விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை அதற்கான கட்டணம் செலுத்திப் பெறாமல், நகலெடுத்து திருட்டுத் தனமாகத் தாங்கள் விற்பனை செய்திடும் கம்ப்யூட்டர்களில் பதிந்து தரும் வழக்கத்தினைப் பல சீன நிறுவனங்கள் மேற்கொண்டிருப்பதாக, அண்மையில் மைக்ரோசாப்ட் சீனாவில் தெரிவித்தது. பதினாறு நிறுவனங்கள் இவ்வாறு வர்த்தக ரீதியாக செயல்பட்டு வருகின்றன.
இவர்களுடன் தனிப்பட்ட முறையில் பல முறை மைக்ரோசாப்ட் பேச்சு வார்த்தை நடத்தி, ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்குக் கட்டணம் செலுத்தி உரிமம் பெறுமாறு கேட்டுக் கொண்டுள்ளது. ஆனால், அந்த நிறுவனங்கள் தொடர்ந்து, உரிமம் பெறாத ஆப்பரேட்டிங் சிஸ்டங்களையே பயன்படுத்தி வருகின்றன. இதனால், வெறுப்படைந்த மைக்ரோசாப்ட் நிறுவனம், குறிப்பிட்ட நாள் வரைக்குமான எச்சரிக்கையினைத் தந்துவிட்டு, இவ்வாறு கட்டணம் செலுத்தாமல், ஆப்பரேட்டிங் சிஸ்டத்தைப் பதிந்து தருபவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப் போவதாக அறிவித்துள்ளது.
சென்ற 2011 ஆம் ஆண்டில், மைக்ரோசாப்ட் தலைமை நிர்வாகி ஸ்டீவ் பால்மர், அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா மற்றும் சீன நாட்டு தலைவர் ஹு ஜின்ட்டோ ஆகியோரைச் சந்தித்து, இந்த பைரசி குறித்து ஆலோசனை நடத்தினார். அப்போது பத்து கம்ப்யூட்டர்களில் ஒன்றில்தான், கட்டணம் செலுத்தி வாங்கப்பட்ட சிஸ்டம் இருப்பதாகக் குறிப்பிட்டார்.
மைக்ரோசாப்ட் நிறுவனமே, பல கம்ப்யூட்டர்களை சீனாவில் வாங்கிப் பார்த்த போது 91 சதவிகித கம்ப்யூட்டர்களில் உரிமம் பெற்ற சிஸ்டம் இல்லாததனைக் கண்டதாகத் தெரிவித்தார். திருட்டு நகல் பதிப்புகளை பயன்படுத்துவதால், இவை அனைத்திலும் மால்வேர் எனப்படும் கெடுதல் விளைவிக்கும் புரோகிராம்கள் இருக்கின்றன என்றும், இவை கம்ப்யூட்டர் செயல்பாட்டிற்கு உகந்த சூழ்நிலையைத் தராது என்றும் குறிப்பிட்டார்.
மேலும் குறிப்பிடுகையில், தற்போது வெளியிடப்பட்டிருக்கும் விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டம், திருட்டு நகல் எடுக்க இயலாத வகையில் நவீன தொழில் நுட்பம் மூலம் வடிவமைக்கப் பட்டிருந்தாலும், இதனையும் நகலெடுக்க கூடுதல் திறமையுள்ளவர்கள் இருப்பதாகக் குறிப்பிட்டார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.