பிரபல ஹாலிவுட் நடிகையும், பாப் இசை பாடகியுமான, மடோனாவுக்கு, 54 வயதாகி விட்டது. ஆனாலும், சர்வதேச இசை ரசிகர்களிடையே அவருக்குள்ள கிராக்கி, இன்னும் கடுகளவு கூட குறையவில்லை.
கடந்த 1990ல், ஒரு இசை ஆல்பத்துக்காக, இவர் அணிந்திருந்த உடை, சமீபத்தில் லண்டனில் ஏலம் விடப்பட்டது. இந்த உடையை, மூன்று பாடல்களுக்கு, மடோனா அணிந்திருந்தார். பச்சை நிற பட்டுத் துணியால் தயாரிக்கப்பட்ட இந்த உடையை, பிரபல பேஷன் டிசைனர், ஜீன் பால் கால்டியார், வடிவமைத்திருந்தார்.
"ஹங்கி பங்கி'என்ற இசை நிகழ்ச்சியின் போதும், இந்த உடையைத் தான், மடோனா அணிந்திருந்தார். இந்த உடை, ஏழு லட்சம் ரூபாய்க்கு ஏலம் போகும் என, எதிபார்க்கப்பட்டது. ஆனால், அனைத்து எதிர்பார்ப்புகளையும் முறியடித்து, 18 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனது.
இந்த உடைக்கு, "புல்லட்' என, பெயரிட்டு உள்ளனர். மடோனா அணிந்திருந்த உடையை, ஏலம் எடுத்தவரின் பெயர், பரம ரகசியமாக வைக்கப் பட்டுள்ளது. ஏலம் எடுத்த உடையை, அவர் என்ன செய்யப் போகிறார் என்பதும் தெரியவில்லை.
— ஜோல்னாபையன்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.