இதப்படிங்க முதல்ல!
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

23 டிச
2012
00:00

கொடுமைகளை சொல்லும் பாலாவின், பரதேசி!


நான் கடவுள் படத்தில், பிச்சைக்காரர்களின் வாழ்க்கையில் நடக்கும் கொடூரங்களை காண்பித்து, கலங்கடித்தவர் டைரக்டர் பாலா. அதே போல், இப்போது, பரதேசி படத்தில், கொத்தடிமைகளாக சிக்கி தவிக்கும், ஒரு கூட்டத்துக்கு நேரும் கொடுமைகளை சொல்லியிருக்கிறார். அதில், அங்கிருந்து தப்பிக்க முயற்சி செய்பவர்களின் குதிகால் நரம்பை அறுக்கும் காட்சிகளையும், தத்ரூபமாக படமாக்கி உள்ளார் பாலா.
சினிமா பொன்னையா

த்ரிஷா மீது நம்பிக்கை!

தமிழில், சமர், பூலோகம் மற்றும் என்றென்றும் புன்னகை என மூன்று படங்களில் நடித்து வரும் த்ரிஷா, தெலுங்கிலும் இரண்டு படங்களில் நடித்து வருகிறார். இதன் பிறகும், சில படங்களில் நடிக்க கதை கேட்டு வைத்திருக்கிறார். இதில், சில படங்கள் இரண்டு ஹீரோயின் சப்ஜெக்ட் என்றாலும், த்ரிஷாவுக்கே முக்கியத்துவம் வாய்ந்த வேடம் கொடுத்துள்ளனர். அந்த அளவுக்கு, இன்னமும் த்ரிஷாவின் பர்பாமென்ஸ் மீது, இயக்குனர்களுக்கு முழு நம்பிக்கை இருந்து வருகிறது. அதிர்ஷ்டம் ஆறாய் பெருகுகிறது!
எலீசா

பூர்ணா - மனீஷா சபதம்!


பெரும்பாலும் ஒரே படத்தில் இரண்டு நாயகிகள் நடித்தால், ஸ்பாட்டில் அவர்கள், எலியும், பூனையுமாக இருப்பது தான் வழக்கம். ஆனால், கரு.பழனியப்பனின், ஜன்னல் ஓரம் படத்தில் நடிக்கயிருக்கும் பூர்ணா, மனீஷா இருவரும், அப்படத்தின் பூஜை அன்றே, நல்ல தோழிகளாகி விட்டனர். அதோடு, "எங்களுக்குள் எக்காரணம் கொண்டும் ஈகோ வெடிக்காது...' என்றும், படப்பிடிப்பு குழுவினர் முன், சபதம் செய்துள்ளனர். வீரியத்தை விட காரியம் பெரிது!
எலீசா

வருத்தப்பட்ட வேதிகா!

தமிழில், முனி மற்றும் சக்கரகட்டி உட்பட ஆறு படங்களில் நடித்துள்ள வேதிகா நடிக்கும் ஏழாவது படம் தான், பரதேசி. இந்த படத்தில் தேயிலை தோட்டத்தில் வேலை செய்யும் பெண்ணாக நடித்துள்ள அவர், தன் உடம்பு முழுக்க கருப்பு வண்ணத்தை பூசி, படமாக்கியபோது, ரொம்பவே வருத்தம் அடைந்துள்ளார். ஆனால், இப்போது அந்த காட்சிகளை ஸ்கிரீனில் பார்க்கும் போது, அந்த ரோலுக்கு ரொம்ப மேட்சாக உள்ளது. அதனால், "என்னை கருப்பு பெண்ணாக டைரக்டர் பாலா மாற்றியது சரிதான்...' என்கிறார் வேதிகா. வேலைக்கு தகுந்த வேஷம்!
எலீசா

கல்லா கட்டும் டாக்டர் சீனிவாசன்!

ஐ மற்றும் கண்ணா லட்டு தின்ன ஆசையா என்று, சில படங்களில் நடித்த, "பவர் ஸ்டார்' டாக்டர் சீனிவாசனை, மேலும் சில கம்பெனிகள் தொடர்பு கொண்டு, ஹீரோவாக நடிக்க கதை சொல்லி வருகின்றனர். அதில், ஒரு கம்பெனி, சீனிவாசனையே கிண்டல் செய்வது போல் கதை சொன்ன போது, "காமெடி கதையில் நடிக்கிறேன். ஆனால், என்னையே காமெடி செய்வது போன்ற கதையில் நடிக்க மாட்டேன்...' என்று மறுத்து விட்டார். மேலும், இதுவரை சம்பளம் விஷயமாக வாய் திறக்காமல் இருந்த சீனிவாசன், இப்போது கணிசமான சம்பளம் பேசி, கல்லா கட்டவும் துவங்கியுள்ளார்.
சி.பொ.,

சமீரா ரெட்டி புத்தாண்டு கொண்டாட்டம்!


டிசம்பர் 31ம் தேதி, நடைபெறும் புத்தாண்டு கொண்டாட்டத்தில் நடனமாட, 50 லட்சம் ரூபாய் சம்பளம் பேசியுள்ளார் சமீரா ரெட்டி. மும்பையிலுள்ள பிரதான ஸ்டார் ஓட்டலில் நடைபெறவிருக்கும் அந்நிகழ்ச்சிக்கு, மும்பை சினிமாவின் முக்கிய பிரபலங்கள் மட்டுமின்றி, சில ஹாலிவுட் பிரபலங்களும் கலந்து, சமீராவின் குத்தாட்டத்தை கண்குளிர கண்டுகளிக்கப் போகின்றனர்.
சினிமா பொன்னையா

தமிழில் ஹரி இயக்கிய, சாமி படத்தை சஞ்சய்தத்தை நாயகனாக வைத்து இந்தியில், ரீ-மேக் செய்து வருகிறார் கே.எஸ்.ரவிக்குமார்.

அவ்ளோதான்!

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.