இது உங்கள் இடம்!
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

23 டிச
2012
00:00

விவஸ்தை கெட்ட ஜென்மங்கள்!


கடற்கரையில் அமர்ந்திருந்தேன். சிறிது தூரத்தில், இரண்டு இளைஞர்கள் அமர்ந்து, சுவாரஸ்யமாக பேசிக் கொண்டிருந்தனர். நைசாக காதை நீட்டினேன். ஒருவர், தன் முதலிரவு அனுபவங்களை விலாவரியாக, உற்சாகம் கரைபுரள, சினிமா கதை போல் சொல்லிக் கொண்டிருந்தார். அதில், அவருடைய மனைவியின் உடலழகை விவரித்த போது, பேச்சில் பெருமை தாங்கவில்லை. மற்றவர், "ஜொள்ளு' விட்டு, கேட்டுக் கொண்டிருந்தார்.
இந்த பேச்சைக் கேட்ட எனக்கு, அருவருப்பாக இருந்தது. எத்தனை அநாகரிகமான பேச்சு இது? குடும்ப அந்தரங்கங்களை இப்படி வெளிச்சம் போட்டு கூறினால், இவர் மனைவியை, நண்பர் பார்க்கும் போது, எப்படி நல்ல கண்ணோட்டத்தில் பார்க்கத் தோன்றும்? நண்பர் கூறின வார்த்தைகள் தானே நினைவுக்கு வரும். இது எந்தெந்த மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும்!
நீங்கள் இப்படி நண்பர்களிடம் சொல்லும் விஷயம், மனைவிக்கு தெரிந்தால், எத்தனை வேதனைப்படுவார்?
ரோட்டில் செல்லும் போது, உங்கள் மனைவியை, ஆண்கள் சாதாரணமாக பார்த்தால் கூட, எப்படி கோபம் வருகிறது? அப்படியிருக்க, நண்பர் உங்கள் மனைவியை நல்ல கண்ணோட்டத்தில் பார்க்க முடியுமா? யோசிங்க புதுமாப்பிள்ளைக@ள!
— வீ.குணாளன், புதுவை.

கேட்டாளே ஒரு கேள்வி!

ஒரு திரைப்படத்தில், கமலஹாசன், குழந்தைகளின் முன்னிலையிலே மனைவியை முத்தமிடுவார். எதிலும், ஒளிவு - மறைவு இருக்கக் கூடாது. செக்ஸ் விஷயங்களை குழந்தைப் பருவத்திலேயே மனதில் பதிய வைத்து விட்டால், அவர்கள் வளர்ந்த பின், அந்த விஷயத்தில், "தவறு' செய்ய மாட்டார்கள் என்று ஒரு விளக்கமும் சொல்லப் படும்.
நல்ல விஷயந்தானே என்று, நானும், என் மனைவியும், காதலித்துக் கைபிடித்த கதையை, என் பேரன், பேத்திகளிடம் அவ்வப்போது, பிரஸ்தாபிப்பது வழக்கம்.
"ஆமாம்... நீயும், பாட்டியும் லவ் பண்ணுனதா சொல்றீங்களே... அப்போ பீச்சு, பார்க்ல எல்லாம் பாட்டு பாடிட்டே டான்ஸ் ஆடி இருப்பீங்களே... என்ன பாட்டு பாடுனே? அந்த பாட்டை இப்ப பாடி, அதே மாதிரி ஒரு டான்ஸ் ஆடு. உங்க பின்னணியில கூட டான்ஸ் ஆடி பாடுன உன் பிரண்ட்செல்லாம், இப்ப என்ன பண்றாங்க, எங்க இருக்காங்க?' என்றாள் ஒரு நாள்.
ஆடிப்போனேன். திரைப்படங்களில் ஹீரோவும், ஹீரோயினும், காதலிக்கும் போது, பாடிக்கொண்டே டான்ஸ் ஆடுவது போல வரும் காட்சிகளின் பாதிப்பு என்று புரிந்தது. என்ன செய்ய; என்ன சொல்ல?
எம்.பாலசுந்தரம், சென்னை.
* நல்லவேளை... சினிமாவுல வர்ற ஹீரோ - ஹீரோயின் மாதிரி, "காஸ்ட்யூம்' போட்டுகிட்டு வந்து ஆடுங்கன்னு சொல்லாம விட்டாளே... அதுவரைக்கும் சந்தோஷப்படுங்க பாலா.
