Advertisement
அன்புடன் அந்தரங்கம்!
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

23 டிச
2012
00:00

அன்புள்ள சகோதரிக்கு—
நான், ஒரு பன்னாட்டு உணவுப்பொருள் தயாரிக்கும் கம்பெனியின் சென்னைக் கிளையில் இருந்து, தென் மண்டல பொறுப்பாளராக பணியாற்றி, சென்ற வருடம் ஓய்வு பெற்றவன். இப்போது எனக்கு வயது 59. என்னுடைய மனைவிக்கு வயது 54. ஒரு வங்கியில் பொறுப்பான பதவியிலிருந்து வி.ஆர்.எஸ்., வாங்கியவள்.
நாங்கள், 15 வருடத்திற்கு முன், மகாராஷ்டிர மாநிலத்தில், தனியார் டிரஸ்ட் மூலம், ஒரு பெண் குழந்தையை சுவீகாரம் எடுத்து, வளர்த்து வருகிறோம். நாங்கள், சுவீகாரம் எடுத்த போது, அவளுக்கு வயது ஒன்றரை மாதம். தகுந்த முறைப்படியும், மகாராஷ்டிர மாநில உயர்நீதி மன்ற விதிகளின்படியும், உரிய தத்து ஆவணங்களுடன் எடுத்துள்ளோம்.
அவளுக்கு, 9 வயது வரை, எந்த ஒரு பிரச்னையும் இன்றி, வாழ்க்கை சந்தோஷமாக கழிந்தது. அவள், 11வது வயதில் பூப்பெய்தி விட்டாள். அப்போது அவள், 6வது படித்துக் கொண்டிருந்தாள்.
பூப்பெய்துவதற்கு, ஆறுமாதம் முன்பிருந்தே, அவளுடைய நடவடிக்கைகளில், மாற்றங்கள் தோன்ற ஆரம்பித்தன. பிடிவாதமும், கோபமும் படிப்படியாக அதிகரித்தது. பாடங்களில் கவனமின்மையால், பள்ளிக்கு செல்வதில் விருப்பமின்மை, நாங்கள் சொல்வதைக் கேட்காமல், பொருட்களை உடைப்பது, அவள் அம்மாவை அடிப்பது, அவளை குறை சொல்வது போன்ற வற்றால், வீட்டில் நிம்மதியின்மை தலைதூக்க ஆரம்பித்தது.
இந்நேரத்தில், அவளுக்கு துணை வேண்டுமென்ற காரணத்தால், என் மனைவி, அவள் செய்த வேலையை ராஜினாமா செய்து விட்டாள். அத்துடன், மகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்த போது, அவளுக்கு மனோவியாதி இருப்பது கண்டறியப் பட்டது. அதற்கான சிகிச்சைகளும் தொடரப் பட்டது.
இதற்கிடையே, அவள் 6ம் வகுப்பு பெயில் ஆனதால், அவளுக்கு பள்ளிக்கு செல்ல விருப்பமில்லை. நாங்கள், பள்ளி முதல்வரை நேரில் சந்தித்து, நிலைமையைப் புரிய வைத்து, ஒரு வழியாக மறுமுறை தேர்வுக்கு சம்மதிக்க வைத்து, டியூஷனுக்கு ஏற்பாடு செய்து தேர்வு எழுத வைத்தோம்.
ஆனால், இவளுடைய நடத்தை காரணமாக, அந்த பள்ளியில் தொடர அனுமதிக்காமல், டீ.சி., கொடுத்து விட்டனர். அதன்பின், நான்கு பள்ளிகளில் மாறி மாறி சேர்த்தும், அவளால் படிப்பை தொடர முடியவில்லை.
பின்னர் கவுன்சலிங் செய்ததில், "டிக்ஸ் லெக்சியா' பிரச்னை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, அவளுடைய ஆலோசனைப்படி சென்னையில் உள்ள, இதற்கான சிறப்புப் பள்ளியில் அவளை சேர்த்து, தற்சமயம் 10ம் வகுப்பு எழுதி, 50 சதவீதம் மார்க் வாங்கி பாஸ் செய்தாள். கடந்த நான்கு ஆண்டுகளாக, அவளுடைய அட்டகாசம் தாங்க முடியவில்லை.
