பாங்க் ஆப் மகாராஷ்டிரா வங்கி பொதுத் துறையில் இயங்கி வரும் சிறப்பான வங்கி என்பது நாம் அறிந்தததுதான். 1936ல் புனேயைத் தலைமையகமாகக் கொண்டு இந்த வங்கி துவங்கப்பட்டது. வங்கிகள் 1969ல் தேசியமயமாக்கப்பட்ட போது இந்த வங்கியைச் சேர்த்து மொத்தம் 14 வங்கிகள் அரசுடமை ஆக்கப்பட்டன. தற்போது இந்த வங்கிக்கு இந்தியா முழுவதும் கிளைகள் இருப்பதுடன் சிறந்த வாடிக்கையாளர் சேவை, நவீனமயமாக்கல் ஆகியவற்றுக்காக அனைவராலும் அறியப்படுகிறது. இந்த வங்கியில் இள நிலை அதிகாரிப் பிரிவைச் சார்ந்த 45 சார்டர்டு அக்கவுண்டன்ட்களைப் பணி நியமனம் செய்வதற்கான அறிவிப்பு வந்துள்ளது.
தேவைகள்:
பாங்க் ஆப் மகாராஷ்டிராவின் சிறப்பு அதிகாரி பிரிவுக்கு விண்ணபிப்பவர்கள் 21 வயது நிரம்பியவராகவும், 30 வயதுக்கு உட்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும். சிறப்புப் பணி நியமனம் என்பதால் அதற்குரிய கல்வித் தகுதி கட்டாயம் தேவைப்படும். இத்துடன் கம்ப்யூட்டர் தொடர்புடைய திறனும் பெற்றிருப்பது தேவைப்படும். இந்தப் பதவிக்கு வரும் விண்ணப்பங்களின் அடிப்படையில் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு நேர்காணல் மற்றும் குழு விவாதம் ஆகிய தேர்ச்சி முறைகளை எதிர்கொள்ள வேண்டும்.
மற்றவை:
பாங்க் ஆப் மகாராஷ்டிராவின் சார்டர்டு அக்கவுண்டன்ட் பதவிக்கு ஆன்-லைன் முறையில் முதலில் விண்ணப்பிக்க வேண்டும். இப்போது கிடைக்கும் சலானை வைத்து ஏதாவது ஒரு பாங்க் ஆப் மகாராஷ்டிரா கிளையில் ரூ;300/-ஐ தேர்வுக் கட்டணமாக செலுத்த வேண்டும். இந்தக் கட்டணத்தை இதர வங்கிகளிலிருந்து என்.இ.எப்.டி., முறையிலும் செலுத்தலாம் என்ற போதும் விண்ணப்பிக்கும் முறையில் இதற்கேற்ற மாறுதல்களை கவனமாகக் கையாள வேண்டும். என்.இ.எப்.டி.,யில் பணம் செலுத்துபவர்கள் BANK OF MAHARASHTRA MAIN BRANCH PUNE என்ற பெயரில் 60103218200 என்ற அக்கவுண்ட் எண்ணில் MAHB0001150 என்ற ஐ.எப்.எஸ்.சி., கோடு எண்ணுடன் பணம் செலுத்த வேண்டும். முழுமையான விபரங்களை இந்த வங்கியின் இணையதளத்திற்கு சென்று முதலில் அறிந்து அதன் பின்னரே விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
ஆன்-லைனில் பதிவு செய்ய, கட்டணம் செலுத்த இறுதி நாள் :
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.
4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.