பொ.ஆ.,

பக்தி என்பது என்ன?


அண்மையில், நான் என் நண்பர் ஒருவரின் வீட்டிற்குச் சென்று, அங்கு தங்கும்படி நேர்ந்தது. அது பழைய காலப்பெரிய வீடு. வீட்டில் கிட்டத்தட்டப் பத்து குடும்பத்தினர், "போர்ஷன்'களில் குடியிருந்தனர். விடியற்காலை 5:00 மணியிருக்கும். மார்கழி மாதமாதலால், ஓரிரு, "போர்ஷன்'களில் வெங்கடேச சுப்ரபாதம் போன்ற பக்திப் பாடல்கள், "டிவி'களிலிருந்து ஒலிக்கத் தொடங்கின. அந்த ஒலி, எல்லாருக்குமே காதை அடைக்கும் அளவுக்கு இருந்தது. சற்று நேரத்திற்குள், கிட்டத்தட்ட எல்லா, "போர்ஷன்'களிலிருந்துமே விதவிதமான பக்திப்பாடல்கள் ஒலிக்கத் தொடங்கின. இதில், இன்னும் முக்கியமான விஷயம் என்னவென்றால், அவரவர்கள் தங்களுக்குப் பிடித்தமான, "டிவி' சேனல்களை போட்டிருந்தனர். கிட்டத்தட்ட வெங்கடேச சுப்ரபாதம், கந்தர் சஷ்டி கவசம், ஐயப்பப் பாடல்கள், சில வேத மந்திரங்கள், மகிஷாசுர மர்த்தினி ஸ்தோத்ரம், திருப்பாவை என்று, ஒட்டு மொத்தமாக அலறிக் கொண்டிருந்தது.
இதனால் ஏற்படும் ஒலி அளவு, எந்த அளவுக்கு தொந்தரவாக இருக்கும் என்பதை யாருமே உணர்ந்த மாதிரி தெரியவில்லை. இந்த சப்தம் காரணமாக, விடியற்காலையில் எழுந்து படிக்கும் பழக்கம் இருக்கும் பள்ளி மாணவர்களுக்கு, அந்த பழக்கத்தை, பெற்றோரே இல்லாமல் செய்து விடுவர் போலிருக்கிறது.
இதற்காக, நான் தெய்வ பக்தி இல்லாதவன் என்று அர்த்தம் இல்லை. ஆனால், "டிவி'யில் போட்டால் தான் பக்தி என்பது அல்ல. அதை அவரவர்களுக்கு மட்டும், கேட்கிற மாதிரி வைத்துக் கொள்ளலாமே. அதைவிடச் சிறப்பு, வீட்டில் உள்ளவர்கள், அவரவர்களுக்கு பிடித்த ஸ்தோத்ரங்களையோ, பாடல்களையோ மற்றவர்களுக்குத் தொந்தரவு இல்லாமல் பாராயணம் செய்யலாமே!
எஸ்.ராமசாமி, சென்னை.

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (16)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
GandhiSGandhi - salem,இந்தியா
26-டிச-201213:05:14 IST Report Abuse
GandhiSGandhi ஐயா நடராஜன் அவர்களே, நீங்க சொல்றது விதண்டாவாதம் we r in 21 st century understand that first then utilise for the right needs..