இதற்கிடையே என் மனைவிக்கு, கர்ப்பப்பை நீக்கப்பட்டதால், மிகவும் பலவீனமாக இருக்கிறாள். அவளுக்கு என் மகளை தடுக்கவோ, எதிர்க்கவோ முடிவதில்லை. தற்சமயம், நான் ஓய்வு பெற்றுவிட்டேன். நான் வீட்டில் இருப்பது, என் மகளுக்கு பொறுக்கவில்லை. என்னை வேலைக்கு போகும்படி கட்டாயப்படுத்தி, கெட்ட வார்த்தைகளால் திட்டுகிறாள். கூடவே, அவளுக்கு கார் வாங்கித் தர வேண்டுமென்றும், அது இல்லாததால், அவளுக்கு வெளியுலகில் மரியாதை இல்லை என்றும் கூறி ஆர்ப்பாட்டம் பண்ணு கிறாள்.
போதாக்குறைக்கு, பல ஆண்கள் நட்பு வேறு. அவர்களுடன் ஊர் சுற்றுவது மற்றும் மணிக்கணக்காக மொபைல் போனில் பேசுவது போன்றவை சகஜமாகி விட்டது. இப்போது, அவளால் அவளை கட்டுப்படுத்திக் கொள்ள முடியவில்லை. இவை மாற வேண்டும் என்பதற்காக, கடந்த வருடம் அவளை வெளியூரிலுள்ள ஒரு, உண்டு உறைவிட பள்ளியில் சேர்த்தேன். அங்கு நான்கு நாட்கள் நன்றாக நடந்து கொண்டாள். ஐந்தாம் நாள் திருட்டுத்தனமாக வார்டனின் மொபைல் போனை, அவருக்கு தெரியாமல் எடுத்து, அவளுடைய பாய் ப்ரண்டிற்கு போன் செய்துள்ளாள்.
விடுதியில் பெரிய கலாட்டா செய்து, "இரண்டு நாட்களுக்கு வீட்டிற்கு அனுப்ப வேண்டும் என்றும், இல்லாவிட்டால், மாடியிலிருந்து குதித்து விடுவேன்...' என்று பயமுறுத்தியும், அங்கிருந்து கிளம்ப தயாராகி விட்டாள். இந்த சூழ்நிலையில், பள்ளி முதல்வர், இரவு 12:00 மணி அளவில் போன் செய்து, என் மகளை அங்கிருந்து உடனடியாக அழைத்து செல்ல வேண்டும் என்றும், இல்லையேல், மற்ற குழந்தைகளை இவள் கெடுத்து விடுவாள் என்றும் கூறியதால், அவளை அங்கிருந்து அழைத்து வந்து விட்டோம். தற்போது சென்னையில் உள்ள அனைத்து பள்ளிகளிலும், அவளுக்கு இடம் கிடைப்பது கேள்விக்குறியாக உள்ளது.
இதைத் தவிர, திருடும் பழக்கம் வேறு உள்ளது. வீடு மற்றும் விருந்தினர், வீடு, கடை, சூப்பர் மார்க்கெட் ஒன்றையும் விடுவதில்லை தொடர்ந்து, 10 நிமிடம் ஒரு இடத்தில் இருந்தால், அவளுடைய கைவரிசையைக் காட்டி விடுவாள். பணம், அழகு சாதனப் பொருட்கள் என்று எதையும் விடுவதில்லை. ஒரு முறை பள்ளியில், அவள் ஆசிரியர் @ஹண்ட் @பகில் இருந்து கூட பணம் எடுத்துள்ளாள். எவ்வளவு சொன்னாலும் திருந்துவதில்லை. பல கவுன்சிலிங் சென்றும் பலனில்லை. எல்லாரும் நாங்கள் தான் மாற வேண்டும் எனக் கூறுகின்றனர்.
தற்சமயம் நான் உங்களின் உதவியை நாடுவது
* தற்போது இவள் மைனர் என்பதால், இவளை சட்டப்படி எப்படி திருத்துவது?
* இவள் ஆண் நண்பர்கள் மூலம், இவளுக்கு எந்த பிரச்னையும் வராமல், இவளை எப்படி காப்பாற்றுவது அல்லது அவர்களை இவளிடம் இருந்து எப்படி பிரிப்பது. அவர்களிடம் எங்களைப்பற்றி மட்டமாக கூறியிருப்பதால், பலமுறை நாங்கள் சப்தம் போட்டும் எங்களுக்கு அவர்கள் பயப்படுவதில்லை.
* இவள் பெண்ணாக இருப்பதால், இவளுக்கு ஒழுக்கத்தை எப்படி கற்பிப்பது என்று தெரியவில்லை.
* இன்று, அவள் எங்களை விட ஓவர் பவர் ஆகிவிட்டதால், பிற்காலத்தில் அராஜகமாக எங்கள் சொத்துகளை அபகரித்தால், எங்கள் எதிர்காலம் என்னாவது?
