உலகிலேயே மூன்று இடங்களில்தான் கிறிஸ்தவ சீடர்களின் கல்லறை மீது ஆலயங்கள் கட்டப்பட்டுள்ளன. ஒன்று, ரோமில் உள்ள புனித ராயப்பர் ஆலயம், இரண்டு, ஸ்பெயினில் உள்ள புனித யாகப்பர் ஆலயம், மூன்றாவது, சென்னை மயிலாப்பூரில் உள்ள சாந்தோம் சர்ச் என்றழைக்கப்படும் புனித தோமையார் தேசிய திருத்தலம்.
புனித தோமையார், "என் ஆண்டவரே...என்...தேவனே...' என்று அறிக்கை வெளியிட்டு, இயேசுவின் உயிர்ப்பிற்கு சாட்சியாக விளங்கியவர்.
கி.பி.52ல், இந்தியா வந்த தோமையார், இங்கிருந்தபடி, பல அற்புதங்களை நிகழ்த்தினார். பின் கி.பி.72ல், அவர் இறந்ததும், அவரது கல்லறை மீது இந்த ஆலயம் எழுப்பப்பட்டது. பின், படிப்படியாக இந்த ஆலயம் நவீனப்படுத்தப்பட்டு, இன்று பேராலயமாக விண்ணைமுட்டும் அளவிற்கு எழுந்துள்ளது.
இந்த ஆலயம், அப்போதும் இப்போதும் பல ஆச்சரியங்களை தன்னகத்தே கொண்டுள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிகை கொண் டாட்ட பரபரப்பில் இருந்தபோதும், பங்கு தந்தையான காணிக்கை ராஜ், ஆலயத்தின் அனைத்து பகுதிகளையும் சுற்றிக்காண் பித்தார். அவர் சுற்றிக்காட்டிய சில இடங்கள், இதுவரை கேமராவின் கண்ணில் படாத இடங்களாகும்.
பாதாளத்தில் உள்ள தோமையரின் கல்லறை, சுனாமி அலைகளின் தடுப்பாக நின்ற பழைய கொடிமரம், பாதாளத்தில் இறங்காமலே சர்ச்சிற்குள் இருந்தபடியே, கல்லறையில் உள்ள தோமையாரை தரிசிக்கும் கண்ணாடி தரை, பழமையான கண்ணாடி ஓவியங்களைக் கொண்ட ஜன்னல்கள், எப்போதும் அருள்பாலிக்கும் மேரி, விண்ணுயர்ந்த புதிய கொடிமரம், அருங்காட்சியகம், பார்த்துக்கொண்டே இருப்பது போல் தோன்றும் குழந்தை இயேசுவின் சொரூபம் என்று, எண்ணற்ற விஷயங்கள் இங்கு உள்ளன.
— ஜோல்னா பையன்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.