உரத் தயாரிப்புடன் தொடர்புடைய பாக்ட் நிறுவனம் 1943ல் நிறுவப்பட்டது. இது 1947ல் பாக்ட் உத்யோகமண்டல், கேரளா என்ற பெயர் மாற்றம் பெற்றது. உரம், கார்ப்பரோலாக்டம் போன்றவற்றை உற்பத்தி செய்வது, இன்ஜினியரிங் பிரிவில் கன்சல்டன்சி சேவைகளை செய்வது, எக்விப்மெண்ட் பேப்ரிகேஷன் மற்றும் இவற்றை வணிகம் செய்யும் பணிகளில் இந்த நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. இவ்வளவு பிரசித்தி பெற்ற பாக்ட் நிறுவனத்தில் 4 பிரிவுகளில் டெக்னீசியன் மற்றும் டிரேடு அப்ரெண்டிஸ்களைப் பணி நியமனம் செய்வதற்கான அறிவிப்பு வந்துள்ளது.
தேவைகள்:
பாக்ட் நிறுவனத்தின் அப்ரெண்டிஸ் பணி இடங்கள் டெக்னீசியன்(டிப்ளமோ) அப்ரெண்டிஸஸ், டிரேடு அப்ரெண்டிஸஸ் 1 மற்றும் 2, டெக்னீசியன் (வொகேஷனல்) அப்ரெண்டிஸஸ் என்ற நான்கு பிரிவுகளில் நிரப்பப்பட உள்ளன. இவற்றில் விண்ணப்பிக்கும் பிரிவுக்கு ஏற்றபடி உச்ச பட்ச வயது 23 அல்லது 25 ஆக நிர்ணயிக்கப்படுகிறது. டெக்னீசியன் (டிப்ளமோ) அப்ரெண்டிஸஸ் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் மெக்கானிகல், எலக்ட்ரிகல், சிவில், இன்ஸ்ட்ரூமெண்டேஷன், கெமிக்கல், கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆகிய ஏதாவது ஒரு பிரிவில் இன்ஜினியரிங் டிப்ளமோ படிப்பை முடித்திருக்க வேண்டும். டிரேடு அப்ரெண்டிஸஸ் பிரிவுக்கு விண்ணப்பிப்பவர்கள் பிரிவைப் பொறுத்து பி.எஸ்.சி.,யில் இயற்பியல் அல்லது வேதியியல் படிப்பை முடித்திருக்க வேண்டும். ஐ.டி.ஐ., டிரேடு சான்றிதழை பிட்டர், மெஷினிஸ்ட், வெல்டர், எலக்ட்ரீசியன், இன்ஸ்ட்ரூமெண்ட் மெக்கானிக், மெக்கானிக் மோட்டார் வெகிக்கிள், சி.ஓ.பி.ஏ., பிளம்பர் ஆகிய பிரிவுகளில் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். வொகேஷனல் அப்ரெண்டிஸஸ் பிரிவுக்கு அக்கவுண்டன்சி, ஆடிட்டிங், ஆபிஸ் ரெட்டரிஷிப், சிவில் கன்ஸ்ட்ரக்சன் அண்டு மெயிண்டனன்ஸ் படிப்புகளை முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பிற விபரங்கள்:
பாக்ட் நிறுவனத்தின் மேற்கண்ட பதவிகளுக்கு தகுதி உடையவர்கள் நேரடியாக ஒரு எழுத்துத் தேர்வை எதிர்கொள்ள வேண்டும். பிரிவு வாரியாக இந்த எழுத்துத் தேர்வுகள் வரும் ஜனவரி மாதம் 2, 4, 5, 7, 8, 9 மற்றும் 10 ஆம் தேதிகளில் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த எழுத்துத் தேர்வு கொச்சியில் உள்ள பாக்ட் பயிற்சி நிலையத்தில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. முழுமையான விபரங்களை இந்த நிறுவனத்தின் பின்வரும் இணையதளத்தைப் பார்த்து அறியவும்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.
4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.