* ஒரு வேளை, கல்யாணத்திற்கு பின், திருந்த வாய்ப்பிருந்தால், இன்னும் இரண்டு வருடங்களுக்கு, அவள் மேஜர் ஆகும் வரை பொறுத்திருக்க வேண்டும். அப்படியும் ஒரு வேளை, பிள்ளை வீட்டாருடன் சண்டைபோட்டு நிரந்தரமாக இங்கேயே இருந்துவிட்டால் அதை எப்படி சமாளிப்பது?
* அவளை சுவீகாரம் எடுத்த இடத்திற்கு திருப்பி அனுப்பி, ஏதாவது தொகையை, அவள் பேரில் டெபாசிட் செய்து வைக்க, சட்டப்படி முடியுமா?
* தற்சமயம் என் மனைவியின் உடல் நிலையும் தெம்பாக இல்லாததால் நிலமையை எப்படி சமாளிப்பது என்று பயமாக உள்ளது.
* பிற்காலத்தில், ஒரு வேளை நாங்கள் முதியோர் இல்லத்தில் இருக்க நேர்ந்தால், என் மகளின் நிலமையை நினைத்தால் பாவமாகவும், பயமாகவும் உள்ளது. அவள் எங்களுடன் இருந்தால், கட்டாயப்படுத்தி பணத்தை பிடுங்கி ஊதாரித்தனமாக செலவழித்து விடுவாள்.
தாங்கள் தயவு செய்து இதற்கு தக்க ஒரு பரிகாரம் கொடுக்க வேண்டும்.
இப்படிக்கு அன்பு சகோதரன்.
***

அன்புள்ள சகோதரருக்கு —
உங்களது கடிதம் கிடைத்தது.
நீங்கள் அடுக்கும் அத்தனை பிரச்னைகளும், ஒரே ஒரு சிறுமிக்குள் குவிந்திருப்பது, மிகவும் ஆச்சரியமான விஷயம். நீங்கள் அவளுக்கு உயிரியல் பெற்றோர் இல்லை; தத்து பெற்றோர் என்பதை, அவள் எவ்வாறு தெரிந்து கொண்டாள்?
சிறு வயதிலேயே, நீங்களே உண்மையைக் கூறி வளர்த்தீர்களா அல்லது உறவினர், நண்பர்கள் உண்மையை போட்டு உடைத்து விட்டனரா?
சரி... எட்டு கேள்விகள் கேட்டுள்ளீர்கள் ஒவ்வொன்றுக்கும் பதில் பார்ப்போம்.
* பதினெட்டு வயது நிரம்பாத ஒரு மைனர் பெண்ணை, எப்படி திருத்துவது என கேட்டுள்ளீர்கள். தத்து மகள் மீது, சீரான கண்டிப்புடன் கூடிய அன்பை பொழியுங்கள். அவளுடைய, வன்முறையான நடத்தைக்கு அடி பணியாதீர்கள். அவளுக்கு வாங்கி கொடுத்திருக்கும் கைபேசியை பிடுங்கி வையுங்கள் அல்லது போஸ்ட்பெய்ட் கனெக்ஷனுக்கு மாற்றுங்கள். அவளுடைய தீய பழக்க வழக்கங்கள், தீயநடத்தை அவளது எதிர்காலத்தை எப்படியெல்லாம் பாதிக்கும் என, விடாப்பிடியாய் விளக்குங்கள். கரைப்பார் கரைக்க கல்லும் கரையும்.
* தத்து மகளை, அவளுடைய ஆண் நண்பர்களிடமிருந்து பிரிப்பது மிகவும் கடினமான காரியம் தான். இளவயது கர்ப்பம், எய்ட்ஸ், பால்வினை நோய்கள் வரக்கூடிய சாத்தியத்தை கூறி, ஆண் நண்பர்களுடன் பழகுவதை தடுக்கலாம்.
* அறிவுரையாக இல்லாது, ஆலோசனைகளாக, நல்ல நல்ல விஷயங்களை, மகள் காதுகளில், போட்டுக் கொண்டே இருக்க வேண்டும்; மாற்றம் ஒரு நாளில் வராது. தொடர்ந்து சளைக்காமல், முயற்சித்தால் வெற்றி கிடைக்கும்.
* உங்களது சொத்துகளை, உயிருள்ள வரை நீங்கள் அனுபவிக்க வேண்டும்; உங்களது கண்களுக்கு பின், உங்களது மகள் நடத்தை திருப்திகரமாய் இருந்தால், சொத்து அவள் கைக்கு போக வேண்டும் என, இப்போதே உயில் எழுதி வைத்து விடுங்கள்.
* திருமணத்திற்கு பின், உங்களது மகள் திருந்த வாய்ப்பிருக்கிறது. எத்தனையோ முரட்டு சண்டிக் குதிரைகளை, திருமணம், வண்டிக் குதிரைகளாக மாற்றி இருக்கிறது. ஒரு வேளை, கணவன் வீட்டாருடன், சண்டை போட்டு, உங்கள் தத்து மகள் வந்துவிட்டால், அவளை பராமரிக்கும் பொறுப்பு உங்களுக்குத்தான்.