Rate this:
Share this comment
Cancel
Raman - Chennai,இந்தியா
25-டிச-201220:01:43 IST Report Abuse
Raman @குணாளன், முதலில் இவரது கடித்ததில் உள்ள ஆதிக்க மனப்பான்மையை எண்ணி வருந்துகிறேன். ஆஷaடபூதிகள் பெண்ணை மற்றவர் "விழுங்குவது போல" பார்த்தால் கோவம் வருகிறது என்று அந்த பெண்ணை என்னமோ (மணம் புரிந்து இருந்தாலும்) தன "பொருளாக" எண்ணும் தன்மை தெரிகிறது. அடுத்தவர் பேச்சை ஒட்டு கேட்கும் இவர், எந்த விதத்திதில் நல்லவர்? இவரின் வர்ணனைகள் ஏன் இவரின் (இவனின்?) மன விகாரத்தை வெளிப்படுத்துவதாக இருக்க கூடாது? அடுத்து, ஒரு பெண் மணமானவரோ, இளம் பெண்ணோ அழகாக தன்னை அலங்கரித்து கொண்டு ஏன் செல்கிறார், மற்றவரால் அவர் பாராட்டப்பட வேண்டும் என்ற ஒரு அடிப்படை நோக்கம் அங்கு உண்டு. அறிவியல் ரீதியாக எத்தனையோ காரணம் காட்டலாம். அதனை "அனுமதிக்கும்" ஆணும் - தான் ஒரு அழகியை மணந்து உள்ளேன் என்று பறைசாற்ற அப்படி செய்கிறான். இல்லை எனில் அந்த அலங்காரத்திற்கு "தேவை" என்ன? சரி, இவர் சொன்ன "அந்தரங்க விஷயங்களை" பரிமாறும் அந்த ஆடவர்களை பார்ப்போம். தான் இன்னாரை புணர்ந்தேன் என்று ம், அந்த பெண்ணை கரெக்ட் பண்ணி ஆகிவிட்டது என்றும், பல பெண்களை காதலிப்பதாக பெருமை கொள்ளும் வயதினர் அவர்கள். அவர்களுக்கு ஆதரவாக சொல்லவில்லை. அவர்கள் "தாழ்வு மனப்பான்மையில்" மிகைப்படுத்தி பேசுபவர்கள் போலும். காதலியை அவள் மேல் இருக்கும் காதலில் நண்பனுடன் விரக தாபத்தில் விவரிக்காத காதலன் இல்லையா என்ன? இலக்கியத்தில் இருக்கிறது, "அத்தான் என்ன அத்தான்" என்று திரைப்படங்களில் பாடலாக இருக்கிறது. அதனை பாராட்டுகிறோம். அதனை நிஜ வாழ்வில் பார்த்தால் தவறு என்கிறோம். அதனை நான் செய்வேனா என்று கேட்க முயல வேண்டாம். எல்லா இலக்கியங்களும் எல்லோருக்கும் பிடிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. இதனை ஏன் கண்டிக்க வேண்டும்? தன நண்பனின் மீது இருக்கும் அதீத நம்பிக்கை என ஏன் கொள்ள கூடாது? அந்த நம்பிக்கை தவறு என்று சொல்ல யாருக்கு உரிமை உண்டு? ஒருவருக்கும் இல்லை என்பது என அபிப்பிராயம். ஒட்டு கேட்டு அதனை பெருமையாக வெளியிட்ட இவரை கண்டிக்க வேண்டும்.
Rate this:
Share this comment
குட்டி chuvar - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
26-டிச-201209:45:43 IST Report Abuse
குட்டி chuvarஎன்னே ஒரு தெளிவு... ஐயோ... எங்க போய் முட்டிக்கிறதுன்னு தெரியல... முதலில் ஒரு அரசியல்வாதி போல் பேசுவதை நிறுத்தி விட்டு ஒரு சாதாரண குடிமகனாக பேசுவோம்... அரசியல்வாதிகள்தான் "நீ ஊழல் பெருச்சாளி" என்றால் "நீ என்ன யோக்கியனா" என்று ஒருவருக்கொருவர் கேட்பார்கள்.ஒரு திருவள்ளுவரல்ல ஆயிரம் திருவள்ளுவர்கள் வந்தாலும் உங்களின் நினைப்பையெல்லாம் திருத்த இயலாது. "அப்பொருள் மெய்ப்பொருள் காணும் அறிவை" விட்டு விட்டு குறை சொல்பவர்களை குறைசொல்லியே நமது வாழ்க்கையைக் கழித்துவிடுவோம். அப்படிப்பார்த்தால் யாரும் எங்கு குறைகள் நடந்தாலும் சுட்டிக்காட்டக் கூடாது - நீங்கள் உட்பட ..இரண்டாவது,.