புனித பயணம்!
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

23 டிச
2012
00:00

இயேசுவின் புனித பாதம் பட்ட இடங்களுக்குச் சென்று தரிசித்து வருவது இந்திய கிறித்துவ பக்தர்களிடையே நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அப்படி அவர்கள் செல்லும் இடங்கள் யாவை? அங்கு என்ன தரிசிக்கின்றனர் என்பதை சுருக்கமாக பார்ப்போம்.
சென்னையிலிருந்து விமானத்தில் புறப்பட்டு, ஜோர்டான் நாட்டின் தலைநகரான, அம்மான் நகரம் சென்று இறங்குகின்றனர்.
அங்கிருந்து மவுன்ட் நெபோ சென்று, இயேசுவின் சீடரான மோசேயை புதைத்துள்ள இடத்தை தரிசிக்கின்றனர்.
அடுத்து, ஜோர்டான் பள்ளத்தாக்கு வழியாக, நாசரேத் வருகின்றனர். இறை தூதர் காபிரியேல், மேரியின் வயிற்றில் இறை தூதர் இயேசு பிறக்க போகிறார் என அறிவித்த இடம் இது. இதை பசிலிக்கா ஆப் அனுன்சியேஷன் என அழைக்கின்றனர்.
இந்த நகரத்தில், இயேசுவின் தந்தை ஜோசப் நடத்தி வந்த தச்” தொழிலகம் உள்ளது. இந்த தொழிலகத்தை இன்று வரை பராமரித்து வருகின்றனர்.
அருகில் கானா என்ற இடம் உள்ளது. இங்கு இயேசு, ஒரு திருமணத்தின் போது, ஆறு ஜாடி தண்ணீரை, அமிர்த ரசமாக மாற்றி, அதிசயம் செய்தார்.
இயேசுவின் மலைப் பிரசங்கம் பிரசித்தி பெற்றது. இந்த தலைப்பிரசங்கத்தை முதன் முதலில், மவுன்ட் டபூர் என்ற இடத்தில் தான் துவக்கினார். இந்த இடத்தில், சர்ச் ஆப் பிடிடியூட்ஸ் உள்ளது. இவற்றையெல்லாம் பக்தர்கள் தரிசிக்கின்றனர்.
இங்கிருந்து மீன் பிடிக்கும் படகில் ஏறி, கலிலேயா வழியாக, செயின்ட் பீட்டரின் வீட்டை சென்று தரிசிக்கின்றனர்.
இந்த பகுதியில் ஓடும் ஜோர்டான் நதிக்கு மிகுந்த சிறப்பு உண்டு. ஆம்... இந்த நதியில் தான், இயேசு ஞானஸ்நானம் பெற்றார். மேலும், பல்லாயிரக்கணக்கான மக்கள், இங்கு ஞானஸ்நானம் பெறுகின்றனர். இதனால், பக்தி சுற்றுலாவில் இது முக்கிய இடம் வகிக்கிறது. பக்தர்கள் இதில் குளிப்பதுடன், இந்த நீரை ஊருக்கும் கொண்டு செல்கின்றனர்.
சுற்றுலாவில் அடுத்து பயணிக்கும் இடம் எரிகோ. ஒரு காலத்தில் இங்கிருந்து ஒரு அத்திமரம் பட்டுப்போன நிலையில் இருந்ததாம். ஆனால், இயேசு அதை தொட்டதும், மீண்டும் துளிர்க்க ஆரம்பித்து, வளர்ந்து விட்டது. மேலும், இங்கு தான் இயேசு மற்றொரு அதிசயமும் செய்தார். ஒரு பிறவி குருடனின் கண்களில் சேற்றை பூசி, குளத்தில் கழுவி வர இயேசு கூற, அவனும் அப்படியே செய்தான். என்ன ஆச்சரியம் கண் பார்வை வந்துவிட்டது.
எருசலேம் செல்லும் வழியிலு<ள்ள, எரிகோ என்ற இடத்தில் இளைப்பாறியுள்ளார் இ@ய”. ஆக, இந்த மூன்று நிகழ்ச்சிகள், பக்தர்களின் மனதில் நீங்கா இடம் பெற்று, பயபக்தியுடன் தரிசிக்க வைக்கின்றன.
அடுத்து செல்லும், பெதஸ்தா என்ற இடத்தில், குட்டைகள் இருப்பதை காணலாம். இங்கும், இயேசு ஒரு அதிசயம் செய்தார். இயேசு இந்த பகுதிக்கு வந்தபோது முடமாய் இருந்த ஒருவரை, குட்டைத் தண்ணீரில் இறங்கச் செய்து, எழுந்ததும், அவன் கால்கள் இயற்கை கால்களை போலானது.
அடுத்து, டோலோ ரோசா என்ற சோகப்பாதையில் பக்தர்கள் நடக்கின்றனர். இந்த இடத்தில், இயேசு சிலுவையை சுமந்தபடி, 14 இடங்களை கடந்து சென்றார். அவற்றில் ஐந்தில் மட்டுமே தற்போது நடக்க அனுமதி.
அடுத்து, எகிப்தின் சீனாய் நகருக்குச் சென்று, செயின்ட் கேத்தரின் மான்ஸ்டரியை தரிசிக் கின்றனர். இந்த இடத்தில் தான் இறைவனின் பத்து கட்டளைகளை, மோசே பெற்று, உலகிற்கு அறிவித்தார். இங்கு ஒரு நூலகம் உள்ளது. வாடிகன் நகர நூலகத்தை விட கொஞ்சம் சிறியது. ஆனால், அபூர்வ புத்தகங்கள் மற்றும் தேவ குறிப்புகளை இங்கு காணலாம்.
இங்கு அருகில், எரியும் புதர் என ஒரு இடம் உள்ளது. அங்கு ஆறாம் நூற்றாண்டைச் சார்ந்த ஒரு பழமையான ஆலயத்தை காணலாம்.
பக்தி சுற்றுலா என்றாலும், அதை ஒட்டிய அதிசய பகுதிகளை பார்ப்பது, சுற்றுலா பயணிகளின் இயல்பான ஆர்வம்.
இதனால், வழியில் ஹெப்பாவில் பெச்சியின் தொங்கு தோட்டம், பகாய் கோவிலையும் பார்த்து வருகின்றனர். அத்துடன் நைல் நதியை ஒட்டி நடந்து, அதன் அழகை ரசிப்பதுடன், பிரமிடுகள், ஸ்பிங்க்ஸ் மற்றும் கெய்ரோ அருங்காட்சியகம் போன்றவற்றையும் பார்க்கின்றனர்.
இன்று, இத்தகைய பக்தி பயணம் மேற்கொள்ள, ஏராளமான டிராவல்ஸ் ஏஜென்சிகள் உதவுகின்றன. ஒருமுறை நீங்களும்தான் போய் பார்த்துவிட்டு வாருங்களேன்.
***

ராஜிராதா

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.