* தத்து மகளை, அபராதம் கட்டி, சுவீகாரம் எடுத்த இடத்திற்கு திருப்பி அனுப்புவது, சட்டப்படி நடக்காத விஷயம்.
* உங்கள் சம்பாத்தியத்தை, உங்கள் சந்தோஷத்திற்காக, உங்கள் மனைவியின் <உடல் நலனுக்காக செலவழியுங்கள். நீங்களும், உங்கள் துணைவி யாரும் நல்ல உடல்நலத்துடன் இருந்தால் தான், மகளின் சிறப்பான எதிர்காலத்திற்கு பாடுபட முடியும்.
* நீங்கள் இருவரும், ஏன் முதியோர் இல்லம் போக வேண்டும்? கொண்ட கொள்கையில் பிடிவாதமாக இருந்தால், மகளின் ஊதாரி செலவை தடுக்கலாம்.
தவிர, ஒரு குழந்தையை தத்தெடுத்ததினால் தான், இத்தனை பிரச்னைகள் என்று, சோர்ந்து போய் விடாதீர்கள். பெற்றக் குழந்தைகளாலும், பெற்றோர்கள் பல சிரமங்களை படத்தான் செய்கின்றனர். ஆகவே, சுய இரக்கத்தை தவிர்த்து, உங்கள் மகள் வழிதோன்றும் பிரச்னைகளை எதிர்த்து போராடுங்கள்.
இறைவனின் மீது பாரத்தை போட்டு, உங்களது அன்றாட வாழ்க்கையை நகர்த்துங்கள். நாம் நல்ல பெற்றோரா இல்லையா, எங்கெங்கு வழுவியுள்ளோம் என, ஆத்ம பரிசோதனை செய்து, தவறு இருந்தால் மாறுங்கள்.
உங்கள் தத்து மகள் திருந்தி, நல்வாழ்க்கை வாழ, எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
என்றென்றும் தாய்மையுடன்,
சகுந்தலா கோபிநாத்.

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (43)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
s.r.janarthanan - ramanathapuram,இந்தியா
26-டிச-201213:16:12 IST Report Abuse
s.r.janarthanan all problems come on Negative thinking and tension. my advice is the girls joint in yoga and meditation do the meditation and then problem is solved . I suggest the good yoga center in chennai. in Armbakkam . cell :- 9952827633 & 9443489445
Rate this:
Share this comment
Cancel
sing venky - Stanford University, Melnopark,யூ.எஸ்.ஏ
26-டிச-201203:12:00 IST Report Abuse
sing venky முதலில் நல்ல மன நல மருத்துவரிடம் ஆலோசனை பெற வைக்கவும். திரு. மீனவன் ஐயா குறிப்பிட்டது போல ..அவள் திருட்டு பழக்கம் அவள் மன வியாதியின் பிரதிபலிப்பாக கூட இருக்கலாம். அவள் ஒரு குற்றவாளி அல்ல, நோயாளி. இதுவும் சரிபட்டு வர வில்லை என்றால்....... உடனடியாக சவுதி அரேபியாவில் ஏதேனும் ஒரு வேலையிலோ அல்லது கல்வி கூடத்திலோ சேர்க்கவும். நினைத்த நேரத்துக்கு இந்த நாட்டை விட்டு வெளியே செல்ல முடியாது. (நாட்டை விட்டு வெளியேற வேண்டுமானால் அதற்க்கு வெளியேறும் 'விசா' எடுக்க வேண்டும், அது எளிதல்ல) மற்ற படி இங்குள்ள சட்ட திட்டங்கள் அவளை தானாக மாற்றி விடும்-மாறியே ஆக வேண்டும்.
Rate this:
Share this comment
Raman - Chennai,இந்தியா
26-டிச-201209:21:18 IST Report Abuse
Ramanசவூதி போன்ற நாட்டில் "சிறை" வைக்க சொல்லுகிறீர்களா என்ன இந்த சிறு பெண்ணை? அந்த நாட்டின் சட்ட திட்டங்கள் கடுமையானவை. அதிலும் பெண்களை சமமாக பாவிக்காத நாடு அது. அந்த நாட்டில் இங்கு வளர்ந்த பெண் தவறாக ஏதேனும் செய்தால் சிறை செல்ல நேரிடும். பல வித இன்னல்களை அனுபவிக்க நேரிடும். எந்த ஒரு பெற்றோரும் அப்படி செய்ய விழைய மாட்டார்கள் - வளர்ப்பு பெற்றோர் கூட. அவள் சிறுமி ஐயா சிறுமி....
