்களாகவும் இருப்பர். மக்கள் அவரவர் தொழில்களை விட்டு விட்டு, வேறு விதமான தொழில்களில் ஈடுபட்டு பணம் சேர்ப்பர்! அதிலும், கபடத்தையே அதிகமாகக் கைக்கொள்வர். கறவை இல்லாத பசுக்களைப் பேண மாட்டார்கள்.
தாய், தந்தையர்களை கைவிட்டு விடுவர். மனைவி, அவருடைய தாய், தந்தை, சகோதரன், சகோதரி இவர்களுக்காக செலவு செய்து கொண்டிருப்பர். காலத்தில் மழை பெய்யாது; அகாலத்தில் பெய்யும்! கலியில் அற்ப விஷயத்துக்குக் கூட அடிதடி, குத்து வெட்டு, கொலைகள் நடக்கும். இப்படி இன்னும் நிறைய சொல்லப்பட்டுள்ளது. ஏதோ இப்போது ஓரளவு தான் நாம் காண்கிறோம். அதுவரையில் நாம் புண்ணியம் செய்தவர்கள். இன்னும் போகப் போக நடக்கக் கூடிய விபரீதங்கள் நிறைய உண்டு. அவற்றை நாம் பார்க்காத வரையில் நல்லது!
***

ஆன்மிக வினா-விடை!


காலை எழுந்தவுடன், துளசி மாடத்தை வழிபடுவதால் என்ன நன்மை?
துளசி செடி தெய்வீகத் தன்மை உடையது. அதை தினமும் பூஜித்து, வலம் வருவதாலும், மாலையில் விளக்கேற்றி வழிபடுவதாலும், வீட்டில் பல நன்மைகள் ஏற்படும். அப்படி பூஜிக்கும் வீடுகளில், குழந்தைகள் ஆரோக்கியமாகவும், நன்கு படிப்பவர்களாகவும் திகழ்வர். வீட்டில் விஷக்காற்று வீசாது.
***

வைரம் ராஜகோபால்

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (5)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sudharshan - chennai  ( Posted via: Dinamalar Android App )
28-டிச-201200:33:06 IST Report Abuse
Sudharshan இது படித்த பின் நிம்மதி்யாக இருக்கு யார் மேலேயும் த்பில்லை காலம்
Rate this:
Share this comment
Cancel
anandhaprasadh - Bangalore,இந்தியா
26-டிச-201212:31:46 IST Report Abuse
anandhaprasadh போகிற போக்கில் திருமணம் செய்து குழந்தைகள் பெற்றுக்கொள்ளாமல் இருப்பது நல்லது... பாவம் நமது சந்ததிகள் இந்த கொடூர கலியுகத்தில் பிறந்து துன்புற வேண்டாம்...
Rate this:
Share this comment
Cancel
neelakantan s - mumbai,இந்தியா
23-டிச-201222:47:24 IST Report Abuse
neelakantan s கலி யுகத்தின் விபரீதங்களை படிக்கும்போதே நெஞ்சு பட பட என்று அடித்துகொள்கிறது இன்றைய இளைய சமுதாயம் எப்படி இருக்க போகிறதோ
Rate this:
Share this comment
Cancel
subha - sharjah,ஐக்கிய அரபு நாடுகள்
23-டிச-201214:38:58 IST Report Abuse
subha நடப்பது கலியுகம். .
Rate this:
Share this comment
Cancel
Praveen Sundar P.V. - Vellore,இந்தியா
23-டிச-201204:57:57 IST Report Abuse
Praveen Sundar P.V. இவ்வற்றில் பெரும்பாலும் நாம் சந்தித்து விட்டோம்..........,
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.