இந்தியாவில் இயங்கி வரும் பொதுத் துறை வங்கிகளில் சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா எனப்படும் சி.பி.ஐ., முக்கியமான வங்கி. இந்த வங்கிக்கு இந்தியா எங்கும் கிளைகள் இருப்பதுடன் நவீன மய சேவைகளையும், சிறந்த வாடிக்கையாளர் சேவையையும் வழங்கி வருகிறது. இந்த வங்கியில் உள்ள கிளரிக்கல் பிரிவைச் சார்ந்த ஒற்றைச் சாளர இயக்குனர்கள் 3196 பேரைப் பணி நியமனம் செய்வதற்கான அறிவிப்பு வந்துள்ளது. இவற்றில் தமிழ் நாட்டில் மொத்தம் 75 காலி இடங்கள் நிரப்பப்பட உள்ளன.
தேவைகள்: சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியாவின் கிளரிக்கல் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 18 வயது நிரம்பியவராகவும், 28 வயதுக்கு உட்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தின் மூலமாக பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும். பிளஸ் 2 அளவிலான படிப்பைக் குறைந்த பட்சம் 50 சதவிகித மதிப்பெண்களுடன் முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.
பத்தாம் வகுப்பை குறைந்த பட்சம் 60 சதவிகித மதிப்பெண்களுடன் முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.
இவற்றுடன் கடந்த ஆண்டு ஐ.பி.பி.எஸ்., அமைப்பு நடத்திய கிளர்க்குகளுக்கான பொது எழுத்துத் தேர்வை எதிர்கொண்டு அதில் ஒவ்வொரு பிரிவிலும் குறைந்த பட்சம் 24 மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி., முன்னாள் ராணுவத்தினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் பிரிவைச் சார்ந்தவர்கள் ஒவ்வொரு பிரிவிலும் குறைந்த பட்சம் 21 மதிப்பெண்களைப் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
இதர தகவல்கள்: இந்தப் பதவிக்கு வரும் விண்ணப்பங்கள் தகுதி அடிப்படையில் பரிசீலிக்கப்பட்டு நேர்காணலுக்கான அழைப்பு அனுப்பப்படும். நேர்காணல் மற்றும் எழுத்துத் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்ச்சி இருக்கும். சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியாவின் கிளரிக்கல் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் முதலில் சலான் வாயிலாக ரூ.100/-ஐ ஏதாவது ஒரு சென்ட்ரல் பாங்க் கிளையில் செலுத்த வேண்டும். இந்தச் சலானின் விபரங்களை ஆன்-லைனில் விண்ணப்பிக்கும் போது தவறாமல் கொடுக்க வேண்டும். முழுமையான தகவல்களை இந்த வங்கியின் இணையதளத்தைப் பார்த்து அறியவும். கட்டணம் செலுத்த, ஆன்-லைனில் பதிவு செய்ய இறுதி நாள் : 07.01.2013
இணையதள முகவரி: www.centralbankofindia.co.in
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.