இலக்கியமோ சினிமாவோ , ஒரு நடைமுறை வாழ்க்கையில் இருந்து வெகுதூரம் என்பதை எல்லோரும் நன்றாக அறிந்ததனால்தான் யாரும் தேனிலவுக்கு மரத்தை சுற்றி பாட்டுப்பாடி ஆடுவதில்லை. இல்லை தேனிலவில் என்ன நடக்கிறது என்பதை "வீட்டுக்கு வீடு நடப்பதுதானே" என்று சினிமாவில் காண்பிப்பதில்லை.அதற்குப் பெயர் வேறாகிவிடும். குதர்க்கவாதங்கள்தான் பேசுவதென்றால் எதற்கு வேண்டுமானாலும் பேசலாம். நண்பனின் மீது அதீத நம்பிக்கையாம்..அந்தப் பெண் அந்த நண்பனின் தங்கையாக இருந்தால்???? ஒரு பேச்சுக்கு கேட்கிறேன். இல்லை நண்பன் மீது அதீத நம்பிக்கை என்று ஒருவர் தன் உடன்பிறந்த சகோதரியின் அழகை நண்பனிடம் வர்ணிப்பாரா? மிகைப்படுத்திப் பேசுவது வேறு. ஒரு பெண்ணுடன் அறையில் நடந்த விஷயங்களை அவள் ஒரு விபச்சாரியாக இருந்தாலும் சபையில் விலாவாரியாக மைக் வைத்து கத்துவது வேறு.இந்த ஊரில் ஏன் நம்மூரிலும் விசில் ப்ளோயர்ஸ் என்று உண்டு. ஒரு இடத்தில் தவறுகள் இருந்தால் யார் வேண்டுமானாலும் சுட்டிக்காட்டலாம்.அவர்கள் தங்களது அடையாளத்தை வெளிப்படுத்தவேண்டிய அவசியம் இல்லை.இவர் ஒரு விசில் ப்ளோயர்.அவ்வளவுதான்.இவர் செய்தது தவறு, ஆனால் அது எந்த விதத்திலும் அந்த இளைஞர்களின் தவறை நியாயப்படுத்திவிடாது.ஒருவேளை அவர்கள் தாங்கள் செய்த ஒரு கொலையைப்பற்றி பேசிக்கொண்டிருந்திருந்து,இவரது தகவல் அவர்களை பிடிக்க உதவியிருந்தால். எப்படி பொய்மையும் வாய்மையிடத்தவோ, இங்கேயும் அப்படித்தான்....
Rate this:
Share this comment
GOWSALYA - DENHEDLER,நெதர்லாந்து
28-டிச-201202:16:46 IST Report Abuse
GOWSALYAசூப்பர் பதில் நண்பரே............இதற்குமேல பதில் இல்லை...............
Rate this:
Share this comment
Cancel
News Commitor - chennai,இந்தியா
25-டிச-201200:28:20 IST Report Abuse
News Commitor அறிவு முதிர்ச்சி அடையாத பையனை திருமணம் செய்து வைத்தால் இப்படிதான் பேசுவான். இன்றெல்லாம் பொடிப்பசங்களிடம் கூட ஏதாவது ஒரு விதத்தில் அவர்கள் கையில் காசு கிடைத்து விடும். உடனே திருமணம் செய்து வைத்து விடுவர் பெற்றோர். கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்று வாழும் சிந்திக்காத ஒருவரின் வாழ்க்கை எப்படி உருப்புடும்? சாதாரணமாக பேருந்து ரயில்களில் கூட அவர்கள் "அமைதியாக" பேசுவதை பார்த்திருக்கிறேன், அடுத்த அரைகிலோமீட்டருக்கு கேட்கும். இதிலிருந்தே அவர்களது ஒழுக்கம் தெரிந்துவிடும். அவர்களுக்கு திருமணம் செய்து வைத்து விட்டால் இப்படிதான்.
Rate this:
Share this comment
Raman - Chennai,இந்தியா
25-டிச-201220:07:06 IST Report Abuse
Ramanவன்மம் வெளிப்படுகிறது இவரது பதிப்பில். பொடி பயல்கள், மன முதிர்வு இல்லாதவர்கள், ஏதேனும் ஒரு வகையில் பைசா கிடைத்துவிடும் என்று மட்டம் தட்டி, சிந்திக்காதவன், மனம் போல வாழ்க்கை என்று நிந்தனை வேறு. உங்கள் சிறு வயதில் நீங்கள் மிகைபடுத்தி பேசியது இல்லை போலும். அந்த அளவு தன்னம்பிக்கையுடன் இருந்தீர் போலும், ஆனால் எல்லோரும் அப்படி இருக்க வேண்டும் என்று எந்த நியதியும் இல்லை. நண்பர்கள், கல்லூரி மாணவர்கள் அந்த வயதில் சப்தம் போட்டு சிரிப்பதும், பேசுவதும் தவறானது அல்ல. அதற்க்கும் ஒழுக்கத்திற்கும் என்ன சம்பந்தம். அவர்கள் உங்கள் நியதிகளின் படி இல்லை என்றால் ஒழுக்கம் அற்றவர்கள என்ன? என்ன ஒரு அறிவு முதிர்ச்சி ungkaL பதிப்பில்....
