இளமையை திருப்பித் தா!
* இறைவா...
இழந்த என் இளமையை
திருப்பித் தா...
தொழில்நுட்பம் இல்லா உலகில்
தொலைத்த ஆண்டுகள்
திரும்ப வேண்டும்!
* இணையதளத்தில்
இணை தேட வேண்டும்!
* முகநூலில்
முகம் காட்ட வேண்டும்...
அழகு பெண்களை
அணி சேர்க்க வேண்டும்!
* "ஆப்பிளில்' "அப்லோடு' செய்து
அசத்த வேண்டும்...
கைபேசியில் குறுந்தகவல் தந்து
குறும்பு செய்ய வேண்டும்!
* காது கருவியை கழற்றி
ஹெட்போனில் காதல் கவிதை
கேட்க வேண்டும்!
* மிஸ்டுகால்களை மிஸ் செய்யாமல்
காதோடு காது காதல்
பேச வேண்டும்!
* இறைவா...
இழந்த இளமை காலங்களை
இனி தருவாயா?
— ஜி.வி.ரமேஷ்குமார், மதுரை.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.