Rate this:
Share this comment
Cancel
Sam - Dallas,யூ.எஸ்.ஏ
25-டிச-201223:57:31 IST Report Abuse
Sam PLease give only vegiterian foods. lot of fruits, vegis, and nuts. Stop non veg, especially mutton and chicken. possible give fish. Check male hormone level, normally morden food induce male hormone among young girls. possiable give female hormone ts with Doctor advise. You can see lot of changes in her behavirours with in few weeks.
Rate this:
Share this comment
Cancel
murugu - moscow,ரஷ்யா
25-டிச-201223:01:50 IST Report Abuse
murugu மருத்துவ ரீதியில் இந்த நோயைக் குணப் படுத்த முடியும்,முதலில் உங்கள் மகளை யோகா கற்க அனுப்புவது கூட நல்லது ...
Rate this:
Share this comment
Cancel
nagaraj - AJMAN,ஐக்கிய அரபு நாடுகள்
25-டிச-201213:47:03 IST Report Abuse
nagaraj இங்கு அனைவரது கருத்துகளும் நன்றாக உள்ளது ராமன் மற்றும் மீனவன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் நன்றி...
Rate this:
Share this comment
Cancel
mahadevan - san diego,யூ.எஸ்.ஏ
25-டிச-201200:50:15 IST Report Abuse
mahadevan Everyone who expressed their opinions here has nothing but good intention. No one gains anything out of this. The girl's unusual behaviour shows some serious problems. That's why I urged the parents to see a Doctor who specializes in this field. This's one way of ruling out the impossible and get some mental peace. Brain is the centerpiece of body and even it doesn't function .01% normally, we cannot say that the person is normal except .01% lack of brain power. When the serotonin level in the brain fluctuates, so many mental problems stem. These people behave very sweetly sometimes and kind of wayward when the imbalance occurs. They become secretive, manipulative and stubborn. Why can't Dinamalar take this matter to a medical person as a social service, get some expert opinion and give peace of mind to this innocent parents.
Rate this:
Share this comment
Cancel
Ramesh Sundram - Yanbu-Al-Bahr,சவுதி அரேபியா
24-டிச-201218:56:05 IST Report Abuse
Ramesh Sundram Please the child that is the only solution to the arrogancy. I feel very pity at your age you should have a happy retired life. Dog's tail cannot be straightened many people can give the advise but you are suffering the reality. I really pity you and pray to God to give you enough strength for you and your wife The same thing which is happened to one of my close fri but she is not the adopted child it is her own child but the girl died under mysterious circumstances due to drug additction . He was crying for few years but now things are in order
Rate this:
Share this comment
Cancel
A.Mansoor Ali - Riyadh.Athika.,சவுதி அரேபியா
24-டிச-201210:34:01 IST Report Abuse
A.Mansoor Ali அன்புள்ள அண்ணனுக்கு முதலில் உங்கள் சுவீகார புத்திருக்கு உள்ள ஆண் நண்பர்கள் மூலம் அவளை திருத்த பாருங்கள்...அவளின் நண்பர்களை வைத்து அவளை நல்ல வழிக்கு கொண்டு வரலாம்...என்று நான் எண்ணுகிறான்... முல்லை முள்ளால் தான் எடுக்கணும்..இருந்தாலும் உங்களுக்கு என்று பிற்கால வாழ்க்கைக்கு சேமித்து வைத்து கொள்ளுங்கள்..... இவளின் ஆண் நண்பர்கள் மூலம் இவளுக்கு தகாத உறவு இருகிறதா???என்று பாருங்கள்....ஏன் ஏன்றால் தன் மீது குற்றத்தை வைத்து கொண்டு அதை மறைபதற்க்கு சில நேரங்களில் அவள் நடிக்கலாம்.... ஆண் நண்பர்கள் நல்லவர்களாக இருந்தால் இவளை திருத்தி விடலாம்...