Rate this:
Share this comment
Cancel
MOHAN. A - Tiruvannamalai,இந்தியா
24-டிச-201215:55:19 IST Report Abuse
MOHAN. A அவங்க முதல் இரவில் பற்றி, தன பொண்டாட்டிய பத்தி பேசுனது தப்புதான்.. நீ ''நைசாக'' காதை கொடுத்தியே அது ரொம்ப நாகரீகமா.. முதல்லே உங்க முதுகுல இருக்கிற அழுக்க கழுவுங்கடா..
Rate this:
Share this comment
Cancel
Rajagiri.Siva - Sharjah,ஐக்கிய அரபு நாடுகள்
24-டிச-201212:31:16 IST Report Abuse
Rajagiri.Siva நண்பர்களிடம் பகிர்ந்துக்கொள்ள வேண்டிய விசயங்களில் வரம்பு வேண்டும். இல்லையெனில் பாதிக்கப்படுவது நட்பும், நண்பர்களும்தான்...
Rate this:
Share this comment
Cancel
Suresh kumar - chennai,இந்தியா
24-டிச-201212:28:33 IST Report Abuse
Suresh kumar பிறருக்கு இடையுறு ஏற்படாதவாறு, டிவியின் ஒலி அளவு இருத்தல் வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
Vaal Payyan - Chennai,இந்தியா
24-டிச-201210:29:00 IST Report Abuse
Vaal Payyan தொலைகாட்சியில் முடிந்த அளவு discovery NATGEO போன்ற சேனல்களை குழந்தைகளுடன் பாருங்கள் ... பல நல்ல விஷயங்களை தெரிந்து கொள்வார்கள் ...
Rate this:
Share this comment
Cancel
GOWSALYA - DENHEDLER,நெதர்லாந்து
24-டிச-201204:51:38 IST Report Abuse
GOWSALYA நண்பரே இப்போ நம்ம நாடு ஐரோப்பநாட்டை விட மோசமாகிட்டுது...அதுதான் தனது அந்தரங்க முதலிரவு பற்றிய விமர்சனம்......இந்த டி.வியும்,நாடகங்களும் எப்படியெல்லாம் சிறுவர்கள் மனத்தைக் கெடுக்கின்றன என்பதை அவர்கள் புரிந்துகொள்வதில்லை.உ+ ம்..எங்க வீட்டுக்கு அருகே இலங்கையை சேர்ந்த ஒரு குடும்பம்.அவர்களின் பெண்ணுக்கு 7 வயசுதான்.வெளியே போகப் புறப்பட்டார்கள்.அப்போ அந்தப் பெண் தாயுடன் சண்டை என்னவெனில்,அப்பாவின் வண்டி வெள்ளைநிறம்,அதனால் எனக்கு வெள்ளை உடையும்,காலணியும் தா என்று....ஆனால்,தாயோ அப்படியெல்லாம் சொல்லக்கூடாது...யார் அப்படிப் போடுவது என்றாள்?"' ஏன் நேற்று பார்த்த படத்தில திரிஷா அப்படித்தான் போட்டிருந்தாள்..அதேமாதிரிப் போடு "" கடைசியில நடந்ததென்ன?ஒருவரும் வெளியே போகவில்லை.இதில் சினிமாக்காரங்களை குற்றம் சொல்லமுடியாது...."' ஒ நாம சினிமா எடுக்கிறோம்,நீங்க பிள்ளைகளை எதற்கு கூட்டிப் போறீங்க என்று கேட்பாங்க ???..ஆனால், பெற்றோர் கவனம் எடுக்கலாம் தானே...?????..செய்வார்களா?....டி,வியிலையோ,ரேடியோவிலையோ பக்திப் பாட்டுக் கேட்டாதான் பக்தி வருமா?.....பக்தி என்பது பாட்டுக் கேட்டோ,கோவிலை ஆயிரம் தரம் சுற்றியோ வருவதில்லை.நம்ம மனம் சுத்தமா,ஒருவருக்கும் தீங்கு செய்யாம,பெற்றோர்களை துன்புறுத்தாம வணங்கினாலே போதுமானதே.....
