அந்துமணி பதில்கள்
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

23 டிச
2012
00:00

*பி.ராஜிவ், திருப்பூர்: ஒரு மனிதனுக்கு முடிவில்லா இன்பத்தைத் தருவது பணமா, பதவியா, புகழா?
மூன்றுமே இல்லை என நினைக் கின்றனர் பலர்! உடம்பில் ஏதாவது ஒரு இடத்தை சொரிந்து கொண்டிருப்பதைத் தான் இன்று இன்பமாகக் கருதுகின்றனர் பெரும்பாலானோர்!
***

*ஆர்.ராஜலட்சுமி, ஆழ்வார்பேட்டை: பீகார், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களை, பின்தங்கிய மாநிலங் களாக ஏன் இன்னும் கருதுகின்றனர்?
படிப்பறிவு இல்லை... பெண்ணுக்கு ஏற்ற திருமண வயது, 21 தான் என்றால் ஏற்பதில்லை... பீகாரில் வயதுக்கு வராத பருவத்தில் உள்ள பெண் குழந்தைகள் நூற்றுக்கு, 58ம், ராஜஸ்தானில், 50 என்ற விகிதத்தில் கல்யாணம் செய்து கொடுத்து விடுகின்றனர்.
— இம்மாநிலங்கள் பின் தங்கியவை தானே!
***

*வே.பெருமாள்சாமி, விழுப்புரம்: இனி எப்படி நடந்து கொண்டால் நல்லாட்சி தர முடியும் ஜெ., யால்?
ஆடம்பரம், படாடோபம், தணியாத கவுரவத்தை மூட்டை கட்டி வைத்து, ஒவ்வொரு மனிதனும் நல்வாழ்க்கை வாழ திட்டங்கள் போட்டு, நிம்மதியான, ரவுடீஸ் பயமில்லாமல் தமிழகத்தை மாற்றினால், நல்லாட்சி அமையும்!
***

*எஸ்.விஜயகுமார், ஈரோடு: இப்போதெல்லாம் உங்கள் பதிலில், "அந்த மாதிரி' கணக்கெடுப்பெல்லாம் வருவதே இல்லையே...
"அந்த மாதிரி'யில் உங்களைப் போன்ற ஆர்வலர்கள் அதிகமிருப்பது தெரியும்... உங்கள் ஆவலை வாரா வாரம் பூர்த்தி செய்யத்தான் நினைக்கிறேன்! பெரும்பாலான வாசகிகள் - ஒரு சில வாசகர்கள் எதிர்ப்புத் தெரிவிக்கின்றனரே... அதனால், இனி, மாதம் ஒரு முறைதான், "அந்த மாதிரி!' ஓ.கே.,யா?
***

** அ.சிங்காரம், லால்குடி: ஒரு மனிதன் முன்னேற தடையாக இருப்பது எது?
முன்னேறுவோமா, மாட்டோமா என்ற சந்தேகம் தான்! சந்தேகப்படும் பழக்கம் உள்ளவர்களால் எந்தக் காலத்திலும் முன்னேற முடியாது!
***

*பி.உமாமகேஸ்வரி, வந்தவாசி: அந்துமணி... உன் பிறந்த நாள் எப்போது? பரிசுப்பொருள் அனுப்ப ஆர்வமாய் உள்ளேன்...
அடுத்த ஞாயிறுக்கு, அடுத்த ஞாயிறு. கடிதம் எழுதும் உங்களின் அன்பே எனக்குக் கிடைக்கும் மிகப் பெரிய பரிசு... அதை விட வேறு பரிசு எதையும் அளித்து, என்னை அன்னியனாக்கி விடாதீர்கள்!
***

**எம்.நடராஜபாபு, பெரியகுளம்: ஜாதிக் கட்சிகளின் கதி, இனி எப்படி?
நான் முன்பே சொன்னது போல, மூட்டை, முடிச்சுக் களை கட்ட வேண்டியது தான்! ஜாதியைச் சொல்லி, இனி எக்காலமும் பிழைப்பு நடத்த முடியாது என்பது உறுதியாகி விட்டது. பாவம் ஜாதிக்கட்சித் தலைவர்கள்... சில, பல கோடிகளை இழந்து தவிக்கின்றனர்!
***

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
சு கனகராஜ் - chennai -33,இந்தியா
28-டிச-201217:56:21 IST Report Abuse
சு கனகராஜ் ஜாதி கட்சி தலைவர்களுக்கு அந்தந்த கட்சியிலேயே மவுசு குறைந்து தான் காணப்படுகிறது
Rate this:
Share this comment
Cancel
Shakthi - Puducherry,இந்தியா
23-டிச-201218:32:09 IST Report Abuse
Shakthi ஜாதியைச் சொல்லி, இனி எக்காலமும் பிழைப்பு நடத்த முடியாது என்பது உறுதியாகி விட்டது... ஆனால் ஜாதி கலவரத்தை உண்டாக்கி பிழைப்பு நடத்த முயன்று வருகிறார்கள் .. மக்களே தமிழ் மக்களே ப்ளீஸ் உஷார் உஷார்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.