Rate this:
Share this comment
Cancel
sri Rama - choa chu kang,சிங்கப்பூர்
24-டிச-201207:38:52 IST Report Abuse
sri Rama அனைவர்க்கும் வணக்கம் , தயவு செய்து எனது பிரச்சனைக்கு தகுந்த தீர்வு தரும்படி தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன் நான் சிங்கப்பூரில் பொறியாளராக பனி புரிகிறேன். நான் எனது மனைவி குழந்தைகளுடன் இங்கு 5 வருடங்களாக வசித்து வருகிறேன் . எனக்கு ஒரு அண்ணன் மற்றும் தம்பி. அண்ணன் டெல்லி இல் குடும்பத்துடன் தலைமை பொறியாளராக பனி புரிகிறார். அவருக்கு இரண்டு பெண் குழந்தைகள். தம்பி குடும்பத்துடன் பெங்களூர் இல் பனி புரிகிறார், எனது அம்மா பாண்டிச்சேரி இல் வசிக்கிறார். எனது அம்மா விற்கு சக்கரை வியாதி உள்ளது. எனது அம்மாவுக்கும் மற்ற மூன்று மருமகள்களுக்கும் சிறு சிறு பிரச்சனை உள்ளது. எபோதாவது யார் வீட்டிற்கு சென்றாலும் சிறு சிறு ஈகோ பிரச்சனையினால் கோபித்து கொள்வார். அதை சரி பண்ண சில மாதங்களாகும். மற்றபடி எங்கள் மூவர் மீதும் அளவு கடந்த பாசம் வைத்து உள்ளார். எங்களை வளர்த்து ஆளாக்க பல சிரமங்களை பட்டிருக்கிறார். நாங்களும் எங்கள் தாய் , தந்தை மீது அளவு கடந்த அன்பு வைத்துள்ளோம் .என் தாய்க்கு யார் வீட்டில் தங்குவதும் பிடிக்காது . பொதுவாக தங்க மாட்டார். என் தந்தைக்கு 10 வருடங்களுக்கு முன்பு பை- பாஸ் சர்ஜெர்ரி செய்தோம் , பிறகு 4 வருடம் கழித்து முதுகு தண்டு டிஸ்க் ஆபரேஷன் செய்தோம் . பிறகு 4 வருடங்களுக்கு முன் stroke என்னும் நோயால் பாதிக்கப்பட்டார் .இருந்தாலும் நங்கள் சரியான மருத்துவரை அணுகி தொடர் சிகிச்சை அளித்தல் ஆரோக்யமாக உள்ளார். தற்சமயம் என் தந்தை dementia என்னும் நோயால் படிக்கபட்டுள்ளர். இதனால் அவருக்கு 60% ஞாபக சக்தியை இழந்து விட்டார். அவருக்கு என் தாய் மற்றும் யாரையும் அடையலாம் தெரியவில்லை. வெளியே போக வேண்டும் என்கிறார். ஆனால் போனால் விட்டிற்கு வர வழி தெரியவில்லை . போக விட வில்லை என்றால் வீடு கேட் இல் நின்று அனைவரையும் அழைக்கிறார். ( நாங்கள் ஊரில் மரியாதையாக வாழ்ந்த குடும்பம். தற்பொழுது இந்த நிலையை எண்ணி என் தாய் செய்வதறியாது கண்ணீர் வடிக்கிறார். ( சிகிச்சை அளிக்கும் டாக்டர் இதை குனபடுதுவது கடினம் என்று கூறிவிட்டார் ) என் தந்தையை கவனிக்க முழு நீர உதவியாளரை நியமிக்கலாம் என்றால் எவ்வளவு தேடியும் ஆள் கிடைக்கவில்லை ) நான் என் வேலையை விட்டு விட்டு இந்தியா வரலாம் என்றால் எனது கடன் உள்ளது அதை இந்தியா வந்தால் அடைக்க முடியாது, மேலும் இந்தியாவில் குறைந்த வருமாம் உள்ளது. அதை வைத்து அனைத்தையும் சமாளிப்பது கடினம். என் அண்ணன் மற்றும் தம்பி இருவரும் இபோழ்து தான் வீடு வாங்கி உள்ளார்கள். அவர்கள் உள்ளுருக்கு ( பாண்டிச்சேரி) வர முயற்சித்தாலும் சரியான வாய்ப்பு கிடைக்கவில்லை. என் தந்தையால் என் தாய் உடல்நிலை பாதிக்கபடுமோ என்று பயமாக உள்ளது. என் தந்தைக்கு எதாவது ஆனால் என் தாய் இன் நிலைமையை யோசிக்க முடியவில்லை. இதை யோசித்து யோசித்து தினமும் தூங்க முடியாமல் தவிக்கிறேன். தயவு செய்து யாரவது அனுபவம் உள்ளவர்கள் தகுந்த ஆலோசனை கூறவும். இப்படிக்கு நன்றியுடன் வாசன்-சிங்கப்பூர்