Rate this:
Share this comment
Cancel
Natarajan Iyer - chennai,இந்தியா
23-டிச-201217:33:37 IST Report Abuse
Natarajan Iyer எங்கள் வீட்டில் டிவி பார்க்க கடும் கட்டுப்பாடுகள் உண்டு. வேறு வேலைகள் எதுவும் இல்லாதபோது மட்டுமே அதுவும் மதியம் ஒருமுறை செய்திகளும் இரவு தூர்தர்ஷன் செய்திகளும் பாப்போம். எந்த சீரியலும் பார்ப்பதில்லை. உருப்படாத பட்டிமண்டப பேச்சுக்கள்,சினிமா, ஜோசியம் அதிர்ஷ்டகல்,ஜாக்பாட்,மானாட மயிராட போன்ற எதுவும் கிடையாது. எந்த கட்சியின் சானல்களும் பார்க்க மாட்டோம்.கிரிக்கெட் அறவே கிடையாது. டிஸ்கவரி நேஷனல் ஜாகரபி, அனிமல் பிளானெட் போன்ற உபயோகமான சானல்கள் பாப்போம்.விஜய் TV நீயா நானா பார்ப்பதுண்டு. அதிகபக்ஷம் ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரம்.ஞாயிறு மட்டும் நான்குமணி நேரம். டிவி சிக்னல் வரவில்லை என்றால் கவலையே படமாட்டோம்.
Rate this:
Share this comment
Naaradhar Naaradhar - Southington,யூ.எஸ்.ஏ
24-டிச-201201:38:50 IST Report Abuse
Naaradhar Naaradharஎங்கள் வீட்டிலும் இதே கட்டுப்பாடுகள்தான்.நாங்கள் எல்லாரும் காலேஜ் முடிக்கும் வரை வீட்டில் டி வி யே வாங்கவில்லை.அக்கம் பக்கத்து வீடுகளுக்குச் சென்று பார்ப்பது நினைத்துக் கூட பார்க்க முடியாது....
Rate this:
Share this comment
Raman - Chennai,இந்தியா
25-டிச-201220:22:11 IST Report Abuse
Ramanஅன்பர்களே, இதற்கு எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்திய நிகழ்வுகளையும் காணலாம். டி.வி தணிக்கை என்பது ஒரு சிறுவனை, சிறுமியை தன வயது ஒத்த நண்பர்களிடம் இருந்து தனிமை படுத்தலாம். வாழ்க்கை என்பது வெறும் படிப்பு மட்டும் அல்ல, சமூகம் சார்ந்து வாழ்வது கூட. அன்று பலரும் மானாட மயிலாட பற்றி சிலாகித்து பேசினால் அதில் கலந்து கொள்ள முடியாமல் தனித்து இருந்தால் அந்த சிறாரின் / கல்லூரி மாணவரின் மனம் எப்படி இருக்கும் என்று யோசிக்கவும். பல நேரங்களில் பெற்றொருக்கு தெரியாமல் peer pressure ல் பல காரியங்களை செய்ய தூண்டும். அதற்காக ஒரேடியாக டி.வி யே கதியாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. இணையம், செல் போன், கேபிள் என்று பல திசை திருப்பும் கருவிகள் இருக்கும் காலம் இது. அன்று போல ஒரு மர்பி ரேடியோவும், இலங்கை ஒலிபரப்பும் மட்டும் பொழுது போக்கு அல்ல. அவைகளை எப்படி கையாள வேண்டும் என்று அறிய வேண்டுமே அன்றி புறகணித்தல் உதவாது....
