ஆப்பிள் சாதனங்களில் தமிழ் மட்டுமல்ல, வேறு சில இந்திய மொழிகளும் பயன்படுத்த செல்லினம் தரும் நிறுவனம் புரோகிராம் தருகிறது எனப் படித்தேன். உங்கள் கட்டுரையில் அது குறித்த குறிப்பு இல்லையே.
பேரா. என். சேகர் ராஜ், காரைக்குடி.
செல்லினம் தமிழ் பார்க்க, படிக்க மிகவும் அழகாக உள்ளது. உள்ளிடுதலும் மிக எளிதாகக் கிடைக்கிறது. இது போல சேவைகளை இலவசமாகத் தருபவர்கள் தான், தமிழுக்குச் சேவை செய்பவர்கள்.
ஆ.நன்மாறன், சென்னை.
வாட்ஸ் அப்ளிகேஷன் பன்னாட்டளவில் நண்பர்களை இணைக்கிறது என்பதெல்லாம் சரி. இது இயங்கும் சாதனங்களை எல்லாரும் வாங்க முடியுமா?
என். கிரீஷ் குமார், காரைக்குடி.
எந்த நேரத்திலும், கம்ப்யூட்டர், இன்டர்நெட் பிரவுசர் என எதன் உதவியும் இல்லாமல், எங்கோ இருக்கும் நண்பர்களுடன் விண்டோ மூலம் பேசுவது என்ன ஒரு அருமையான அனுபவம். உங்கள் குறிப்புகளும் ஒரு கவிதையாக இருந்தது.
சி.கே. குமாரவேல், கோவை.
பாப் அப் டிப்ஸ் அனைத்தும் விண்டோ ஸ்கிரீன் டிப்ஸ்களே. பெயர்களினால், அவற்றின் தன்மையில் எந்த வேறுபாடும் பெரிய அளவில் இல்லையே.
எஸ். ஸ்ரீனிவாஸ், திருவையாறு.
ஐ பேட் அப்ளிகேஷன் புரோகிராம்கள் பற்றிய கட்டுரை விரிவாக இருந்தது. ஐபேட் மினி குறித்தும், அதன் செயல்பாடுகள் குறித்தும் ஒரு விரிவான கட்டுரை தரவும்.
எம். சுந்தர், சென்னை.
மொபைல் போன் மட்டுமின்றி, டேப்ளட் மற்றும் லேப் டாப் கம்ப்யூட்டர் விற்பனையில் நிச்சயம் சாம்சங் சாதனை படைக்கும். வாடிக்கையாளர்கள் சேவை மையங்கள் அதிக எண்ணிக்கையில் தொடங்கும் எந்த ஒரு நிறுவனமும், வர்த்தக ரீதியாக வெற்றி பெறும்.
டாக்டர் சே. பாண்டியன், மதுரை.
மொபைல் திரையை மடிக்கலாமா? வேறு எங்கும் படிக்காத செய்தி இது. புழக்கத்திற்கு வந்தால், பாதுகாப்பாக மொபைல் போனைக் கவலையுடன் எடுத்துக் கொண்டு போகத் தேவை இல்லை அல்லவா?
டி, ஸ்ருதி பிரசன்னா, சென்னை.
கேள்வி பதில் பகுதியில், நீங்கள் வரிசைப்படுத்தியிருக்கும் 2012 டிஜிட்டல் சாதனங்கள் குறித்த செய்திகள் நூற்றுக்கு நூறு உண்மை. ஐ பேட் மினி பயன்படுத்திய சந்தோஷம், உங்கள் சொற்களில் குதிக்கிறது. எனக்கும் அதே உணர்வுதான். பயன் அடிப்படையில் தகவல்களைத் தரும் உங்களுக்கு என் பாராட்டுக்களும் நன்றியும்.
சி.கல்பனா ஈஸ்வரன், கோவை.
பள்ளி நாட்களில் இருந்து பயன்படுத்தும் லிப்கோ டிக்ஷனரி இப்போது கையடக்க சாதனத்தில் கிடைக்கிறதா? நம்பவே முடியவில்லை. இதற்காகவே, ஆப்பிள் நிறுவன மொபைல் சாதனம் ஒன்றை வாங்கிப் பயன்படுத்தலாம்.
சு. திருச்செல்வன்,புதுச்சேரி.
காரட் குறித்த தகவல் களஞ்சியமாய் உள்ளது, நீங்கள் காட்டிய இணைய தளம். மாணவர்கள் அனைவரும் இந்த தகவல்களுக்காக இதனைப் பார்த்துப் பயனடைய வேண்டும்.
எஸ்.சத்தீஷ், திருப்பூர்.
இதுவரை கண்ட்ரோல் + ஆல்ட் + டெல் கீகளை மட்டுமே பயன்படுத்தினோம். புதிய ஷார்ட் கட் கீகளைச் சுட்டிக் காட்டியது, இன்னும் இது போல பலவற்றை நாம் அறியாமல் இருக்கிறோமோ என்ற சந்தேகத்தினை ஏற்படுத்துகிறது.
சி. அருள்தாஸ், காரைக்கால்.
காரட்டிற்கு மியூசியமா? தலைப்பைப் படிக்கையில் இருந்த வேடிக்கை, தகவல்களைப் படிக்கையில், மிகவும் கவனமாகப் பார்த்து அறிய வேண்டிய ஒன்றாகக் காட்டியது. இன்னும் பல உணவுப் பொருட்களின் இணைய தளங்கள் குறித்து எழுதவும்.
ஆர். ஜே. பிரகதீஷ் குமார், சென்னை.
விண்ஸிப் தொடங்கிய காலம் தொட்டு, கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்களின் நல்ல நண்பனாக இருந்து வருகிறது. விண்டோஸ் 8 க்கான தன் தொகுப்பினை வெளியிட்டதன் மூலம், இதனை நிரூபித்துள்ளது.
எஸ். சுந்தர், சிவகாசி.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.