Rate this:
Share this comment
Raman - Chennai,இந்தியா
26-டிச-201210:23:45 IST Report Abuse
Ramanஉங்கள் பிரச்னை வருத்தம் அளிக்கிறது. உங்கள் தற்போதைய நிலமை கடினமான தியாகங்களை செய்ய வேண்டிய நிலைக்கு உங்களையும் உங்கள் குடும்பத்தாரையும் தள்ளும். Dementia மிகவும் மோசமான ஒரு நிலைமை. உங்கள் தந்தையார் அல்சைமைர்ஸ் போன்ற மெதுவாக முப்படையும் நோயாக இருப்பின் இன்னமும் கடினமானதே. இதனை நீங்களும், உங்கள் சகோதரர்களும் அறிந்திருப்பீர்கள். மருத்துவர் விவரமாக சொல்லி இருப்பார். இந்த நிலையில் உங்கள் தந்தையார் ஒரு சிறு குழ்ந்தை போல, தாம் யார் என்பது தெரியாது. அதனால் பயம் வேறு உண்டாகும். எப்படி திருவிழாவில் காணாமல் போகும் குழ்ந்தை பயப்படுமோ அது போல. அதனை நீங்களும் அறிவீர்கள். இன்று உங்கள் பொருளாதார தேவையும், பெற்றோருக்கு செய்ய வேண்டிய கடமைகளும் எதிர் எதிர் திசையில் இருக்கின்றன. பெற்றோருக்காக எதிர்காலத்தை பணயம் வைப்பதா அல்லது உங்களை நம்பி இருக்கும் மனைவி, மக்களுக்கு நல்ல தலைவனாக இருப்பதா என்ற மன குழப்பம். பெற்றோரை நிராகரித்தால் அது ஒரு Guilt ஐ உருவாக்கும். அதற்காக வருங்காலத்தை ...? இதுதானே? இது போன்ற தீர்வில்லா நிலையில் நான் செய்வது இதுதான். ஒரு பேப்பர் பேனாவுடன் உடகாருவேன். இரு பக்க நிறை, குறைகளை எழுதுவேன். அதனை அந்த நிறை. குறைகளுக்கு ஏற்றாற் போல மதிப்பெண் அளிப்பேன். அந்த காகிதத்தை அப்படியே வைத்து விடுவேன். அதே கேள்விகளை ஒரு வாரம், இரு வாரம் கழித்து மீண்டும் மதிப்பெண் அளிப்பேன். இது போல - காலம் அனுமதித்தால் - மூன்று நான்கு முறை செய்வேன். பின்னர் மனைவி, சகோதர சகோதரிகளுடன் அமர்ந்து அந்த மூன்று-நான்கு மதிப்பெண்களையும் காண்பிப்பேன். அதன் முடிவுகளை சொல்லுவேன். அவற்றை விவாதிப்போம். ஆனால் மதிப்பெண்கள் மாறாது. அந்த மதிப்பெண்களை மதித்து அதன்படி செயல்படுவேன். தவறா சரியா என்று மீண்டும் கணிக்க மாட்டேன். அந்த காகிதங்களை பத்திரமாக எடுத்து லாக்கரில் வைத்துவிடுவேன். அத்துடன் எப்படி, ஏன் அந்த முடிவினை எடுத்தேன் என்று எழுதி வைத்து விடுவேன். அது எனக்கு மிகவும் உதவி செய்துள்ளது. எனக்கு guilty பீலிங் வரும் பொழுது அந்த கடிதங்களை படிப்பேன். ஏன் அந்த முடிவு எடுத்தேன் என்பது விளங்கும். யாராலும் வருங்காலம் எப்படி என்று சொல்ல இயலாது. இன்று எடுக்கும் முடிவுகள் நாளை தவறாக தெரியலாம். அதற்காக நம்மை நாமே குற்றம் சாட்டி கொள்ளலாம். அது எதற்கும் உதவாது. அந்த தருணத்தில் அந்த முடிவு எடுக்க என்ன காரணம் என்று தெரிந்தால் எடுத்த முடிவு, அது பிற்காலத்தில் தவறு என்று பட்டாலும், வருத்தம் ஏற்படாது. அதற்கு முன்னர் உங்கள் பெற்றோரை (இருவரையும்) ஒருவர் மாற்றி ஒருவர் தங்களுடன் தங்க வைத்து பேணி பாதுகாக்கலாமே? கஷ்டம்தான். இருந்தாலும் ..? உங்கள் தந்தையாருக்கு அது ஒவ்வாது - ஆனால் அதற்கும் ஏதேனும் வழி இருக்கும். ஒரு நல்ல நர்சிங் ஹோம். இது போன்ற நோயால் பாதிக்கப்பட்டவர்களை பேண உண்டா என்று தேடவும். தாயாரை அலைகழிக்க வேன்டாம். ஆனால் ஒன்று நினைவில் கொள்ளுங்கள், உங்கள் தந்தையாரின் நிலைமை