Rate this:
Share this comment
Raman - Chennai,இந்தியா
25-டிச-201220:40:22 IST Report Abuse
Ramanஎஸ் ராமசாமி அவர்களே, ஒரு கதை சொல்லுகிறேன் கேளுங்கள். நாரதர் விஷ்ணுவிடம் சென்று "பரந்தாமனே, உன் பக்தர்களில் தலை சிறந்தவன் நான்தானே " என்று பாராட்டுக்காக வேண்டி கேட்டாராம். விஷ்ணு - :இல்லை நாரதா, அதோ அந்த விவசாயியை பார். அவன்தான் என் தலை சிறந்த பக்தன்: என்றாராம். நாரதருக்கு கோவம் வந்தது. நொடிக்கு ஒரு முறை உங்கள் பெயரை சொல்லி எப்பொழுதும் உங்களையே போற்றும் என்னை விட அவன் எப்படி என்று கேட்டார். விஷ்ணு ஒன்றும் பேசாது, ஒரு கப் (Cup) பில் விளிம்பு வரை எண்ணெய் விட்டு - நாரதா, இந்த எண்ணெய் சிந்தாது இந்த கப்பை கையில் வைத்து கொண்டு உலகை மூன்று முறை வலம் வா என்றார். நாரதரும் அப்படியே செய்து விட்டு வந்தார். அப்படி வந்த நாரதரை அந்த விவசாயின் வீட்டிற்கு கூட்டி சென்று அவன் ஒரு நாள் வாழ்வை மறைந்திருந்து பார்த்தனர். காலை எழுந்ததும் மாடு கன்றுகளின் சப்தங்க்களிடையே, சிறார்களின் கூச்சலகளுக்கு இடையே, என்று ஆரம்பித்து எந்த ஒரு செயலை செய்ய துவங்கும் பொழுதும் - பரந்தாமா என்று விளித்து விட்டு காரியத்தை துவங்கினான். அன்றைய தின முடிவில் விஷ்ணு - நாரதா, அந்த விவசாயி எத்தனை முறை என்னை கூப்பிட்டான் - என் கேட்க, " ஒரு முப்பது நாற்பது முறை இருக்கும்" என்றார் நாரதர். விஷ்ணு - "நீ உலகை சுற்றி வருகையில் என்னை எத்தனை முறை கூப்பிட்டாய்? " நாரதர் - "நான் எண்ணெய் கப்பின் மீது கவனமாக இருந்ததால் நினைவில்லை" விஷ்ணு - " ஒரு முறை கூட இல்லை. அதனால் தான் இவன் என் தலையான பக்தன். குடும்ப சுமையை நாள் முழுக்க சுமந்த போதிலும் என்னை கூப்பிட மறக்காதவன். இவனை விட நீ எப்படி உயர்ந்தவன் ஆவாய்" ஆக இந்த கதையில் இருந்து என்ன தெரிகிறது. அந்த காலை சப்தங்களிலும் அந்த பரந்தாமனை நினைக்க முற்படும், நினைப்பவனே உண்மையான பக்தன். சுற்று சூழல் எப்படி இருப்பினும். கடவுளை எண்ண அமைதியான இடம் தேவை என்ற நியதி இல்லை. அது டிவி சப்தத்திலும் காணலாம். பாரதி போல - காக்கை சிறகினிலும், கேட்கும் ஒலியில் கடவுளை தரிசிக்கலாம். அவர்களை குற்றம் சொல்லாதீர்கள். அது அவர்கள் முறை. உங்கள் தனிப்பட்ட முறையில் இறைவனை தேடுங்கள்....
Rate this:
Share this comment
Cancel
srinivasan sulochana - nsw2147,ஆஸ்திரேலியா
23-டிச-201204:19:50 IST Report Abuse
srinivasan sulochana பக்தி பாடல்கள கேட்பது நல்லதுதான் . ஆனால் அதிகாலையில் ஆண்டவரோடு அமைதியாக அவருடைய எல்லா ஆசிர்வதங்களுக்கும் நன்றி சொல்லி அவரை போற்றி அவரோடு சம்பாஷித்து அவரோடு ஆத்மார்த்தமாக இணைந்து இருப்பது நல்லது. அதிகாலை நேரம் ஆண்டவர் நம்மோடு உலாவுகிற நேரம். டிவியில் பக்தி பாடல் போட்டு விட்டு பேப்பர் படித்துகொண்டு காபி சாப்பிட்டு கொண்டிருப்பதல்ல..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.