Advertisement
நோக்கியா 112
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

24 டிச
2012
00:00

குறைந்த விலை மொபைல் போன்களில் சிறந்ததாக, கூடுதல் வசதிகள் கொண்டதாகத் தேடினால், நம் கண்களில் தட்டுப்படும் போன்களில், நோக்கியா 112 ஒன்றாகும். இரண்டு அலைவரிசைகளில் இயங்கும் இந்த போனில் இரண்டு சிம்களை இயக்கலாம். இரண்டு சிம்களில், ஒன்று மினி சிம் ஆக இருக்கும். இதன் பரிமாணம் 110.4x46.9x15.4 மிமீ. எடை 86 கிராம்.
பார் டைப் வடிவில் உள்ளது இந்த மொபைல். 1.8 அங்குல அகலத்தில், டி.எப்.டி. திரை கிடைக்கிறது. லவுட் ஸ்பீக்கர், 3.5 மிமீ ஆடியோ ஜாக், 32 ஜிபி வரை மெமரியை அதிகப்படுத்தும் வசதி கொண்ட மைக்ரோ எஸ்.டி. கார்ட் ஸ்லாட், 16 எம்.பி. உள் நினைவகம், ஜி.பி.ஆர்.எஸ்., எட்ஜ் தொழில் நுட்பங்கள், புளுடூத், 0.3 எம்பி திறன் கொண்ட கேமரா, வீடியோ பதிவு மற்றும் இயக்கம், எஸ்.எம்.எஸ்., எம்.எம்.எஸ்., இமெயில், இன்ஸ்டண்ட் மெசஞ்சர் வசதி, எம்பி3 பிளேயர், ஆர்கனைசர், வாய்ஸ் மெமோ ஆகிய வசதிகளும் கிடைக்கின்றன. இந்த மொபைலில் 1400 mAh திறன் கொண்ட பேட்டரி தரப்பட்டுள்ளது. இது 840 மணி நேரம் மின் சக்தியைத் தக்க வைக்கிறது. 14 மணி நேரம் தொடர்ந்து பேசும் சக்தியைத் தருகிறது. பாடல்களை 27 மணி நேரம் தொடர்ந்து இயக்குகிறது. இதன் கதிர்வீச்சு 1.30 W/kg என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் அதிக பட்ச சில்லரை விலை ரூ. 2,500 மட்டுமே.

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.