இன்னமும் மோசமாகதான் போகுமே ஒழிய முன்னேற வாய்ப்புகள் குறைவு. மன திடத்துடன் அதனை எதிர்கொள்ள உங்கள் தாயாரை பக்குவப்படுத்த வேண்டும். நீங்கள் படித்தவர் ஆகையால் இந்த நோயின் தன்மைகளை அறிந்திருக்க கூடும். அது போல உங்கள் தாயார், சகோதரர்களையும் தயார் செய்யவும். என் நண்பரின் தாயார் இப்படிதான் இருந்தார். தன மகனையே அடையாளம் தெரியாமல் - என்ன கொடுமை. என் நண்பர் கண்ணீர் விடாத நாளே இல்லை. நான் Past Tense ல் சொல்ல காரணம் - இன்று அவர் இல்லை. அவரின் கடைசி நேரம் வரை அவரை ஒரு குழ்ந்தை போல பார்த்து கொண்டார். உங்கள் சுழ்நிலை படி, தீர்க்கமான முடிவு எடுங்கள். விவாதித்து எடுங்கள். அது உங்கள் முடிவாக இருக்கட்டும். மற்றவர்கள் என்ன சொல்லுவார்கள் என்று மறுகாதீர்கள். முடிவிற்கு பின் அதனை செயல்படுத்துங்கள். அந்த முடிவினால் வரும் விளைவுகளை எதிர் கொள்ளுங்கள் (அந்த விளைவுகள் அந்த பேப்பரில் மதிப்பெண் அலித்திருப்பீர்கள்). ஒன்றில் மட்டும் உறுதியாக இருங்கள். குற்ற உணர்வு கூடவே கூடாது. நீங்கள் எடுத்த முடிவு ஆய்ந்து எடுக்கப்பட்டது. சரியான முடிவு. அதில் திண்ணமாக இருங்கள். சில பிராக்டிக்கலான யோசனைகள். 1. உணவு விஷயங்கள். B12 நிறைந்த சத்துள்ள உணவுகள் சிறிது நிவாரணம் அளிக்கலாம். 2. பல சோதனை மருந்துகள் சிங்கப்பூர் போன்ற முன்னேறிய நாடுகளில் உண்டு. முயற்சிக்கலாம். 3. தனியாக உங்கள் தாயாரை விடாமல் ஒரு நல்ல பணியாளரை அமர்த்தவும். இது மிக அவசியம். 4. ஒரு நல்ல நாயை வளர்க்கலாம். அது Seeing Dog போல என்றும் கூட இருக்குமாறு செய்யலாம். 5. பல்வேறு அடையாள அட்டைகளை அணிவிக்கலாம். நீரிழிவுநோய் உள்ளவர்கள் அணிவது போல. 6. பல GPS locator சர்வீஸ்கள் உண்டு. ஒரு செல்போன் மூலம் அவர் தன இருப்பிடத்தை broad செய்யும் ப்ரோக்ராம் install செய்யலாம். நிறைய வழிகள் உண்டு அவர் காணாமல் போவதை தடுக்க. 7. அடைத்து வைக்காமல் அதே நேரம் மற்றவரை "அழைக்காமல்" இருக்க அவரை சிறு சிறு வேலைகள் செய்ய ஏவலாம். அது உங்கள் தாயாரை பொறுத்து இருக்கிறது. நினைவில் இருக்கட்டும். அவரால் அந்த வேலையை சரிவர் செய்ய இயலாது. ஆனால் அது அவரை occupied ஆக வைத்திருக்கும். நிறைய பொறுமை வேண்டும். நல்ல முடிவெடுங்கள். ஒன்று நினைவில் கொள்ளுங்கள். இந்த நோய்க்கு நீங்கள் காரணமல்ல. நீங்கள் உறக்கமின்றி இருப்பதால் அவருக்கோ உங்கலுக்கோஎந்த வித பயனும் இல்லை. ஒரு விதத்தில் உங்களுக்குதான் அது உடல் நலக்குறைவை தரும். வேலையில் மந்த உணர்வு வரும். நீங்கள் ஒரு நல்ல மன-நல மருத்துவரை அணுகி ஆலோசியுங்கள். உங்கள் மன உளைச்சலை போக்க. சில நேரங்களில் anti-depressant உங்களுக்கும் தேவையாக இருக்கலாம். உங்கள் stress ஐ குறைக்க. வாழ்த்துக்கள். இந்த துன்பமும் நீங்கும் என்று நினைவில் கொள்ளுங்கள். This will also pass....
Rate this:
Share this comment
Cancel
Raju K - San Jose,யூ.எஸ்.ஏ
23-டிச-201215:10:58 IST Report Abuse
Raju K மீனவன், அறிவுரை சொல்வது ரொம்ப சுலபம். அவர் இடத்தில நீங்கள் இருந்து பார்த்தால் தெரியும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.