நம் நாட்டில், திரைப்பட நடிகைகளுக்கு பெரிய அளவில் சம்பளம் தரப்படுவது இல்லை. அதிகபட்சமாக, லட்சங்களில் தான், சம்பளம் பெறப்படுகிறது. பாலிவுட்டில் ஒரு சில நடிகைகள், ஒரு கோடி அல்லது இரண்டு கோடி ரூபாய் சம்பளம் பெறுகின்றனர்.
ஆனால், ஹாலிவுட்டில் நிலைமை வேறு. ஹாலிவுட் படங்களுக்கு, உலகம் முழுவதும் மார்க்கெட் இருப்பதால், அங்கு, நடிகைகளுக்கு சம்பளம் கொட்டி கொடுக்கப்படுகிறது. மிக பிரபலமான, போர்ப்ஸ் பத்திரிகை, ஹாலிவுட் நடிகைகளின் சம்பள பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில், ஹாலிவுட்டின் இளம் நடிகை, கிறிஸ்டின் ஸ்டுவர்ட், ஒரு திரைப்படத்தில் நடித்ததற்காக, 200 கோடி ரூபாய், சம்பளம் வாங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. "டுவிலைட் சகா' என்ற படத்தின் அதிரடியான வெற்றிக்கு பின் தான், கிறிஸ்ட் ஸ்டுவர்ட்டின் சம்பளம், இந்த அளவுக்கு, எக்குத் தப்பாக எகிறியுள்ளதாகவும், அதில் கூறப்பட்டுள்ளது.
இவருக்கு அடுத்தபடியாக, கேமரூன் டயாஸ் என்ற நடிகை, 190 கோடி ரூபாய், சம்பளம் வாங்குகிறார். பிரபல நடிகை ஏஞ்சலினா ஜோலிக்கு இந்த பட்டியலில், நான்காவது இடம் தான் கிடைத்துள்ளது.
— ஜோல்னா பையன்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.